தமிழின் தேர்ந்த இலக்கியவாதிகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுவது தமிழ்ச்சூழலில் மிகவும் அரிதானதொரு விஷயமாகவே இருக்கிறது. இக்குறையை ஓரளவு நீக்கும் விதமாக இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் சொல்வனம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் சொல்வனத்தின் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும்.
ஆ.மாதவனுக்கு விருது வழங்கும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (19.12.2010) அன்று கோவையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியைப் பற்றிய மேல்விவரங்களுக்கு: http://www.jeyamohan.in/?p=9302
சொல்வனத்தில் ‘திலீப்குமார்’:
மெளனியுடன் கொஞ்சதூரம் – திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை – திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை – திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் – ச.திருமலைராஜன்
‘திலீப்குமார்’ குறித்த பிற சுட்டிகள்:
மொழியின் எல்லைகளைக் கடந்து – வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் – ஜெயமோகன்
திலீப்குமார் – இணையத்திலிருந்து சில தொகுப்புகள் – பாஸ்டன் பாலா
திலீப்குமார் – அழியாச்சுடர்கள் தொகுப்பு
மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
சொல்வனத்தில் ‘ஆ.மாதவன்’:
பாச்சி – ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து அ.முத்துலிங்கம்
ஆ.மாதவன் – பிற சுட்டிகள்:
ஆ.மாதவன் – ஜெயமோகன்
ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் – அழியாச்சுடர்கள் தொகுப்பு
ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:
கிருஷ்ணப்பருந்து – தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் – சிறுகதைத் தொகுப்பு – தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் – காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு