இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்

சீனாவின் அசுர வளர்ச்சி நம் பிரபல ஊடகங்களில் திரும்பத் திரும்ப சிலாகிப்பாக எழுதப்படுகிறது.  வின்னை முட்டும் கட்டடங்களும், அதிவிரைவுச் சாலைகளும் சீனாவின் புதிய முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு சீனாவின் நடுத்தர வர்க்க மக்களும், ஏழை மக்களும் தரும் விலை மிக மிக அதிகம். பல வருடங்களாக வசித்துவரும் வீடுகளையும், நிலங்களையும் விட்டு அவர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்தப்படுகிறார்கள். ஒரே இரவில், ஒரு சில மணி நேரங்களில் – என அவர்களுடைய இருப்பு துடைத்தழிக்கப்பட்டு, அவர்கள் அரசு கட்டித்தரும் படு சுமாரான புறாக்கூண்டுகளுக்குள் அடைக்கப்படுகிறார்கள். பாட்டாளிகளின் தேசத்தில் இந்த மக்களின் வாழ்க்கை முறையைக் குறித்து ஒரு முறை தெரிந்து கொண்டால் கூடப் போதும் – நம் இந்திய மாவோயிஸ்ட்டுகள், இந்தியர்களுக்குக் காட்டும் பொன்னுலகம் எது என்று தெரிந்துவிடும். Foreign Policy இணையதளம், சீனாவின் ஷாங்காய் நகரில் தகர்க்கப்படும் குடியிருப்புகளைக் குறித்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தொகுப்பு இதோ:

http://www.foreignpolicy.com/articles/2010/07/14/another_side_of_shanghai

100714_11_kids-in-demolition-site