ஆயிரம் தெய்வங்கள் – 7

பூர்வீக ஆரிய மதம் – அதாவது இஸ்லாம் வேரூன்றுவதற்கு முன்பு நிலவிய மதக்கருத்தில் மஸ்தாயிசத்தின் இருமைக்கருத்து சிறப்பானது. தெய்வங்கள் ஆயிரமாயிருந்தாலும் நல்ல தெய்வங்கள் தேவர்களாகவும், கெட்ட தெய்வங்கள் சாத்தான்களாகவும் மதிக்கப்பட்டனர். சுரர்-அசுரர் என்ற இருமை நிலையில் யார் சுரர்- யார் அசுரர்- என்று வேற்றுமைப்படுத்துவது கடினம். அசுரர் என்ற சொல் அநேகமாக அருர் மஸ்தாவையே குறித்திருக்கலாம். “அருர்“ திரிந்து “அசுர்“ ஆயிருக்கலாம். அரர் என்பவர் சுரா என்ற மது அருந்துபவர்கள் என்றும் பொருள் தரலாம், அசுரர் அம்மதுப்பழக்கத்திற்கு ஆளாகாதவராகவும் இருக்கலாம். அரர் என்பவர் தேவர். அசுரர் என்பவர் தேவரைவிட பலசாலி என்றும் பொருள் கொள்ளலாம். ஆரிய தேசமாகிய ஈரானிருந்து இந்தியாவுக்குப் பிற்கால இறக்குமதியாகத் தோன்றும் புராணங்களில் – சுரர் நல்லவர் என்றும் அசுரர் யீவர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சுரர் நல்ல தெய்வம் அசுரர் கெட்ட தெய்வம் என்று முடிவு செய்தாலும் கூட சுரர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவனாயிருப்பவன் அகுர் மஜ்தா. நன்மையும் அவனே, தீமையும் அவனே. இருப்பினும் கூட நல்ல தெய்வங்கள் அகுர் மஜ்தாவை அண்டியிருந்தன. கெட்ட தெய்வங்களான சாத்தான்கள் தங்கள் சொந்த பலத்தை வைத்து இயங்கின. நல்ல தெய்வங்களுக்குக் கெட்ட தெய்வங்களால் ஏற்படக்கூடிய கேடுகளைப் பற்றிய முன்னறிவு கிடைத்துப் போராடின. இந்த சாத்தான்களை எந்த நேரத்தில் எப்பஐ அடக்க வேண்டும் என்று முன்கூட்டியே அறிந்து செயல்பட்ட நல்லவைகளை நிலைநாட்டின.

ஜராதுஷ்டீரர் தோற்றுவித்த இருமைப்பண்பாடு மஸ்தாயிசம் எனப்பட்டது. இதில் ஜராதுஷ்டிரர் அதிக அளவில் சடங்குகளுக்கு மரியாதை வழங்கினார். இறைவனைக் கேள்வி கேட்பவனும், எதிர்பவனும், தீயானுமாகிய அங்கீரா மெயின்யூ (ஆங்காரகன் என்ற செவ்வாய்-) அஹிர்மானும் ஒரு வகையில் சகோதரர்களே. தருமனும் துரியோதனம் போல. இவர்களைத் தோற்றுவித்தவன் ஸீர்வான் (). ஸீர்வான் என்றால் காலம் என்று பொருள். நல்ல நேரமும் கெட்ட நேரமும் காலத்தின் பிள்ளைகள். ஸீர்வான் பிள்ளைவரம் வேண்டி ஆயிரம் ஆண்டுகள் யாகம் புரிந்து கடுந்தவம் செய்தான். ஸீர்வானுக்கு சந்தேகம் வந்தது. தான் செய்யும் யாகத்தால் என்ன பலன் வரப்போகிறது என்றும் நொந்து கொண்டான். ஸீர்வானின் நோய் அஹிர்மான் ஆனது. ஸீர்வானின் தவப்பண்பு அஹீர் மஜ்தாவானது. கருவில் இருந்த போதே முதலில் பிறப்பவனே உலகை ஆள்வான், சர்வவல்மையுள்ளவனாயிருப்பான் என்ற எண்ணத்தில் தாலீன முதலில் பிறக்க வேண்டும் என்று கருவில் உள்ளபோதே அஹிர்மான் எதிர்த்தான். அகுர்மஸ்தா முதலில் பிறக்கக்கூடாது என்று விரும்பினான். ஆகவே ஸீர்வான் முதல் நேரத்தை அஹீர்மானுக்கு ஒதுக்கி அவனடைய அழிவையும் குறித்து அஹீர்மஸ்தாவின் இறுதி வெற்றியையும் கணித்துவிட்டார். தவத்தின் பயன் வென்றது. சந்தேகம் என்ற பூதம் அழிந்தது.

இன்று உலகில் நிலவும் எல்லா மதங்களிலும் மேற்படியான கதைக்கருவில் உள்ள தத்துவம் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. பிற்கால மரபில் தோன்றிய இஸ்லாம், கிருத்துவம், ஆகியவற்றிலும் தெய்வம்-சாத்தான் சண்டை உள்ளது. இது ஒரு புறம் இருக்க தெய்வத்தின் உருவமில்லாத தோற்றம் பற்றிய புனைவு -அதாவத காலம் (ஸீர்வான் புராணமே காலத்தின் உருவகம்) ரிக்வேதத்திலிருந்து ஜராதுஷ்டிரர் ஆட்கொண்டிருக்கிறார். தெய்வத்தின் குரலை மகரிஷிகளால் – தவத்தின் பயனால் கேட்க முடியுமே தவிர தரிசனம் இயலாது என்ற கருத்து ரிக்வேதத்தில் உள்ளது. செவிவழியாக வந்து பிற்கால மரபில் எழுத்தானது வேதம். ரிக்வேதத்தில் உள்ள புருஷ சுக்தத்திற்கும் ஜராதுண்டிரரின் அவஸ்தாவுக்கும் தொடர்பு உண்டு என்று புராணவியல் அறிஞர்களின் கருத்தில் வியப்பேதும் இல்லை. ஜராதுஷ்டிரரின் காலத்திற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே வேதகால ஆரியர்கள் (கி.மு. 5000-6000) இந்தியாவில் உள்ள சிந்து நதிக்கரையில் முதலில் குடியேறிப் பின்னர் கங்கைக்கரைக்குக் குடியேறினர். ஆரியக்குடியேற்றம் இமயமலைப் பள்ளதாக்குகளில் விரவிப் பரவியது. இந்திய ஆர்யர்களின் பூர்வீகத் தோற்றம் ஈரான் என்பதால் இந்தியாவில் இயற்றப்பட்ட வைதீக – புராண-காவியங்களில் பாரசீகக் கதைகளின் தாக்கம் இருக்கத்தானே செய்யும். ஜராதுஷ்டிரர் யாகத்தீயின் வலிமையை உணர்ந்தது போல் பிராமண-ஷத்திரிய ரிஷிகளும் தரிசிக்க முடியாதவனை தரிசனம் செய்யும் மார்க்கமே வேள்வி என்று எண்ணினர்.

மஸ்தாயிசத்தின் அடிப்படைக் கருத்தில் இந்த உலகம் அளவில்லாதது. கங்கு கரை காணாத கடல் போல் அளக்க முடியாதது. மனிதன் ஒரு சிறு துளி. இந்தியக் கதைகளில் வாமனன் கதை இதை நிருபிக்கும். அகுர் மஜ்தா-வின் உடல்தான் உலகம். ஆகாயமே அவன் தலை. பூமியே அவன் பாதம். அவனது கண்ணீரே சமுத்திரம். அவனது முடியே பயிர்- பச்சை, செடி, கொடி, மரம். அவனது வலக்கரமே காளை. அவனது புத்தியே தீ. யாகத்தீ (ஆன்மாவின் உடல்). அகம்-புறம். பருப்பொருள் – ஆன்மா என்ற இருமைப்பண்பு கெதாஹ் – மெனோக் என்று கொள்ளப்படுகிறத. இக்கருத்தைப்போல் ஒன்று ரிக்வேதத்தில் உண்டு.

தம் யஞ்ஞம் பஹிர்ஷி ப்ரௌக்ஷன்
புருஷம் ஜாதமக்ரத
தேன தேவா அயஜந்த சாத்யா ரிஷ்யஸ்சயே
தஸ்மாத்யஞ்ஞாத்ஸவ்ருஹீத ஸம்பிருதம் ப்ரஷ்தா4யம்
பசுந்தாம்ஸ் சக்ரே வாயவ்யான ஆரண்யான் க்ராம்யாஸ்சயே
தஸ்மாத்யஞ்ஞாத்ஸ வ்ருஹாத் ரிச ஸாமானி ஜஞ்ஞிரே
சந்தாம்ஸி ஜஞ்ஞிரே த1மாத் யஜீ1தமாத் ஜஸத
தஸ்மாதஸ்வா ஆஜாயந்த் யேகே சோப யாதத
கோவா ஹ ஜஜிரே தஸ்மாத் மஙஸமாஜ்ஜாதா ஆஜாவய
யத்புருஷம் வ்யதது கதிதா வ்யகல்பயன்
முகம் கிமஸ்ய கௌபாஹீ காஊரு பாமதா உச்யதே
ப்ராஹ்மணோ அஸ்ய முகமாஸ்த் பாஹீ ராஜன்ய கிருத
ஊருததஸ்ய யத் வைஸ்ய பததா சூத்ரோ அஜாயத
சந்திமா மனஸோ ஜாதஸ சக்ஷோ சூர்யோ அஜாயத
முகாததிந்த்ர ஸ்சாக்னிஸ்ச ப்ரணாத் வாயுரஜாயத
நாப்யா ஆசீதம் தரிக்ஷம்
சீர்ஷ்ணோ த் யள ஸம்வார்த்தித
பத்தாம் பூமிதிர்ஸ ஸ்ரோத்ராத்
தாதா லோகாம் அகல்பயன்

ஸப்தாஸ்யா ஸந்பரித்யஸ்
த்ரி ஸப்த ஸமித க்ரதா
தேவா யத்ஞ்ஞம் தன்வானா
அபத் நன் புருஷம் பசும்

பொருள்

இறைவன் செய்தான் புனித வேள்வி
சேர்ந்தன புனித நெய்த்துளிகள்
விளைந்தன மாருதங்கள், விளைந்தன காடுகள், கிராமங்கள்
இறைவன் செய்தான் பிரம்ம யக்ஞம்
விளைந்தன அருட்பாசுரங்கள்
விளைந்தன சந்தங்கள் விளைந்தன புனித மந்திரங்கள்
இறைவன் செய்தான் பூதயஞ்ம்
குதிரைகள் பிறந்தன – குதிரையுடன் இருபல்வரிசைப்
பிராணிகள் பிறந்தன. ஆடுகள் பிறந்தன.
இணைந்த உறுப்புகளாக புருஷன் நின்றபோது
உறுப்புகள் அமைந்த குணம் என்ன?
வாய் எப்படி? தோள் எப்படி? தொடை எப்படி?
கால் எப்படி? குணம் என்ன?
சத்தியத்தின் இலக்கணமானது வாய்
சுத்தவீரனின் இலக்கணமானது தோள்கள்
உற்பத்தியின் இலக்கணமானது தொடைகள்
உழைப்பின் இலக்கணமானது கால்கள்.

(குறிப்பு- புருஷ சுத்கத்தின் மேற்படி நான்கு வரிகளுக்கு நாத்திகர்கள் தவறான விளக்கம் செய்துள்ளர். பிராமனன் தலையிலிருந்து பிறந்தான். க்ஷத்திரியன் தோள்களிலிருந்தும் வைசியன் தொடையிலிருந்தும் சூத்திரன் காலிலிருந்தும் பிறந்தனர். சொல்லப்போனால் ரிக்வேதகாலத்தில் சதுர்வர்ணம் பிரிபடவில்லை. சாதி அமைப்பு, தீண்டாமை பற்றி ரிக்வேதத்தில் இல்லை. மனுஸ்மிருதியில்தான் நான்கு வர்ணம் பேசப்படுகிறது.)

புருஷன் மனத்திலிருந்து உதித்தது நிலா
புருஷன் கண்ணிலிருந்து உதித்தது சூரியன்
புருஷன் வாயிலிருந்து உதித்தது மின்னல் தீ
புருஷன் பிராணணில் உதித்தது காற்று
புருஷன் தொப்புள் வெட்டவெளி
புருஷன் தலையே வானம்
புருஷன் பாதம் நிலம்
புருஷன் செவிகள் திசைகள்
இவ்வாறு இறைவன் உலகைச் செப்பனிட்டான்.

ஸோராவாஸ்தவர் (ஜராதுஷ்டிரர்) உருவாக்கிய மஸ்தாயிசத்திலிருந்து பிரிந்த மித்ராயிசம் அதாவது மித்ரா வழிபாட்டுக்கும் ரிக்வேத மித்ராவுக்கும் தொடர்பு உண்டு. வேதங்களில் வருணனம் மித்ரனம் இணைந்து அழைக்கப்படுகின்றனர். தேவர்களில் பலம் மிகுந்த தெய்வம் வருணன். பகலில் மித்ரனாகவும் இரவில் வருணனாகவும் இருப்பான். மித்ரன் காணக்கூடியவன் அல்ல. வருணன் அபூர்வமாகக் காணக்கூடியவன். ஆயிரம் கதவுகள் கொண்ட சொர்க்கத்தில் வாழும் வருணன் கூரிய பார்வையை உடையவன். சூரியனுக்கு ஒளியும், சொர்க்கத்திற்கு வெளிச்சமும் வாங்கும் வருணன் விடும் மூச்சு காற்றானது. மழை, இடி, மின்னல் வழங்கி நதிகளை ஓடச்செய்கிறான்… என்றெல்லாம் ரிக்வேதத்தில் குறிப்புகள் உண்டு. வருணனே பாரசீக மித்ரா என்றால் அஹீர்மஸ்தா யார்? இந்திரனுக்கு முன்பு வருணவழிபாடும், வருணவழிபாட்டுக்கு முன் தையஸ் பித்ரு- பிருத்வி வழிபாடும் இருந்தது என்றும் கி.மு. ஆறாம் நுõற்றாண்டில் வேதங்களில் பெருமையாகப் பேசப்படாத கிருஷ்ண வழிபாடு இதாதெய்வங்களை கிருஷ்ணக்கு எடுபிடிகளாக்கிவிட்டன.

பிரபஞ்சம் தோன்றிய புதிதில்… இவ்வாறு தொடங்குவதும் சரியல்ல. பனிக்கட்டிக் காலத்திற்குப்பின் மெள்ள மெள்ள இந்த பூமி மனிதர்கள் விவசாயம் செய்து பிழைக்கும் நிலைக்கு மாறியபோது… நதிப்புற நாகரிகமும் முடியாட்சியும் தொடங்கிய காலகட்டத்தில் ஆரியர்கள், இரானியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்லாவ் போன்ற பலமொழிக்கூட்டங்களின் வழிபாட்டு முறைகள் புராணக்கதைகள் ஒன்றாயிருந்தன. வானத்தையும் பூமியையும் கடவுளாக்கி வழிபட்ட நிலையில் இந்திய ஆரியர்கள் தையாஸ் பித்ரு (வானம்) பிருத்வி (பூமி) ஆகியோரை வழங்கியதைப்போல் எகிப்து, மெசப்பட்டோமியா கிரேக்க – ரோம் சாம்ராஜ்ஜியங்களிலும் அதே புராணக்கதைகள் உண்டு. வைதீக தையாஸ் பித்ரர் கிரேக்க ஸியஸ்-பாதர் ரோமானிய ஜீ-பித்தர் (ஜீபிட்டர்) என்று போலவே பின்னர் இந்திய ஆரியரின் வருணமித்ரர் ஈரானிய மித்ரராகவும் ரோமானிய மித்ரராகவும் எண்ணப்படுகிறது. பூர்வீக ஆரிய தேசம் மேற்கே இத்தாலிவரை நீணடு சென்றுள்ளத. எனினும், ஆரியத்தின் மையமான ஈரானிலும் ஈராக்கிலும் பல அரபுநாடுகளிலும் பூர்வீக தெய்வக்கூட்டங்கள் உருவாக்கிய சிந்தனைகளின் எல்லை இஸ்லாமாக ஒரு தத்துவம் பிறந்ததுபோல் யூதராஜ்ஜியத்தில் கிருத்தவமாக ஒரு தத்துவம் தோன்றி ரோமில் குடிகொண்டது. இந்தியாவில் வேத உபநிடதங்களாகவும், சைவ-சமணமாகவும், புத்தமதமாகவும் உயர்ந்தது. எனினும் மித்ரா வழிபாடு இந்தியா, ஈரான், ரோம் வரை வேரூன்றியிருப்பினும் ? வித்தியாசங்கள் உண்டு. ஜராதுஷ்டிரமஜ்தாயிச ஆசாரம் மித்ரா வழிபாட்டைப் பழித்துரைப்பினும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (இதாலி) கிருத்துவ மதம் தோன்றிய காலத்திலிருந்து வேர்விட்டது. அப்படிப்பட்ட மித்ர புராணம் என்ன?

Bas-relief de l'investiture d'Ardashir II - Mithra on the left

ஈரானிய புராண மரபுப்படி மித்ரா ஒரு அவதாரம். மீண்டும் உலகைப் புத்துயிர் பெறச் செய்யவே கடவுளுக்குக் காவலனாயிருந்த காளையை கடவுள் விருப்பப்படி கொன்றதாக மரபு. சிரோஷீடனும், இறப்பின் தெய்வமான ரஷ்ணுவுடனும் கூட்டாட்சி செய்த மித்ரா, அங்கும் ஒளியின் கடவுள். பகல் தெய்வம். இந்திய சூரியனைப்போல் வெள்ளைக் குதிரை ரதத்தில் பவனி வருபவர். போர் தெய்வமும் மித்ரனே. அகுராவுடன் சேர்த்து உயர்நிலையில் பூஜிக்கப்பட்ட மித்ரா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். பொய்மையை எதிர்த்துப் போராடுபவன். பொய்மையின் குறியீடாக பலிபியிடப்பட்ட மாடு. பலியான மாட்டின் வாலாக மக்காச்சோளக் கொண்டை கொல்லப்பட்ட மாட்டின் வாலாக மக்காச்சோளக் கொண்டை கொல்லப்பட்ட மாட்டின் ரத்தத்தை நக்கும் நாயுடன் ஒரு பாம்பு. மாட்டின் விதைகளைக் கொட்டும் தேள் எல்லாம் சிற்பங்கரையுள்ளன. அத்தகைய சிற்பத்தில் இரண்டு இடையர்களின் உருவம் உண்டு. ஒருவர் தீபத்தைத் தூக்கிப் பிடிக்கிறார். அது மித்ராவின் பகல்வேடம். ஒருவர் தீபத்தைத் தாழ்த்திப்பிடிக்கிறார். அது மித்ராவின் இரவு வேடம். வானில் தெரியும் சப்தரிஷி மண்டலமாகவும் மித்ரா எண்ணப்படுகிறார். அந்த ஏழு நட்சத்திரங்களாவன, கோராக்ஸ், நைம்பஸ், மைல்ஸ், லியோ, பெர்சஸ், ஹெலியோட்ரோமோஸ், பித்ரஸ்.

ரோமாபுரி ராஜ்ஜிய எல்லைகளில் மித்ரா வழிபாட்டை எடுத்துக்காட்டும் சிற்பங்களில் மித்ராவின் உருவச்சிலை நிர்வாணமாயுள்ளது. சிங்கமாக தலைக் கிரீடமும் கழுத்தில் சுற்றப்பட்ட பாம்பு மார்பிலும் தழுவியபடி உள்ளது. கிரேக்க தேசத்து குரோனசாக (ஸீயஸ்லின் தந்தை-சனி பகவான்) எண்ணப்படுகிறார்.

பல முகங்களில் பன்னாடுகளில் மித்ரா வழிபட்டாலும் கூட முழுக்க முழுக்க மித்ரா ஈரானிய தெய்வம். மித்ரா வழிபாட்டுக்குரிய சடங்குகள் வீரத்தைக் குறிப்பதாகவும் உள்ளன. போர்க்கடவுளாகக் கருதப்படுகிறது. ஈரானில் மித்ராவை மஸ்தாவின் தந்தையான ஸீர்வானாக எண்ணுகின்றனர்.

மஸ்தாயிசம், மித்ராயிசம் போல் இருமைப்பண்பை எடுத்துக்காட்டும் மனிக்கேயிசமும் பாரசீகமும் வழங்கிய தத்துவம். ஏசுவின் அவதாரத்திற்குப் பின் கி.பி.3-ம் நூற்றாண்டில் தோன்றிய மனிக்கேயிசம் மஸ்தாயிசத்தைச் செழுமைப்படுத்தி வளர்ந்தது. இந்தக் கொள்கையில் ஆசைக்குக் காரணமான பொருளை விரும்புவதே தீமையின் அறிகுறியாகவும் எண்ணப்பட்டது. சத்தியம், ஒளி, ஆன்மா நல்லவை. இருள், உடல், பொன், பொருள் எல்லாம் தீயவை. அநேகமாக கிருத்துவர்களாலும் இஸ்லாமியர்களாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிக்கேயிசம் இந்தியாவிலிருந்து மேற்குநோக்கிப் பரவிய புத்தமதத் தாக்கத்தாலும் இருக்கலாம் என்று நலம் தத்துவம் பேசினாலும் உலக வரலாற்றில் அன்றும் இன்றும் வன்முறைகளின் தளமாக ஆரிய தேசம் விளங்கி வந்துள்ளது. ஆரிய தேசக்கதையை இன்னம் பின்னோக்கி, மெசப்பட்டோமிய வழிபாடுகளை இனி நாம் கவனிக்கலாம்.

(தொடரும்)