எஸ்.வி.ராமகிருஷ்ணன்

dsc01419

ஹைதராபாதில் வசித்துவந்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் நேற்று (09-02-2011) காலை காலமானார். சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சொல்வனத்தின் வளர்ச்சியிலும், தரத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எஸ்.வி.ராமகிருஷ்ணன் பல எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவின் மூலம் தமிழ் சிந்தனையுலகம் ஒரு தேர்ந்த எழுத்தாளரை இழந்திருக்கிறது. அக்கறை மிகுந்த நண்பரையும், வழிகாட்டியையும் இழந்த வகையில் சொல்வனத்துக்கு இவர் மறைவு அதையும் தாண்டிய பேரிழப்பாகும்.

‘அது அந்தக் காலம்’, ‘வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்’ ஆகிய புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருக்கு மனைவி, இரு மகள்கள் உண்டு.

நண்பர், எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள் மறைவுக்கு சொல்வனத்தின் அஞ்சலிகள்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் – ஒரு தொகுப்பு

(புகைப்படங்கள்: வெங்கடாசலம்)