காட்டுத் தீ

இயற்கையின் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றாக அக்னியை வணங்கிய கலாச்சாரத்தின் ஏதோ ஒரு புள்ளியை தினமும் தொட்டபடி வாழ்பவர்கள் நாம். அதை போற்றிப்பாடிய நாம் அவ்வப்போது அதன் கோர தாண்டவத்தையும் கண்டிருக்கிறோம். உலகம் நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த காட்டுத் தீ விபத்துகளின் புகைப்பட தொகுப்பு ஒன்றை இங்கே காணலாம். கடந்த ஜூன் 5-ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம். இந்தப் பின்ணணியில் இயற்கையின் வலிமையையும், அதன் மீது நாம் கொள்ள வேண்டிய அக்கறையையும் உணர்த்துபவையாக இந்தப் புகைப்படங்கள் அமையும்.