தமிழ் சூழலின் ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை நாம் கருதமுடியும். புத்தக விற்பனையை மக்களின் நுகர்வு கலாச்சாரம் பெருமளவில் முடிவு செய்கிறது. அரசியல், சமூகம், வரலாறு உள்ளிட்ட புத்தகங்களுடன் ஒப்பிடுகையில் சமையல், சுயமுன்னேற்றம் குறித்த புத்தகங்களே அதிக அளவில் விற்பனையாகின்றன. தீவிர சிந்தனையாளர்களுக்கு சலிப்பு தரக்கூடிய தகவல் இது. இருந்தும், இணையத்தின் தாக்கமும், மின் புத்தகங்களின் வருகையும் மக்களை அச்சுப் புத்தகங்களிலிருந்து பெருமளவு விலக்கிவிடவில்லை என்ற தகவல் ஆசுவாசம் அளிக்கக்கூடியதே. இங்கு மின் புத்தகங்கள் சந்தை குறித்த ஒரு பேச்சு. கிண்டில்(Kindle) போன்ற சாதனங்களின் வருகைக்குப் பிறகும், இந்த சந்தையில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம் என்று சொல்கிறார் இவர். இத்துறையின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான சாத்தியங்களை குறித்தும் பேசுகிறார். கேளுங்கள் :