பியானோ

பியானோவுடனான கலைஞனின் உறவென்பது மிகவும் நெருக்கமானது. இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலே இசையாக நிகழ்கிறது. பீத்தோவன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய இந்த இசைக் கோர்வை தன் காதலியுடனான காலம் தாண்டியும் நிலைத்த உரையாடலாக கருதமுடியும். இசையின் நுணுக்கம் அறிந்தவர்கள் இந்த உரையாடலின் மெல்லிய அந்தரங்கங்களை ரசிக்க முடியும். நுணுக்கம் அறியாமல் போனாலும் ஒன்றும் குறையில்லை. அந்த இசை நம்மை எப்படியும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்.

கடந்த செப்டம்பர் மாதம் பியானோவிற்க்கானது. இதையொட்டி பல்வேறு பிரபல இசைக் கலைஞர்கள், அவர்களின் பியனோவுடனான உறவை பதிவு செய்துள்ள புகைப்படத் தொகுப்பு ஒன்று இங்கே.