வாசகர் மறுவினை

echoes

சென்ற இதழில் வெளியான விளிம்பில் உலகம் ஆகிய இரண்டு கட்டுரைகளும் அற்புதம். உலகத்தின் வாழ்வாதாரம் என்பது சமூகத்தின் கூட்டு முயற்சியால் சாத்தியப்படுவது உண்மை தான். தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும். இதனால் மனிதக் கூட்டம் இரு வேறு துருவங்களாக பிரியும். இந்த பிளவுபட்ட சமூகத்தின் ஜுர வேக நடவடிக்கைகள் ஒரு சாராரை புறக்கணிப்பில் தள்ளும். சமூகத்தில் வெறுப்பு மண்டும். ஒற்றை பரிமாண சிந்தனையின் பின்விளைவுகள் இவை. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நிகழும் ஒன்றே. இதிலிருந்தே தமக்கான பாடத்தை கற்றுக் கொண்டு, அதிலிருந்து வாழ்க்கைக்கான புதிய நோக்கை மனித குலத்திற்கு இருக்கும் உண்மையான சவால்.

தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை வெளியிடுங்கள். கட்டுரையாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
சாம் செல்லதுரை

***                             ***

ரவி நடராஜன் எழுதி வரும் கட்டுரைத் தொடர் அற்புதம். விஷயங்களை தெளிவாகவும் சுவாரசியமாகவும் அடுக்கிச் செல்லும் அவரது நடை எனக்கு பிடித்தமானது. குறிப்பாக, இணையத்தின் அசுர வளர்ச்சியில் சிக்கித் தவிக்கும் அச்சுத் துறை குறித்த அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதற்கு முன்பு வெளியான கணிணி வரைகலை குறித்த கட்டுரையும் குறிப்பிடத் தக்கது. கட்டுரையாளருக்கும், சொல்வனம் குழுவினருக்கும் என் பாராட்டுக்கள்.

நன்றி
கவிதா

***                            ***

“ரோந்து” சிறுகதை அற்புதமான வாசிப்பனுபவமாக இருந்தது. சற்று நாடகத்தனத்தோடிருந்தாலும் அத்தனை ஆஜானுபாகுவான நாய், துப்பாக்கிக்கு முன் புழுவாகச் சுருங்கும் விவரணை பிரமாதமாக இருக்கிறது. எஸ்.ஷங்கரநாராயணனின் மொழிபெயர்ப்பில் அவரது நடை, உத்திகள் கசிந்தூறி மூலகர்த்தாவைக் கொஞ்சம் காணாமல் அடிக்கிற தன்மையை நான் முன்னரும் பார்த்திருக்கிறேன். இருந்தும் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்தது. விநாயக முருகனின் கவிதையை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரிஷி

***                            ***

நடனமாடும் நாவலுலகம் குறித்து:

இதையெல்லாம் படிக்கும்போது மேலையுலகத்துக்கும் நமக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது போலிருக்கிறது. ஒரு தமிழ் புத்தகத்தின் விமர்சனம் படித்துவிட்டு, அதை ஆன்லைன் மூலமாக வாங்குவது குதிரை கொம்பு போலிருக்கிறது. இணைய வளர்ச்சியுடன் போட்டிபோட்டு தமிழ் வாசகர்களின் வளர்ச்சியும் இருக்கிறது, ஆனால் அமேசானில் ஒரு தமிழ் புத்தகத்தயும் வாங்க முடியாது. கிழக்கு பதிப்பகமும் விகடன் பிரசுரமும் ஏதோ செய்கிறார்கள், அவர்களிடம் அவர்கள் வெளியீடு மட்டும்தான் கிடைக்கும். நாஞ்சிலையும், ஜெயமோகனையும், முத்துலிங்கத்தையும் கண்மணி குணசேகரனையும் எங்கு போய் வாங்குவது.? அதற்க்கு ஏதாவது வழியிருக்கிறதா? இன்னும் பதிப்பகத்தார்கள் ISBN கோடுகளை எப்படி பின்பற்றுவது? விளக்கம் கிடைக்குமா?

அன்புடன்,

எஸ்.சுல்தான்.

__________________

ஆசிரியர் குழுவின் பதில்:

அன்புள்ள சுல்தான்,

பெரும்பாலான தமிழிலக்கிய நூல்களை வாங்க தற்போது உடுமலை.காம் ஒரு சிறந்த இணையதளமாக இருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகளை அவர்களுடைய nhm.in தளத்திலேயே வாங்கலாம்.

____________________

ISBN கோடுகள் குறித்து திரு.ரவி நடராஜனின் பதில்:

Thanks for bringing this to my attention and thanks to  Sulthan.

It appears that you need a national agency to allocate ISBN code for publication within that nation and a mechanism that needs to be followed by publishers. This will help identify various versions of the same books. Yes, I do agree that we are in the very early stages of book publication. Also, most Western magazines follow the ISSN code. Here is a nice wikipedia article on that:
http://en.wikipedia.org/wiki/International_Standard_Serial_Number
Now, I am not very familiar with the book publishing process in India and I do not know if we have a national coordinating agency.
Most of Sulthan’s observations strike me as growing pains of a supercharged teenager – India. We have fantastic cars before we have good roads. Similarly, we now have good broadband connections before we have such systems to exploit the power that broadband offers. I think, this can be sorted out sooner than other infrastructure issues such as roads as more people use roads than books.
Regards,
Ravi Natarajan