வாசகர் எதிர்வினை

வணக்கம் அன்பு வாசகன் தி.வீ.சரண் எழுதுவது….

எஸ்.இராமசந்திரன் நேர்காணல் மிக மிக அருமையாக இருந்தது. ….

மிகத் துல்லியமாகவும் விளக்கமாகவும் பதில் தந்து இருக்கிறார் எஸ். இராமச்சந்திரன்.

” தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதைக்கூடச் சீரணித்துக் கொண்டிருக்கும் நாம் கேளிக்கை ஊடகமான திரைப்படத்தில் உள்ள வரலாற்றுச் சித்திரிப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுவதும் சரியானதுதாமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ”                ( ராமச்சந்திரன்)

மிக மிகச் சரியான கருத்து….எது தேவையோ அதை மக்கள் செய்வது இல்லை….நவகண்டம், ராஜ ராஜன் கருத்துக்கள் மிகவும் உபயோகம்…நன்றிகள் எஸ்.இராமசந்திரனுக்கும் ,ஜி . சுவாமிநாதனுக்கும், சொல்வனத்திற்கும்…..

அன்பு வாசகன்
தி.வீ.சரண்

Dear sir,
I wish to point out that ” Chanror Kulam” mentioned in the Copper plate of Avalpunthurai and Thirumurugan poondi (Kongu Nadu) does not denote Sanaar(Nadar).

It refers to Vettuvar (Vettuvan-Vettuva gounder,Vedan-Vettuva gounder,Kaavilan-Kaavili gounder,Poovilan-Pooluva vettuva gounder and Maavilan-Mutharaiyar) only.

Verban,Silamban, Ayinan,Kizhavan, Mazhavar,Kongar and Muthu Raja are Vettuvar only. Velirs are Vettuvar only.

Reference: Vettuvar Samuga Avanamgal and History of Gurukulam.

Anand kumar

அன்புள்ள ஆசிரியருக்கு

19-02-10 இதழ் படித்து மிக உற்சாகமாக உணர்ந்தேன். தொடர்ச்சியாக வரலாறு, அறிவியல் புனைவு போன்றவற்று நீங்கள் இடமளிப்பது முக்கியமானது. நீங்கள் எப்படி எழுத்தாளர்களை கண்டுபிடித்து எழுத வைக்கிறீர்கள் என்பது மிக ஆச்சரியமாக உள்ளது. சொல்வனம் தமிழ் தீவிர எழுத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது என்பது எனது ஊகம்.


Regards
R.Abilash

Dear Editor,

I am very happy to read the article about Mr Venkat Swaminathan, whom I respect a lot.  ……….

I have to apprceiate you for publishing a dialogue between solvanam and a historical researcher about the movie “Aayiraththil oruvan”. Shybas.

I really enjotyed Sujatha Desikan’s article.The article starts with some literary evidence and continues by providing scientific information with a sense of humour. Basically Mr Desikan is well informed.

Thank You
Dr. Lakshmi

‘உரிமை இழப்பின் பதிவுகள்’ கட்டுரையில் கூறியுள்ளதைப் போல் கமலின் ‘எனக்குள் ஒருவன்’ மதுமதியின் பரிணமிப்பு அல்ல. மைக்கேல் ஸராஜின் (Michael Sarrazin) நடித்த ‘Reincarnation of Peter Proud’ என்கிற படத்தின் அப்பட்டமான காப்பி. ஒரு முக்கியமான வித்யாசம். அசலில் (அஜீத்குமார் படம் இல்லை) இரண்டாம் பிறவியிலும் அதே நபரால் கதாநாயகன் கொல்லப்படுவான். ‘தமிழில் ஏன் அப்படி எடுக்கவில்லை’ என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். அப்படி எடுத்து கமல் இறந்திருந்தால் இந்த அளவுக்குக் கூட படம் ஓடி இருக்காது.

அன்புடன்
வ.ஸ்ரீநிவாசன்.