
வணக்கம்.
இணைய இதழ் இனிய இதழாக இருந்தது. அதிலும், சுகாவின் ரசனை (சொக்கப்பனை) அட்டகாசம். வாழ்வின் தட்டுப்படாத மூலைகளுக்கும் எழுத்தாளனின் பேனா விஜயம் செய்யும் என்பார்கள். சுகாவோ, தான் பார்த்த நிகழ்வுகளை பல ஆண்டுகள் கழித்து, வட்டார பாஷையுடன் ரசிக்கச் செய்கிறார். குஞ்சுவின் மகன் கடைசியில் வருவது, ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் இருக்கிறது.
சென்ற இதழில் மிஷல் டானினோ-வின் ‘திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்’ மொழிபெயர்ப்பு கட்டுரை கண்டேன். ஆரிய – திராவிட மாயை குறித்த அவரது விளக்கம் தெளிவாக இருந்தது. மானுடவியல் அறிஞர்கள், மொழியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணியை, சரித்திர நிபுணர் என்ற பெயரில் ஆர்.எஸ்.ஷர்மா போன்ற அரைகுறைகள் செய்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள் ஏராளம். சரித்திரத் திரிபுவாதிகளும், ஆங்கிலேய தாசர்களும் அவ்வாறு பதித்துச் சென்ற பிதற்றல்களே இன்றும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது வெட்கக்கேடு.
தொல்காப்பியம் தான், தமிழின் பழமையான இலக்கண நூல். இதில், சொற்பிறப்பியல், புணரியல் உள்ளிட்ட பகுதிகள் (எழுத்ததிகாரம்) எழுத்துக்களின் பிறப்பு குறித்து விளக்கமாகக் கூறுகின்றன. சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம் குறித்துப் பேசப்படுகிறது. இவற்றின் உதவியால் தற்போதைய தமிழ் சொற்களை ஆராய்ந்தால், அவற்றில் பல தமிழ் அடிப்படை இல்லாதவை எனத் தெரிய வரும். உண்மையில் அவை, வடமொழி என்று இலக்கண நூற்களால் சுட்டப்படும் சமஸ்கிருதத்தின் தொடர்பால் தமிழுக்குக் கிடைத்த வார்த்தைகள். மக்களின் புழக்கத்தில் இத்தகைய சொல் பரவலாக்கல் இயல்பானதே.
திராவிடம் என்பதே கூட வடசொல் தான். வட சொற்களைப் பயன்படுத்துகையில் புணரியல் விதிகளுக்கு அவை உட்படத் தயங்குவதை இயல்பான எழுத்து நடையிலேயே உணர முடியும். (குணம், வீரம், தனம், பந்தம், சூரியன், சமம் போன்றவை சில உதாரணங்கள்). இதே போன்ற சொற்கடன் சமஸ்கிருதத்திலும் தமிழிலிருந்து சென்றதா என்பதைப் பற்றி ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரிய வரும். எனினும், ஒரு காலத்தில் பண்டிதர்களின் மொழியாக நாடு முழுவதும் விளங்கிய சமஸ்கிருதம் தனது சொற்களை இயல்பாகப் பரவ விட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றவற்றிலும் இத்தகைய போக்கை காண முடிவதாக மொழியியலாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய மொழிப் புழக்கத்தையே ஆரிய படையெடுப்புக்கு நமது அறிவுச்சீவிகள் (அறிவு ஜீவிகள் தான்) உதாரணமாகக் காட்டுவது நல்ல தமாஷ்.
இந்த அடிப்படையிலும் மிஷல் டானினோ தனது வாதத்தை மேலும் தொடர்வது, நாட்டிற்கு நலம் தரும். நல்ல கட்டுரையை வெளியிட்ட சொல்வனத்திற்கு நன்றி.
வா.மு.முரளி

ஐயா,
ரவி நடராசனின் டிகிட்டல் இசைப்புரட்சியின் தாக்கம் பகுதி மிகவும் நேர்த்தி. அவர் படிக்கும் காலத்திலிருந்தே இசையின் பால் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரின் அறிவார்ந்த கட்டுரை புதியன புகுதலின் மிரட்சியையும் பழயன கழிதலின் சோகத்தையும் படிப்பவர் நெஞ்சில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அடுத்தடுத்து வரும் அவரின் கட்டுரைக்காக காத்திருக்கிறோம்.
நன்றி.
சோ. முத்தைய்யா

Dear Editor,
Just read the Ravi Natarajan’s article and felt compelled to send you an immediate response: brilliantly written and the example songs really convey the impact of digital technologies on Tamil movie music in particular and music in general. Congratulations on finding such good authors for your publication. I have now bookmarked solvanam!
Thanks!
Sincerely,
Swami Manohar

I very much appreciate the article by ravi natarajan on digital music effect on the yester years heavily hard work-laden classic methods of light music While modern methods are forced on the system because of better techniques etc the appreciative part is left to rasikas who naturally fall a prey to better technicalities.
It looks asthough works of such greats of yester years will be submerged in modern advance-technical music wherein of course technical creations play an important part.
The ‘fineness of Fine arts’ is drowned in the ‘fineness’ of technical advancement
N.Ramabhadran

A fantastic script from suka. He gets a sweet hand whenever he write about music.I don”t know about “lalitha or mayamalavagowlai”: but know about “maasaru ponnae”,”manjal nilaavukku indru orae mugam”.Now i get the figure of “lalitha”.Thanks to suka
ponnaiyan raja