மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்

இத்தாலி என்றாலே நமக்கு மாஃபியா நினைவு வருவது சகஜம். மேலும் ஃபாசிஸம், முசோலினி இத்தியாதிகளோடு, ரோம், வாடிகனின் ஊழல்கள், டான் ப்ரௌன் நாவல்கள் என்று பல இருண்ட அத்தியாயங்கள் நினைவும் வரும். ஒரு காலத்தில் இத்தாலி என்றால் அழகுப் பெட்டகங்களான பெண்கள் – சோஃபியா லொரென், ஜினா லோலாப்ரிகெடா, அனிதா எக்ப்ரக் என்றோ மார்செல்லோ மாஸ்ட்ரியானி போன்ற நடிகர்களோ, பியர் பௌலொ பசோலினி, மைகெலேஞ்சலோ அன் டோனியானி, ஃபெலினி, டி சிகா போன்ற திரைப்படத் துறையின் தாரகைகளோ நம் தமிழருக்குப் பரிச்சயமாக இருந்தார்கள். இருந்தாலும் ஸிஸிலி என்றால் தவறாமல் மாஃபியா பற்றித்தான் நினைவு வரும். சமீப காலம் வரை உலகெங்கும் பரவிய பெரும் புற்றுநோயான பெரும் குற்றங்களுக்கெல்லாம் ஊற்றுக் கண்ணாக இத்தாலியும், சிஸிலியும் இருந்திருக்கின்றன. கடந்த ஓரிரு வருடங்களாக சிஸிலி மக்கள் மாஃபியாவை எதிர்த்துப் போராடத் துவங்கி இருக்கிறார்கள். இறுதியில் அரசு, செய்தி நிறுவனங்கள் போன்றன எல்லாம் மக்களைக் காப்பதில்லை. மக்களே தம் உரிமைகளைக் காக்க அமைதிப் போராட்டம் நடத்தித் தம் குடியுரிமைகளை நிலை நாட்டத் துவங்கினால்தான் மக்களுக்கு நீதி நியாயம் எல்லாம் கிட்டுவதோடு, அமைதியும் சட்டபூர்வமான வாழ்க்கையும் கிட்டும் போலிருக்கிறது. இது சிஸிலிய மக்கள் மாஃபியாவை எதிர்த்து நடத்தும் ‘காப்புப்’ பணம் கொடாப் போராட்டம் பற்றியவை.

http://www.smithsonianmag.com/multimedia/photos/?articleID=103003809&c=y