வாசகர் மறுமொழி

theatre

அரவக்கோன் எழுதிவரும் தொடர் புதிய ஓவியர்களையும், ஓவியங்களையும் அறிமுகப்படுத்துகிறது. நன்றி. வாசிப்புத்தன்மையைக் கூட்டும்படி சிறு சிறு சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். இருந்தாலும் ஒரு ஓவிய மாணவனாக எனக்கு இத்தொடர் நல்ல அறிமுகமாக இருக்கிறது.

அன்புடன்,
கே.ரவி

யாரைய்யா இந்த டிசம்பர் நாற்காலிகள் எழுதும் ராஜாராமன்? அமர்க்களமாக எழுதுகிறாரே! மிகவும் ரசித்து படித்தேன். தகர பாலத்தின் மேலே குதிரைகள் ஓடுகிறமாதிரி பயங்கர அப்பளாஸ் சத்தம். நான் தான் கை தட்டுகிறேன். நீண்ட நாள் கழித்து ரசித்த கச்சேரி அனுபவம்.

வாழ்த்துக்கள்.
லக்ஷ்மிநாராயணன்

சொல்வனத்தில் சென்ற இதழில் பிராந்து சிறுகதை படித்தேன். ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மீண்டுமொரு முறை ரசித்துப் படிக்கும்படி தந்ததற்கு நன்றி. இந்த சிறுகதைத் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா? சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் இப்போதெல்லாம் இலக்கியத்துக்கு நிறைய முக்கியத்துவம் தருவதும் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், வெ.சா, ஆ.மாதவன் போன்றவர்களின் படைப்புகளை அடிக்கடி படிக்க முடிவதும் சொல்வனத்தின் தகுதியை வெகுவாக உயர்த்துகிறது. அதிலும் இந்த இதழில் வெளிவந்த வெ.சாவின் கட்டுரை படு சூடான ஒன்று. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு வெ.சாவிடம் படிக்க நேர்ந்த அதே அறச்சீற்றம் இப்போதும் இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

–கண்ணன்.

அன்புள்ள கண்ணன்,

பிராந்து சிறுகதைத்தொகுப்பு விஜயா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் உடுமலை.காம் அரங்கில் கிடைக்கிறது.

அன்புடன்,
ஆசிரியர்