அடைக்கலம்


அடைக்கலம்
கண்களின் கலவரத்தில்
காதல் உண்டேன்
காற்றின் கலந்தோசை
சுடரில் விழுந்து
சூரிய ஒளியாய் ஆனது
இமையின் இலையசைவில்
இருக்கையில் இளைப்பாறினேன்
காலை மாலை எந்நேரமும்
கருக்கொண்டு வளர்ந்தேன்
கடலலையின் மேல்
நடை பழகினேன்
காற்றின் மெளனத்தில்
மொழி பயின்றேன்
கண் எட்டாத புள்ளிவரை
ஓடி மறைந்தேன்
சட்டங்களற்ற ஜன்னல்கள்
செய்து முடித்தேன்
சாலைகளற்ற வழியில்
வருங்காலம் தேடினேன்
உயரத் தொங்கும் ஒட்டடை
நூல் பிடித்தேறி உன்னிடம்
அடைக்கலம் புகுந்தேன்