உலகம் ஒரு கண்ணாடித்
துண்டென அறுபட்டு
அசைந்தது. என்
அத்தனை அசைவுகளிலும்
அசராது என் பார்வையைத்
தொடர்ந்தது. என்
புகைப்படங்களில்
யோசித்துக் கொண்டிருக்கிறது.
என் பார்வையின் விளிம்புகளில்
படித்த எழுத்துக்கள்
நிரம்பிப் பிராகசிக்கின்றன.
அத்தனை பாவனைகளுக்கும்
அத்தனை விளிம்புகளை
மாற்றிக் கொள்ளலாம்.
குளிர் பரவும் இரவில் மட்டும்
தினமும் கழற்றிவிட வேண்டியிருக்கிறது
வட்ட நிலவின் வட்டத்தை
என் மூக்குக் கண்ணாடியுடன்.