பராகுவேயைச் சேர்ந்த ஜோக்வின் பால்ட்வின் (Joaquin Baldwin) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அனிமேஷன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது உருவாக்கிய Papiroflexia என்ற அனிமேஷன் குறும்படம் இது. இயந்திரமயமாகி வரும் உலக வாழ்க்கையை வெகு அழகாகக் காட்சிப்படுத்திய இப்படம் யாருமே எதிர்பாராத வகையில் 2008-ஆம் ஆண்டின் கான் திரைப்படவிழாவின் இறுதிச்சுற்றுக்குச் சென்றது. 2009-ஆம் ஆண்டில் இவரது இரண்டாவது அனிமேஷன் திரைப்படம் பிக்ஸார், டிஸ்னி போன்ற பெருந்தலைகளோடு போட்டி போட்டு வெற்றி பெற்றது.