
Dr M S Shri Lakshmi
Dear Editor,
I have read the November issue.As usual I have enjoyed Mr Desikan’s article and Rangu’s article.Jayanthi sankar from our country also wrote a story.
Thank you
Dr Lakshmi

டெட் சியாங் சிறுகதை வெகுசுவாரசியமாகப் போகிறது. நல்ல சரளமான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
கணேஷ்.வி.

ஆசிரியருக்கு,
இந்தவார சொல்வனம் இதழில் எல்லாப் படைப்புகளுமே அருமை.
நிழல் நந்தி .
இக்கட்டுரை நமக்குச் சொல்லும் சேதிகளாக நான் நினைப்பது
நாம் நமது அழகுணர்ச்சியையெல்லாம் இழந்துவிட்டு வெறும் போலி படாடோபங்களைப் பார்த்து வியக்க ஆரம்பித்திருக்கிறோம்.
நமது கலைப் படைப்புகளைப் பற்றிய குறைந்த பட்ச புரிதலோ, அதன் மேன்மைகுறித்த பெருமிதமோ இன்றி இருக்கிறோம்.
நமது கோவில்களின் சிற்பங்கள் சிலரது பேராசைக்காக மூளியாக்கப்பட்டு வருகின்றன.
மிக நல்ல படைப்பு.
இக்பால் மொஹமதுவின் படங்கள் அனைத்தும் அருமை.
———————-
அது அவள் அவன் ..
நல்ல நகைச்சுவையுடன் கூடிய சுகாவின் இக்கட்டுரை ரசனைப் பகுதியை நன்றாக்கியது.
——————-
புரிந்துகொள் – பாகம் 2
மிக விறுவிறுப்பாக போகும்படிக்கு அழகாக மொழிபெயர்த்துள்ளார் மைத்ரேயன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமை. கதையும் சரி, மொழிபெயர்ப்பும் சரி..
—————————–
சாத்தியத்தை மீறிய சாத்தியங்கள்.
இதுவரை ராமன் ராஜாவின் கட்டுரைகளை படித்து படித்து மகிழ்ந்து வந்தேன். எனக்கு ராமன்ராஜா அறிமுகம் ஆனதே சொல்வனத்தில்தான். இந்த வார கட்டுரை அவரது நகைச்சுவைத் திறனுக்கும் அவரது அறிவியலை ஜனரஞ்சகமாய் சொல்லும் பாங்குக்கும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.
————————————–
வடுவூர் துரைசாமி அய்யங்கார்
வடுவூர் துரைசாமி அய்யங்கார் பற்றிய கட்டுரை மிக நல்லவிதமாய் வந்திருக்கிறது. இந்த வறண்ட தலைப்பையும், அழகாக படிக்கக் கொடுத்திருக்கிறார் திருமலைராஜன் அவர்கள். 21ம் நூற்றாண்டிலும் தமிழ் எழுத்தாளர்கள் வேறு வேலை செய்தால் தவிர பிழைக்க முடியாது எனறிருக்கும் காலகட்டத்தில் எழுத்து வாசனையே மிக அரிதாய் இருந்த அந்தக்காலத்தில் விரும்பி வாசிக்கப்படும், நல்ல லாபகரமான எழுத்தாளராக இருந்திருக்கிறார் என்பதை அறியும்போது, நம் எழுத்தாளர்கள் மீதுதான் சந்தேகம் வருகிறது. 🙂
வடுவூரிலிருந்து எழுதி சம்பாதித்து சென்னையில் வீடுகட்டிக் குடியேறவேண்டுமெனில் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்?
வழக்கம்போல அதீத தன்னம்பிக்கையில் அவர் செய்திருக்கும் ஆராய்ச்சி(??) நூல் அவரது வாழ்க்கையை முடித்து வைத்திருக்கிறது.
நிச்சயம் நல்ல ஒரு பதிவு இது.
அப்படியே அல்லயன்ஸ் புத்தக கம்பெனியின் விலாசத்தையும் கொடுத்திருக்கலாம்.
————————
இது தவிர
சென்னையில் அடைமழை, புத்திசாலியான முட்டாள் ஆகிய கட்டுரைகளும் மனதைக் கவர்ந்தன.
ஜெயக்குமார்