பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்

இந்தியத் திரைப்படங்களுக்கான தேசியவிருதுப் பட்டியலில் இந்த வருடத்தில் புதியதாக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கும் திரைப்படங்களில் இசை என்றாலே பின்னணி இசை என்றிருக்கையில் இத்தனை வருடங்களாக தேசியவிருதுக்குழுவினர் வெறும் பாடல்களை மட்டுமே முன்வைத்து இசைக்காக விருது அளித்து வந்துள்ளனர். இப்போதாவது இதை அறிமுகப்படுத்தி முக்கியத்துவம் தருகிறார்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். ‘பழசிராஜா’ என்ற மலையாளப்படத்துக்காக முதல் இசையமைப்பாளராக இந்த விருதைப் பெறுகிறார் இளையராஜா.