இடப்பெயர்வு

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற உயிரினங்களின் நடவடிக்கைகளை தனது முதல் படியிலிருந்தே மனிதன் கவனித்து வருகிறான். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தனது விஸ்வரூபத்தை பல வகையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலமிது. புகைப்படக்கலை அதன் உச்சங்களில் ஒன்று. நம்முடனே இந்த பூமியை பகிர்ந்துகொண்டிருக்கும் பிற உயிரினங்களின் இடப்பெயர்வை, ஒரு சாதாரணனுக்கு கிட்டிவிடாத அற்புதமான கோணங்களில் பதிவு செய்திருக்கிறார்கள் சில புகைப்படக் கலைஞர்கள். இயற்கையின் அற்புதமான தருணங்கள் அவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.


m21_00000012