மகரந்தம்

1-clipboard-2செயற்கைக் கருந்துளைகள்: சீன விஞ்ஞானிகள் சேர்ந்து கொண்டு எதையும் விழுங்கி விடும் கரும்துளைகளை (Black holes) செயற்கையாக உருவாக்க முயல்கிறார்களாம். (சமூகத் துளைகளை உருவாக்குவது கம்யூனிஸ்டுகள் பொறுப்பு). எந்த திசையிலிருந்தும் வரும் கதிரலைகளை தன்னுள் வாங்கிக் கொள்ளும். எந்த சிதறலும் இருக்காது. இது வெற்றிகரமான ஒன்றாக அமைந்தால் அண்டவெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சலாக இருக்கும்.

கட்டுரையை இங்கே படிக்கலாம்:
http://www.gizmag.com/scientists-create-mini-balck-hole/15306/

cleo க்ளியோபாட்ரா கையெழுத்திட்ட கடிதம்: அகழ்வாராய்ச்சியில் உலகெங்கும் தொடர்ந்து என்னென்னவோ கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அலெக்சாந்த்ரியா என்றழைக்கப்பட்ட ஒரு எகிப்திய நகரத்தின் இடிபாடுகளைச் சமீபத்தில் கடலில் இருந்து மீட்டதில் கிட்டிய சில சிலைகள், பபைரஸ் என்றழைக்கப்பட்ட அந்நாளைய காகிதத்தில் பதிவான சில அரசக் கட்டளைகள், நாணயங்கள், சிலைகள் இத்தியாதி ஒரு அருங்காட்சியகக் கண்காட்சியில் வைக்கப்பட்டன. காட்சி அமெரிக்க நகரம் ஒன்றில் நடந்தது. அது குறித்த ஒரு சிறு செய்தியறிக்கையும், சில ஒளிப்படங்களையும் கீழுள்ள தொடர்புக் கணுவில் காணலாம். http://www.nytimes.com/2010/06/04/arts/design/04cleo.html?pagewanted=all
முக்கியமான ஒரு படம் – க்ளியோபாட்ராப் பற்றிய அருங்காட்சி என்றழைக்கப்பட்ட இதில் ஒரு எகிப்திய அரசியின் சிலை. படம் அவ்வளவுக்குச் சிலை அருகில் சென்று எடுக்கப்படவில்லை, ஆனால் சிலை அருமையாக இருக்கிறது என்று செய்தி சொல்கிறது. இவர்தான் க்ளியோபாட்ராவா என்று செய்தி தெளிவாக்கவில்லை. ஆனால் இவர் கடைசி எகிப்திய அரசி என்று கண்காட்சி சொல்கிறது. க்ளியோபாட்ரா கையெழுத்திட்ட ஒரு காகிதம் காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. http://www.nytimes.com/slideshow/2010/06/04/arts/design/20100604-CLEO-ss.html?ref=design

வாழ்ந்து கெட்ட ஐஸ்லாந்து: ஐஸ்லாந்தின் சமீபத்திய mid_reaktion-9781861896612-wasteland-with-wordsபொருளாதாரச் சரிவுகள் பற்றிப் படித்திருப்பீர்கள்.  உலகப் பங்குச் சந்தையில் சூதாடித் தோற்ற பல வங்கிகளில் ஐஸ்லாந்தின் முதலீட்டைப் பெற்ற வங்கிகள் பல.  ஐஸ்லாந்து இப்போது பிரிட்டனின் அரசுக்கும், வங்கிகளுக்கும் ஏகப்பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை.  கிட்டத்தட்ட கிரீஸ் நாட்டைப் போலத்தான்.  கிரீஸ் நாட்டுக்குப் பன்னாட்டு முதலீட்டாளர்கள், கடனைத் திருப்பிக் கொடு அல்லது தீவுகளையே விற்றுப் பணத்தைக் கொடு என்றார்கள்.  கிரீஸ் 1000 தீவுகள் கொண்ட நாடு என்று சொல்வார்கள்.  ஆயிரத்தில் பலவும் சிறு திட்டுகள்.  சிலவற்றில் ஒரு வீடு அல்லது 10 வீடுகள்தாம் இருக்கும்.  இவற்றை உலக  முதலீட்டாளர்களில் பெருமுதலைகள் மலிவு விலைக்கு வாங்கித் தம் தனியார் படைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பான இடமாக மாற்றி, அவற்றில் பெரும் மாளிகைகளைக் கட்டி உலக ஊடகங்களின் பார்வையில் இருந்து தப்பித்து வாழப் பயன்படுத்துகிறார்கள். அதே போல மேலு நூற்றுக் கணக்கான முதலைகள் இந்த மாதிரித் தீவுகளை விற்கச் சொல்லி கிரீஸ் நாட்டை வற்புறுத்துகிறார்கள்.  ஐஸ்லாந்தில் தீவுகள் இல்லை.  ஆனால் பல நகரங்களில் சமீபகாலத்தில் கட்டப்பட்ட பளபளப்பான வீடுகள், கட்டிடங்கள் மலிவு விலைக்கு வந்திருக்கின்றனவாம். இந்த ஐஸ்லாந்தில் வாழ்க்கை எத்தனை துன்பமாக இருந்தது, 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தான் பெரு முன்னேற்றங்கள் நிகழ்ந்தன, எப்படி அந்த மாற்றம் நிகழ்ந்தது என்று விவரிக்கும் “Wasteland With Words: A Social History of Iceland” என்ற புத்தகம் சமீபத்தில் வெளி வந்தது.  அது பற்றி எகானமிஸ்ட் பத்திரிகையில் வந்த மறுபார்வைக் கட்டுரை இது:

http://www.economist.com/node/16213940?story_id=16213940&fsrc=rss

இந்தியர்களின் கண்பார்வைக் குறைபாடு: 091122-eye-742460இந்தியாவில் கண்பார்வை இழந்தவர்கள் நிறைய. அவர்களில் பெரும்பங்கினர் முதியோர்களும், சிறுவர்களும்.  சிறுவர்கள் பார்வை இழப்பது பல நோய்களால், குறிப்பாக உடலில் சில முக்கியச் சத்துகள் குறைவாக இருப்பதால் பார்வை இழப்பு நேர்கிறது.  குறிப்பாக விடமின் ஏ குறைவாக இருக்கும் குழந்தைகளுக்குப் பார்வை பழுதுபடுகிறது, கவனிக்கப்படாவிட்டால் பார்வை போய் விடவும் வாய்ப்புண்டு. வேறு சில காரணங்கள்- measles எனப்படும் தட்டமமையும், exposure keratitis, herpes simplex keratitis ஹெர்பீஸ் முதியோர்களில் பெரும்பங்கு நீரிழிவு நோயால் ஏற்படுகிறதென்றாலும், கணிசமான எண்ணிக்கையினர் கண்களில் திரை எனப்படும் ரெடினாவின் திசுக்கள் சிறிது சிறிதாக உயிரிழந்து போவதால் நேர்கிறது என்று மருத்துவம் சொல்கிறது.

http://www.gizmag.com/retina-created-from-human-stem-cells/15243/

http://www.bmj.com/cgi/content/full/327/7418/760
http://www.gizmag.com/student-creates-self-healing-concrete/15237/

01glob-articlelarge

நஞ்சாகும் இந்தியக் கிணறுகள்: பல ஆசிய நாடுகளில் கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆர்ஸெனிக் என்னும் கொடும் விஷம் கலந்த நீர்தான் கிடைக்கிறது.  இந்த நீரை அருந்தும் ஆசிய மக்கள் பலவகை நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.  இந்தியா, வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இந்தப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.  இது குறித்து சொல்வனத்தில் முன்னதாக ஒரு பதிவைக் கொண்டு வந்திருக்கிறோம்.  இன்றைய கட்டுரையில் நியுயார்க் டைம்ஸில் வந்த செய்தி கொடுக்கப் படுகிறது.  இதில் உள்ள செய்திப்படி, எல்லாக் கிணறுகளும் இப்படி நச்சாவதில்லை, நஞ்சு கலக்காமல் சில வகை மண் உள்ள இடங்களில் தோண்டினால் பாதிப்பு இல்லாமல் கிணறுகள் தோண்டிப் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இமயமலை சார்ந்த வெளிகளில் அடிமண்ணில் உள்ள பண்டைக்காலக் கரியடுக்குகளில் இருந்துதான் இந்த நஞ்சு கசிகிறது, அந்தக் கரியடுக்குகள் இல்லாத ஆரஞ்சு நிற, செம்மண் நிற மண்ண்டுக்குகள் இருக்கும் பகுதிகளில் கிணறுகள் தோண்டி, அழுத்தம் அதிகம் கொணராத கைக் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்தால் நஞ்சு கலக்காமல் தண்ணீர் கிட்டும், இதர மண்படிவங்கள் உள்ள பகுதிகளிலும் பாசனத்துக்கு நீர் எடுப்பது எப்படி என்று இந்தக் கட்டுரை சொல்கிறது:

http://www.nytimes.com/2010/06/01/health/01glob.html?ref=health