வலைவெளியில்: உடுமலை.காம்

இணையம் வெகுவேகமாக நம் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் இன்னொரு ஊடக வடிவமாக உருமாறி வருகின்றது. அன்றாடப் பயன்பாட்டு என்பதைத் தாண்டி வாசிப்பு, தகவல் திரட்டு, கருத்துப் பரிமாற்றம் இவற்றுக்கும் பல அரிய இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றில் எங்கள் கவனத்துக்கு வரும் சில நல்ல இணையதளங்களை அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதாக இருக்கிறோம். இப்பகுதியில் இடம்பெறும் இணையதளங்கள் வாசகர்களின் வசதிக்காக செய்யப்படும் அறிமுகம் மட்டுமே. எந்தவித விளம்பர நோக்கமும் கொள்ளாத இப்பகுதியில் இடம்பெறும் இணைய தளங்களுடன் எத்தகைய வர்த்தக உறவையும் சொல்வனம் பேணவில்லை. இந்த தளங்களுடனான வாசகர்களின் வர்த்தகப் பிரச்சினைகளுக்கும், கொள்கை சார்ந்த பிரச்சினைகளுக்கும் சொல்வனம் பொறுப்பல்ல.

உடுமலை.காம்

தமிழில் நல்ல தரமான புத்தகங்களை வாங்குவதற்கான சிறந்த தளமாக இருக்கிறது உடுமலை.காம். உடுமலைப்பேட்டையிலிருந்து இந்நிறுவனம் இயங்குவதால் இத்தளத்திற்கு இப்பெயர். இத்தளத்தில் udumalaiபுத்தகங்களை எழுத்தாளர் வாரியாகவும் வகைகள் வாரியாகவும் தேட வசதியிருக்கிறது. இந்தியாவுக்குள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமல் இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்கள். இந்தியாவில் நகரங்களுக்கு எல்லாம் கூரியர் மூலமாகவும், கிராமங்களுக்கு இந்திய அஞ்சல் சேவை மூலமும் அனுப்பி வைக்கிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்ய கடன் அட்டை அல்லது வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு விபிபி மூலமும் அனுப்பி வைக்கிறார்கள். அதைவிட இணையதள பரிச்சயமே இல்லாதவர்களும் தொலைபேசியில் அழைத்து வேண்டிய புத்தகங்களையும், தங்களது முகவரியையும் தெரிவித்தால் போதும். தபால்காரர் வந்து புத்தகத்தை அளித்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்வார். மேலும் வெளிநாடு செல்வோர் தகவல் தந்தால் வேண்டிய புத்தகங்களை சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களிலேயே வந்து தந்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அரிய புத்தகங்களை வேண்டி தனித்தனியாக ஒவ்வொரு பதிப்பகத்தை தொடர்பு கொள்ளும் சிரமமில்லாமல் அனைத்து பதிப்பக நூல்களையும் ஒரே இடத்தில் வாங்க ஏதுவாக இருக்கிறது. மேலும் தொலைபேசியில் உரிமையாளரிடமே பேசி தகவல்கள் பெற முடிகிறது. புதியதாக வரும் புத்தகங்களை உடனே இணையதளத்தில் இணைக்க இவர்கள் எடுக்கும் முயற்சியை நாம் கண்கூடாக பார்க்கலாம். குறிப்பாக சமீபத்தில் மதுரையில் வெளியிடப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் அடுத்தநாள் காலையிலேயே இத்தளத்தில் விற்பனைக்குக் கிடைத்தன.

http://udumalai.com