யானியின் ’புகழுரை’

யானி(Yanni) உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர். மேற்கத்திய செவ்வியல் சார்ந்த இவரது இசைக் கோர்வைகள் மூலம் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். மானுடத்தின் உள்ளுறைந்த உன்னதங்களை போற்றும் வகையில் “புகழுரை”(Tribute) எனும் மைய-நோக்கில் அமைக்கப்பட்ட இசைக் கோர்வை அவரது அற்புதமான ஆக்கங்களில் ஒன்று.