ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2

பண்டைய எகிப்தில் வழிபாட்டுக்கும் அண்ட இயல், மரணத்திற்குப் பின்னும் வாழும் ஆன்ம அடையாளமான மம்மிக்கள், அண்டஇயலில் ஆதவனின் சுழற்சி, இரவு-பகல், சொர்க்கப்படகுகள் பற்றியெல்லாம் கவனித்தோம். இனி ஆதவனுக்கு இணையான அக்னிபகவானை மையமிட்ட ஹெர்மோபாலிட்டன் வழிபாட்டை கவனிக்கலாம். இத்தத்துவத்தில் முதலில் உலகம் அல்லது பிரபஞ்சம் அக்னிக்கோளமாகவும் குழப்பமாகவும் விளங்கியது. இந்த நிலையைத் தெளிவுபடுத்த முதலில் நான்கு தெய்வங்கள் வந்தன: நன், நன் மனைவி நானட், ஹெஹ், ஹெஹ்ஹின் மனைவி ஹெவாட்.

நன்னும் நானட்டும் சமுத்திர சக்தியைக் குறிக்கும் தெய்வங்கள். ஹெஹ் ஒரு விசுவரூபன். ஷூ விண்ணைத் தூக்கியது போல், ஹெஹ் சூரியனை உயரத்தூக்கி நிலைநிறுத்தியவர். இரவைக்குறிக்கும் ஒரு தெய்வம் கெக். கெக்கின் மனைவி கெக்கட்டும் இரவைக் குறிக்கும். இரவு இருப்பதால்தான் சூரியன் ஊடுறுவி ஒளி காட்டுவதாக எகிப்திய ஐதீகம். விண்ணாகவும் காற்றாகவும் உணரக்கூடிய தெய்வங்களாக அமுன், அமுனட், நிய்யு, நிய்யுட் தோற்றுவிக்கப்பட்டன. இந்த எட்டு தெய்வங்களான நன், நானட், ஹெஹ், ஹெவாட், அமுன், அமுனட், நிய்யு, நிய்யுட் இணைந்து பிரபஞ்சத்தை இயக்கின. எகிப்தில் இந்த எட்டு தெய்வங்களும் ஒளிதரும் பிதாக்களாகவும், மாதாக்களாகவும் மதிப்பிடப்பட்டு கஹ்மவுன் – அதாவது ogdoad ஆகவும் அழைக்கப்பட்டன.

இந்த எட்டு தெய்வங்களில் ஆண் தெய்வங்களான நன், ஹெஹ், அமுன், நிய்யு போன்றவை தவளை முகத்தையும், இந்த ஆண் தெய்வங்களின் மனைவிகளாக எண்ணப்படும் நானட், ஹெவாட், அமுனட், நியுட் ஆகியவை பாம்பின் முகத்தையும் பெற்றிருந்தன. இவை சுயம்பு வடிவானவை. (சுயமாகத் தோன்றியவை). இந்த எட்டை வைத்துத்தான் ஹெர்மோ பாலிஸ் நகரம் உருவானது. இந்த எண் தெய்வ இணைப்பின் மறு பெயர் கஹ்மவுன். இதில் பொதிந்துள்ள புராணம் ”கடல் மீது தாமரை மலர்ந்து சூரியன் தோன்றினனான்” என்பதே. மெம்ஃபைட் விழிபாட்டிலும் இதே கதைதான். இங்கு கஹ்மவுன் என்ற ஒளி நெஃபர்தம் ஆனது. இது முக்கூட்டு தெய்வம். (பிதா+சஹ்மத்+நெஃப்ர்தம்.) சஹ்மத்தின் தலை நாகம், நெஃபர்தம் சஹ்மத்தின் மகன் – தாமரை வடிவில் ஒளியை வழங்குகிறான். சூரியனாகிய பிதாவே மெம்ஃபைட் மன்னன்.

மெம்ஃபைட் வழிபாடு

அரசியல் ரீதியாக பரோமன்னரால் உயர்த்திவைக்கப்பட்ட பிற்கால வழிபாட்டில் பழங்குடி தெய்வங்கள் புதிய சிறப்பைப் பெற்றன. மெம்ஃபைட் வழிபாடு 25வது பரோ வம்சத்துடன் தொடர்புள்ளது. இன்றுள்ள கியாசாவில் எகிப்தின் இன்றையத் தலைநகரனா கைரோவிற்கு அருகில் உள்ள மாபெரும் பிரமீடு முகம் சிங்கமனிதனாக ராம்சே (எகிப்திய மன்னன்)யை நினைவுபடுத்தும் ஒரு காலகட்டத்தில் இந்த மெம்ஃபைட் வழிபாடு நிலவிவந்தது. இம்முறையில் உலகின் மூலபுருஷர் பிதாவே தெய்வங்களின் வடிவம். பிரமாக்களுக்கெல்லாம் பிரம்மா. பிரபஞ்ச இயக்கத்திற்கான எட்டு சக்திகளையும் ஒருங்கே பெற்று உலகை இயக்கியவர். முதலில் நிலம் வந்ததா? நீர் வந்ததா? நீர் என்பது விடையானால் அதுவே எகிப்தில் நன் என்ற கடல் தெய்வம் அந்த நன் யார்? அது பிதாவின் அம்சம். (பிதா என்று கூறப்படுவது, ப்தா என்ற எகிப்திய உச்சரிப்பின் திரிபு.) மொழியியல் என்து ஒலியியலிலிருந்து வளர்ந்ததாக ஒரு கருத்துண்டு. தமிழில் நீர் வடமொழிகளில் நாரா. இந்தியவுராணத்தில் நீரில் சயனிப்பவன் நாராயணன். எகிப்தில் அதுவே நன். பிதா நன்னுடன் இணைந்தார். பிதாவின் அம்சமாக உர் பிறந்தார். இந்த உர் உயிர்களைப் படைத்த அட்டும் ஆகும். உர் என்றால் விசுவம் அல்லது மாபெரும் என்றும் அர்த்தம் கொள்ளலாம். பிதா முதலில் நீரைத் தோற்றுவித்து நன்னில் ஒளிந்துகொண்டார். நன், உர்ரைப் பெற்றெடுத்துப் பின்ன அந்த நன்னும் உர் ரும் பிதாவில் ஐக்கியமாயினர். பிதாவிலிருந்த உர் பிரம்மாவானார். உர் வழங்கிய ஒளியை அட்டும். உர்ரின் விசுவரூபனே அட்டும். அட்டுமுன் பிதாவின் அம்சம். அட்டும் படைத்த ஹோரஸ் ஒரு இதய தெய்வம். அட்டும் ஹோரஸ் ஒரு இதய தெய்வம். அட்டும் ஹோரசின் நாக்கில் ஓம் என்ற பிரணவத்தை எழுதினான். நாக்கு வாக்கானது. இதயம் மனமானது. ஹோரசும் பிதாவின் கூறு. உலக இயக்கத்தில் நாக்கும், இதயமாக ஹோரஸ் வந்தபிறகு மனிதனுக்கு வாக்கும் மனமும் கிட்டியது. வாக்காகவும் மனமாகவும் உருவான தெய்வமே தாத். மனிதனின் மனோதிடத்தைக் குறிப்பது தாத். தாத் என்ற சரஸ்வதியே பிரமனாகிய பிதாவும் கூட. இந்திய புராணத்தில் காளியும் (நாக்கு) சரஸ்வதியும் (அறிவு) எகிப்தில் தாத் தெய்வமாக வாழ்ந்துள்ளது. பிதாவின் எட்டு அம்சமாக (நன், உரி, அட்டும், ஹோரஸ், தாத் என்ற ஐந்துடன் நிலம், காற்று, ஒளியாக) வணங்கப்படுகிறார். அநேகமாக பிதா, இப்தார் ஆகியிருக்கலாம். ராம்சே/ரம்சே ரம்சான் ஆகியிருக்கலாம். தாத்-ஈத்தாகி, ஈத் முபாரக் ஹை.

திபென் வழிபாடு

எகிப்தில் 11வது பரோ மன்னர் தலைநகரை மெம்ஃபிசிலிருந்து திபெஸ் நகருக்கு மாற்றியதன் மூலம் திபென் வழிபாடு உருவானது. திபென் வழிபாட்டில் முக்கியதெய்வம் அமுன். உலகத் தோற்றத்திற்கு அமுன் அடிப்படை. அமுன் காற்று வடிவான மாருதி. சூரியனுக்குத் தந்தை. திபென் பகுதியில் மின்னு என்ற வளமைப்பெருக்க தெய்வம் தலைநகர் மாற்றத்திற்குப் பின் அமுனாக மாற்றப்பட்டு மத் என்ற தேவதையை மணந்தார். மத் என்ற சொல் மதர் என்ற சொல்லின் சுருக்கமோ? மத் ஒரு தாய் தெய்வம். மத் பெற்றெடுத்த பிள்ளை கோன். கோன் என்றால் தமிழில் அரசன், எகிப்திய கோன் சந்திர – சூரியரைக் குறிக்கும் தெய்வம், கோன் சூரிய வடிவம் பெற்றார் ரி ஆகும். திபென் வழிபாட்டில் அமுன்-ரி என்றால் அதுவே சூரியனைக் குறிக்கும் மாபெரும் தெய்வம். அமுன்ரியே கர்த்தர் வடிவான அல்லா.

திபென் வழிபாட்டில உள்ள சிறப்பு திபெஸ் நகரில் ஓடும் நைல்நதி காசியில் ஓடும் கங்கைக்கு நிகர். எகிப்தின் மெக்கா. கங்கையில் குளிதூதுப் பாவத்தைப் போக்கிக் கொள்வது நமது மரபு என்றால் எகிப்தில் திபெஸ் நகரில் ஓடும் நைல்நதியில் குளித்து மக்கள் தங்கள் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்ளும் மரபு இன்னும் உள்ளதாம்!

இக்கால எகிப்து இஸ்லாமிய நாடு. இந்தியாவைப் போல் எகிப்திலும் ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் வழக்கொழிந்துவிட்டன. பிற்கால வழங்கலாக ”ஒன்றே கடவுள் ஒருவனே தெய்வம்” என்ற கோட்பாடு செயல்பட்ட விதம் வன்முறை என்பதால் இஸ்லாமிலும் சரி, கிருஸ்துவ மதத்திலும் சரி பண்டைய வழிபாடுகளை அவற்றின் சுவடு தெரியாதபடி அழிப்பதில் ஒற்றுமை இருந்தது. இன்றைய இந்தியாவில் மதச்சார்பின்மை போற்றப்படும் விதம் மதரீதியான பூசல்களை வளர்ப்பதாயுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிபட்ட பின் அதுவே ஒரு புனிதமானது. ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதிக்கு ஒரு மசூதிதினம் போற்றப்பட்டு இந்தியாவின் எல்லா ரயில் நிலையங்கள், விமான தளங்களின் செக்யூரிட்டி பலப்படுத்துவதைப் பார்க்கிறோம். வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், ரோமானிய மன்னர்கள் பண்டைய பாகன் வழிபாட்டை பாதுகாக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. அவதார புருஷனாக ஏசுபிரான் வாழ்ந்து சிலுவையில் அரையப்பட்ட பின்பு புதிய பைபிள், ஒரு புதிய வேதம் எழுந்தது. ஜூபிட்டர், வீனஸ், அப்போலோ வழிபாட்டை (பாகன்) மட்டுமல்ல, பழையவேதம் பாராட்டிய யூதர் வழிபாடு, ரோமிலும் கிரீசிலும் பரவியிருந்த எகிப்திய வழிபாடு, மித்ரா வழிபாடு எல்லாம் ஆட்கொள்ளப்படாமல் வன்முறையால் அழிக்கப்பட்டது. ஆயிரந்தெய்வங்கள் காட்டிய அமைதியும், விவசாயம் – சூழல் பண்பாடும் வழக்கொழிந்தன. தெய்வத்தின் அம்சமாகக் கருதப்பட்ட மன்னனின் அதிகாரம் கேள்விக்குள்ளானது. ”அவன் மன்னனாயினும் கூட கடவுளின் தண்டனைக்கு உட்பட வேண்டும். சொர்க்கம் என்பது மன்னனின் வாழ்விடம் அல்ல…” இப்படியெல்லாம் பேசிய செயின்ட் பாலையும் செயின்ட் பீட்டரையும் ரோமானியப் பேரரசன் நீரோ சிலுவையில் அரைந்தான்.

ரோமாபுரி பற்றி எரிந்தது. ”தெய்வம் ஒன்றுதான். அவனே ஏசு . மற்றவை தெய்வமல்ல”. ஒடுக்கப்பட்டதால் உரம் பெற்ற கிருத்துவமதம் காலப்போக்கில் ரோமானியப் பேரரசன் கான்ஸ்ட்டன்டைனை வேறு வழியில்லாமல் கிருஸ்துவனாக்கியது. உண்மையில் கான்ஸ்டன்டைனுக்கு ஏசு மீது எந்தப்பற்றும் இல்லை. சிலுவைக்குறியை அதிர்ஷ்டமாக எண்ணினான். அவன் கனவில் சிலுவை தோன்றியதாம். சிலுவையை அணிந்தால் போரில் வெல்லலாம். ரோமாபுரி சாம்ராஜ்யத்தை விரிவாக்கலாம் என்றெல்லாம் சிலுவை அசரீரி கூறியதாம். அவ்வளவுதான். எகிப்து வழிபாடுகள், ஜூதாயிசம் (யூத வழிபாடு) மித்ரா, பாகன் சார்ந்த கோவில்கள், எல்லாம் தேவாலயங்களாக அதாவது சர்ச்சுகளாக மாறின. தேவாலயத்தை பரிபாலனம் செய்த பாதிரிமார்களுக்கு பிரம்மதேயம், தேவதானம், ஏகபோகம் வழங்கி (அதாவது நிலத்தில் உரிமை, சாசனம், சொத்து, அடிமைகள்) அவர்களை இன்பத்தில் ஆழ்த்தினான். ஏசு ஏன் பிறந்தார்? யாருக்கு வாழ்ந்தார்? என்ற கேள்விகளையெல்லாம் நிலமானியப் பாதிரியார்களைக் கேட்டுவிட முடியாது.

ரோமாபுரியின் தலைநகரம் துருக்கியிலுள்ள இன்தாம்புல்லுக்கு மாற்றப்பட்டு அந்த நகரத்தின் பெயர் கான்ஸ்டாண்டி நோபல் ஆயிற்று. யேசு பிரசங்கம் செய்த இடமெல்லாம் புனித நகரங்களாயின. ஜெருசலம் கிருஸ்தவர்களின் புனித ஷேத்திரமானது. எகிப்திய வழிபாட்டுத்தலங்கள் நிர்மூலமாகி வானுயர்ந்த தேவாலயம் எழுப்பட்டாலும் கூட, மத ஆட்சியால் மீண்டும் ஒரு ஏசுவாக முகம்மது நபி ஒரு மன்னாகவே அவதரித்தார். மேற்கு ஆசிய ஷேக்குகள் பழைய தெய்வங்களான சூரிய, சந்திரர்களை வழிபட்டனர். மெக்காவிலிருந்து மதினாவுக்குத் துரத்தப்பட்ட முகமது, ஷேக்குகளை எதிர்த்துப் புனிதப் போர் (ஜிஹாத்) தொடங்கினார். மெக்காவுக்கும் மதினாவுக்கும் நிகழ்ந்த ஒரு சில்லறைப் போரில் ஒரு மாபெரும் மதம் உருவானது. ரோமாபுரியின் ஏகபோகமாக விளங்கிய கிருஸ்துவமத வளர்ச்சி இஸ்லாமிய எழுச்சியால் தடையுற்று, எழுந்தது சிலுவைப்போர் வெள்ளிதோறும் மெக்காவின் திசைநோக்கி ஐந்து முறை கும்பிடு போடச் சொன்ன முகமது நபி, எதிரிகளை விரட்ட ”ஜிஹாத்” என்றார். ஏசு பிறந்த பாலஸ்தீனம் இஸ்லாமியர் வசமானது. ஐரோப்பிய நிலமானிய காலத்தில் மன்னர் அதிகாரத்தை போப்பின் அதிகாரம் வெல்வதாயிருந்தது. கி.பி.1095-இல் போப் அர்பன் II ஜெருசலத்தை மீட்க ஜிஹாத்தை எதிர்த்து சிலுவைப் போர் தொடங்கினார். அதற்குள் ஓமரின் இஸ்லாமிய அதிகாரம் ஸ்பெயின்வரை நீடித்தது. ஐரோப்பிய நிலமானிய எல்லைகளில், எகிப்தில், ஈரான், ஈராக் அரேபியா எங்குமே தரைமட்டமான வழிபாட்டுத்தலமெல்லாம் மசூதிகளாக உயர்ந்தன. முகமது நபி ஒரு தோற்றுவாய். ஜிஹாத்தைக் கொடிகட்டிப் பரப்பிய முதலாவது காலிஃப் ஓமர் கி.பி. 638-இல் ஜெருசலத்தை வீழ்த்தினார். ஜிகாத்தும் சிலுவையும் கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டுவரை மேற்கு ஆசியவையும் கிழக்கு ஐரோப்பாவையும் ஒரு கலவர பூமியாக்கியது. தெய்வம் ஒன்றுதான். அது நபியா ஏசுவா என்ற போராட்டத்தில் மடிந்தவர் பல்லாயிரம். இடித்து நொறுக்கப்பட்ட கோவில்கள் பல்லாயிரம். இவையெல்லாம் வரலாற்றில் மறக்கப்பட்டவை.

சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது. அதேசமயம், இந்திய மன்னர்கள் விதிக்குக் கட்டுப்பட்டவர்களாக விளங்கினர். ஒரு பிழையும் செய்யதாதவன்; பொய் பேசாதவன்: சுயதர்மம் போற்றியவன்; இப்படியெல்லாம் சிறப்புடன் வாழ்ந்த அஸ்தினாபுர அரசன் தருமபுத்திரனுக்கு அவள்ளவு சுலபமாக சொர்க்கம் கிட்டவில்லை என்பதை, பாகவதக் கதை கூறும். மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம். எகிப்திய புராணங்களைவிட இந்திய புராணங்கள் ஜனநாயகம் மிகுந்தவை. நந்தனார், திருப்பணாழ்வார் போன்ற சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு சொர்க்கம் கிடைத்தது. எகிப்தில் இவர்கள் எம்மாத்திரம். ஆதிசங்கரருக்கும் ஸ்ரீராமானுஜருக்கும்கூட சொர்க்கத்தில் சீட் இல்லை. பரோ மன்னனுக்கு மட்டும் சொர்க்கத்திற்குச் செல்லும் உரிமை உண்டு. பரோ மன்னன் சாவதும் இல்லை. ‘ரி’ என்ற சூரியனின் படகில் ஏறி சொர்க்கத்திற்குச் செல்வார். மன்னன் மட்டுமே அழிவில்லாதவன். அவன் மட்டுமே ஆனந்தப்படகில் ஏறி முடிவில்லாத சொர்க்கப் பயணம் செல்வான் போலும்! இறந்துவிட்ட பரோ மன்னன் ஓசிரிஸ்ஸாக உருவெடுப்பான். ஓசிரிஸ் (OSIRIS) என்றால் கண்குழியாகும். உண்மையில் எகிப்திய மன்னனின் ஆவி பாதாள உலகில் இறப்பின் கடவுளாகவும் எண்ணப்படும். எகிப்திய புராணத்தில் ஓசிரிசின் கதை சுவாரிசியமானது. MYTH Of the OSIRIS என்ற தெய்வக்கதை இலக்கியவாதிகளும் நாவலாசிரியர்களுக்கும் நல்விருந்து.

ஓசிரிசின் கதை இலியத்தைப் போல், ராமாயணம் போல் பாடல் வடிவானது. பிரபஞ்சத்தை உருவாக்கிய அட்டும் மண்ணுலகின் அதிபதியாக கெப்பை நியமித்தார். கெப்பும் நட்டும் இணைந்து ஓசிரிசை உருவாக்கினார், கெப் தன்னுடைய மந்திர சக்திகளையெல்லாம் ஓசிரிசுக்கு வழங்கினார். ஓசிரிசின் மனைவியும் சகோதரியுமான ஐசிஸ் மகாராணியாக சர்வவல்லமை பெற்றவனாக விளங்கிவந்தான். கிப்திய, கிரேக்க புராணங்களில் சகோதர சகோதரி மணஉறவுக்குத் தடைஇல்லை. புராணத்தில் மட்டுமல்ல. பரோ மன்னன் தன் சகோதரியைத்தான் மணம் புரிய வேண்டும். இந்திய புராணங்களில் இப்படிப்பட்ட சகோதர மணஉறவு தடைக்குரிய ஒரு பண்பாடு பிறகால மரபாக இருக்கலாம். ஆகவே நமது பாரதக்கதை, ராமாயணக்கதை எல்லாமே எகிப்திய கிரேக்க புராணங்களுக்குப்பின் எழுதப்பட்டவை என்பது தெளிவு.

ஓசிரிஸ் வேளாண்மைப் பண்பாட்டைப் போற்றியவர். கோதுமை, பார்லி, திராட்சை சாகுபடி உயர்ந்தது. ஓசிரிசின் அபூர்வ சக்தியால் மக்களின் அறிவுத்திறன் உயர்ந்தது. இது நீடிக்கவில்லை. ஓசிரிசின் தம்பி ஹிரண்ணியனைப் போல் கெட்டவன். இவன்தான் செத். செத்தின் மனைவி நெஃப்தைஸ். செத் அண்ணனைக் கொன்றுவிட்டு ஓசிரிசின் மந்திர சக்திகளைப் பெற விரும்பி ஓசிரிசை விருந்துக்கு அழைத்து வஞ்சமாகக் கொன்று, ஓசிரிசின் விழிகளைத் தோண்டி எடுத்துவிட்டு உடலை ஒரு பெட்டியில் அடைத்து நைல் நதியில் மிதக்கவிட்டான். இந்த சதியை அறிந்த ஐசிஸ் தன் கணவனின் உடலைத் தேடி அலைந்து இயலாமல் தன் மந்திர சக்தியால் ஃபோனிசியாவில் பைபிளாஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு அத்திமரப் பொந்தில் உள்ளதைக் கண்டுபிடித்து அதை மீட்க நினைப்பதற்குள் மீண்டும் செத் ஓசிரிஸ் உடைலைக் கைப்பற்றி அதை 14 துண்டுகளாக வெட்டி வீசினான். மீண்டும் ஐசிஸ் முயன்று வெட்டிய துண்டுகளில் 13ஐ ஒன்று சேர்த்தார். மீதி ஒரு துண்டு ஓசிரிஸின் ஆண்குறி அகப்படவே இல்லை. எனினும் சகதெய்வங்களான அனுபிஸ், நெஃப்தைஸ் உதவியுடன் முதல் மம்மி தயாரானது. அதாவது ஓசரிஸின் துண்டு உடல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு மூலிகைத் தைலங்கள் பூசி உடல் கெடாமல் பாடம் செய்யப்பட்டது.

ஓசிரிஸ் இற்ந்த பின்னர் நைல்நதி முகத்துவாரத்தில் உள்ள வனத்தில் ஐசிஸ் அஞ்ஞாதவாசம் செய்து சகுந்தலை பரதனைப் பெற்றது போல் ஹோரசைப் பெற்றெடுத்தாள். இரண்யனை வீழ்த்த பிரகலாதன் ”நமோ நாராயண” என்று ஜபித்தான். ஹோரஸ் மாறாகத் தானே நரசிம்மனாக மாறி இரண்யவதத்திற்குத் தயாரானான். ஐசிஸ் தன் கணவனாகிய ஓசிரிஸ் கொல்லப்பட்ட விவரத்தை ஹோரசிடம் கூறி அவனை பலம் நிரம்பிய இளைஞனாக உருவாக்கினான். தக்க வயது வந்த ஹோரஸ், சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைத்தது போல செத்தை அழைத்தான். செத் என்ற சித்தப்பனைப் பிணமாக்க ஒரு கம்ச வதத்திற்குரிய தளம் தயாரானது. செத்தைக் குத்துயிரும் குலை உயிருமாகக்குத்தி அடித்து உடல் முழுவதும் அங்கம் அங்கமாகக் காயப்படுத்தினான். 14 இடங்களில் வெட்டுக்காயம் பட்டாலும் சமாளித்து எழுந்த செத் ஹோரசின் விழிகளைத் தோண்டி எடுத்துவிட்டான்.

இவ்வாறு தேவனாகிய ஹோரசும் அசுரனாகிய சேத்தும் நிகழ்த்திய யுத்தம் முடிவுக்கு வராமல் நீடிக்கவே தெய்வ சபை அவசரம் அவசரமாகக் கூட்டப்பட்டது. தனது தந்தையை வஞ்சகமாகக் கொன்ற குற்றத்திற்காக ஹோரஸ் செத்தை வெட்டி வீழ்த்தியது நியாயமே என்பதால் ஹோரசின் விழிகளை செத் திருப்பி வழங்க வேண்டும் என்று தீர்ப்பானது. அவ்வாறே செத் விழிகளைத் திருப்பிக் கொடுத்ததும் அவனது புண்கள் ஆறிவிட்டது. செத் பழைய நிலைக்கு வந்தான். மீண்டும் மன்னனானான். விழிகளைப் பெற்றுக் கொண்ட ஹோரஸ் அவற்றைத் தன் தந்தையின் ஒன்று சேர்ந்த உடலில் விழிகள் இல்லாமல் இருந்த கண்குழிக்குள் வைத்தான். தன் உடலில் விழிகள் இருக்க வேண்டிய இடத்தில் விஷப் பாம்பை வைத்துக் கொண்டான். இவ்வாறு நாகத்தைச் சிரமேற்கொண்ட ஹோரஸ் எகிப்திய சிவபெருமானாகிவிட்டானோ? இந்த நிகழ்ச்சி ஏன் எகிப்திய மன்னர்களும், கிளியோப்பேட்ரா போன்ற மகராணிகளும் மகுடத்தில் நாகத்தைச் சுமந்துள்ளனர் என்ற கேள்விக்கு விடை கிடைத்தாலும் ஹோரஸ் புராணம் முடியவில்லை. ஹோரசுக்கு வாரிசுரிமை கிடைத்ததா? இரண்ணியனான செத்தின் முடிவு என்ன?

அடுத்த இதழில் தொடர்வோம்.