உங்கள் காலடி உலகில்..

1)

எண்ணம்

பறக்கப் பார்க்கிறது,
ஜன்னல் கம்பிகளிடையே
சிலந்தி வலையில்
சிறகு விரிந்த
பறவை.

2)

உங்கள் காலடி உலகில்..

உங்கள் தனிமையில்
நான் இரவின் சத்தமாகக் கரைந்துவிட்டேன்..
உங்கள் மழைக் கொண்டாட்டங்களில்
குதித்து விளையாடினேன்..
உங்கள் கோடையில் இறந்துவிட்டேன்,
உங்கள் காலடி உலகின்
வெட்ட வெளியிலே.

3)

விழுங்கினான்
அவ் வற்புத வார்தைகளை.
ஆத்மன்
வலுப்பெற்று உயிர்த்தது…
ஆழ மறந்தான்,
தன் வறுமை நிலையையும்,
தன் உடலின் நிலையாமையையும்.
ஆடி மகிழ்ந்தான்,
தன் வாழ்வின் வேதனைகளில்.
இச்சுதந்திரச் சிறகுகள்,
நம்புங்கள்,
ஒரு நூலளித்தப் பரிசு!
இறுக்கம் தளர்ந்த
மனம் தரும் விடுதலை!

குறிப்பு :

1. மூன்றாவது கவிதை ‘எமிலி டிக்கின்சன்’ எழுதிய கவிதையின் மொழி பெயர்ப்பு.

2. இதில் ‘உங்கள் காலடி உலகில்..’ எனும் கவிதை ஒரு காட்சியின் உந்துதலால் எழுந்த எண்ணம்.அதன் புகைப்படத்தை இந்த இணைப்பில் காணலாம்.என் விடுதி பின்புறத்தில் வெயிலில் வாடி உயிர் இழந்த தவளையின் இப்படத்தை நானே எடுத்தேன்.கணினியில் சற்று மாற்றியிருக்கிறேன். – ச.அனுக்ரஹா