கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி

போலிஷ் திரைப்பட இயக்குநர் கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி (Krzysztof Kieślowski) தனது திரைப்படங்கள் மூலமாக உலகத்தை கவர்ந்தவர். இவரது வண்ணங்கள்(Colors) திரைத்-தொடர், வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை திரைப்படங்களில் அழகியலையும், வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களை ஒரு புதிய தளத்திற்கு கொண்டு சென்றவர். கம்யூனிச போலாந்தில் திரைத்துறையினர் சந்தித்த கட்டுப்பாடுகளை அறிந்து கொள்ளும் விதமாக, கீஸ்லோஸ்கி தனக்கு நேர்ந்த அனுபவத்தை இங்கே பகிர்கிறார்.