செல்லோ இசைக்கலைஞர் யோ-யோ மா

சமீபத்திய சில பத்தாண்டுகளில் சீன மக்கள் அமெரிக்க செவ்வியலில் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க ஆர்வலர்களைக் காட்டிலும் சீனர்கள் தேர்ந்த ஆர்வலர்களாகவும், கலைஞர்களாகவும் முன்னேறி வருகிறார்கள். இது சீனாவில் மட்டும் நிகழும் சூழல் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் வசிக்கும் சீனர்களும் மேற்கத்திய செவ்வியலில் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவில் வாழும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கலைஞர்களில் மிகவும் சிறப்பான ஒருவராகக் கருதப்படுபவர் யோ-யோ மா. இவருடைய பெற்றோர் சீன வம்சாவழியினர். மாவோவின் கலாசாரப் புரட்சியிலிருந்து தப்பித்து வெளியே வந்தவர்கள்; சிறந்த இசைக்கலைஞர்கள். அதனால் இயல்பாகவே சிறுவயதிலிருந்தே இசையார்வம் கொண்டிருந்த யோ-யோ மா, மிகச்சிறந்த செல்லோ இசைக்கலைஞராக விளங்குகிறார். பல விருதுகளையும் வென்றிருக்கிறார். கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் யோ-யோ மா பாகனினியின் caprice 24 என்ற  வாசிப்பதற்கு மிகவும் கடினமான இசைக்கோர்வை ஒன்றை வாசிப்பதைக் கேட்கலாம். இன்னொரு வீடியோவில் யோ-யோ மா ஏழுவயதாக இருக்கும்போது, லியானார்ட் பெர்ன்ஸ்டெயின் அறிமுகத்தோடு அளித்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.