சமூக வளர்ச்சி குறித்து ப்ரிட்ஜாப் காப்ரா

ப்ரிட்ஜாப் காப்ரா பிரபல அமெரிக்க எழுத்தாளர். கிழக்கத்திய தத்துவங்களுடனான நவீன அறிவியல் முடிவுகளின் ஒத்திசைவை தன்னுடைய பல நூல்களில் பதிவுசெய்திருக்கிறார். “இயற்பியலின் தாவோ”(Tao of Physics) இவருடைய பிரபல நூல்களில் ஒன்று. மனித சமூகத்தின் இன்றியமையாத கூறான “வளர்ச்சி” குறித்து காப்ரா பேசுகிறார். இயற்கையின் வளர்ச்சி செயல்பாடானது எண்ணிக்கை அடிப்படையில் இயங்காமல், தரத்தின் அடிப்படையில் இயங்குவதால் தான் அது என்றைக்கும் நீடிக்கும் தன்மையை பெற்றிருப்பதாக கூறுகிறார். ஆனால் மனித வளர்ச்சி பொருள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளக்கப்படுவதால், அந்த வளர்ச்சியே மனித குலத்தை அழிவிற்குள் தள்ளிவிடும் என்கிறார். இந்த ஒளிப்படம் காப்ராவின் சிந்தனையை இன்னும் விரிவாக அறிய உதவும்.