உலக நாடுகளின் சில அரசாங்கங்கள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. தன் எல்லை மீதான அதிகாரமின்மை, மக்களின் வாழ்நிலை சீர்குலைவு, பொருளாதார வீழ்ச்சி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணிகளை முன்வைத்து ”Foreign Policy” எனும் இதழ் இத்தகைய தேசங்களை பட்டியலிட்டுள்ளது. பட்டியலில் உள்ள தேசங்களில் பெரும்பாலானவை ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சார்ந்தவை. காரணங்கள் அனைவரும் அறிந்தவையே. சுயநல அரசியல்வாதிகள், மத அடிப்படைவாதம், தீவிரவாதம் போன்ற பல்வேறு காரணிகளால் ஆப்பிரிக்க நாடுகள் இத்தகைய நிலையை அடைகின்றன. மேற்கத்திய ஆதிக்கசக்திகளின் பொருளாதார/அரசியல் சூதாட்ட கூடமாக அபரிமிதமான இயற்கை வளங்களைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் திகழ்கின்றன. இந்த சூதாட்டத்தில் பணயம்? அந்நாட்டு மக்கள். விளைவு? இந்தப் புகைப்படங்களை பாருங்கள். புள்ளிவிவரங்களுடன் பல்வேறு தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்.