சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?


உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
*திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை

உண்மையை திரையிட்டு மூடி
புகழ் பெற்றுக்கொள்ளும் கொலைகாரர்களை
மனசாட்சிக்கு
இலக்கு வைக்கும் துறவிகளை
திஸ்ஸ கண்டாரா

உண்மையான உரிமைக்கும்
எழுதிய எழுத்துக்களுக்கும்
ஷெல்குண்டு வைத்தாலும்
திஸ்ஸ கண்டாரா
சத்தியத்தின் தாமரை
பூத்து வருவதை

மூலம் – அரவிந்த (சிங்கள மொழியில்)

*திஸ்ஸ-ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்- தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியதால் இலங்கை அரசால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி முதல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் இன்று (13-01-2010) விடுவிக்கப்பட்டுள்ளார்.