மூன்று கவிதைகள்

உடல்

மெல்லிய இசை இழையும்
ஒரு பின்னிரவில்
நீரோடு மிதந்து செல்லும்
உதிர்ந்த சருகு
மிதமான காற்றில்
தன் நகர்தலின் வலி அறியாது
அசைகிறது காகிதம்
மெல்லக் கேட்கும் மூச்சொலியில்
பொதிந்து கிடக்கும் வேகத்தை
பேரிரைச்சலாக்கிக் காட்டுகிறது
தத்தித் தத்தி நகரும் கடிகார முள்red-horse2
பெரும் உறக்கத்துடன்
திறந்து கிடக்கும் விழிகளில்
சத்தமின்றி
தோன்றித் தோன்றி மறையும்
தொலைக்காட்சி வெளிச்சம்
ஏதோ கனவு கண்டு
தானறியாமல் அவள் சிரித்த மின்னலுடன்
மலரும் தாழம்பூ வாசமதில்
அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது
ஆறுதலை நாகம்

line


நான்

யாருக்காகவோ
உருவாக்கி வைத்திருந்த
வார்த்தைகளை பொறுக்கி எடுத்து
பேசக் கற்றுக்கொள்ளும்
மகன் மீது எரிந்து விழுகிறேன்
வார்த்தைகள் தரும் அர்த்தங்கள்
கானகமெங்கும் முள்ளாய் பரவancient_horse2
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிந்தவன் கண்முன்னே
பைக்கில் ஏறி உட்கார்ந்து
உதடு சுளுக்கிச் சிரிக்கிறான்
என்னை முறைக்கும்
மனைவியைப் பார்க்காத
பாவனையில் வெளியேறும்
என்னை வழி மறிக்கும் மகன்
அம்மாவின் வார்த்தைகளை ஒப்புவிக்கிறான்
உனக்கு யார் மீது கோபம்?
line
இன்னும் சில கிறுக்கல்கள்

பொழுது போகாத நேரத்தில்
அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்
சுவற்று ஓவியங்களில் இருந்து
வீட்டுக்குள் ஓடி வந்தன
பசுவொன்றும் அதன் கன்றொன்றும்terracotta_sculpture_ps23_l
அவற்றின் விசித்திர உருவத்துடன்
என்னைச் சுற்றி அத்தனை பேரும் நடனமிட
என் ஓவியத்தில் இருந்து நான் இறங்கி வருகிறேன்
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் என்னைப் பார்க்க
எனக்கே பாவமாக இருக்கிறது
இடி இடிக்கும் ஒரு நொடியில்
அத்தனை பேரும் ஓவியமாகிப் போனார்கள்
வீடெங்கும் கிறுக்கும் குழந்தையை
இனி திட்டக்கூடாது என நினைத்துக்கொண்டே
நான் என் ஓவியத்தைத் தேடி ஓடுகிறேன்
line