மகரந்தம்

காலியாகும் குடியிருப்புகள்

denmarkடென்மார்க் போன்ற ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் திரவியம் தேடி மக்கள் நகரங்களுக்கு படையெடுப்பதினால், அந்நாட்டின் சிறு ஊர்களில் குடியிருப்புகள் மிக வேகமாக ஆளற்ற பிரதேசங்களாகி வருகின்றன. வாழ்க்கைப் பரபரப்பற்ற, மந்த கதி ஆளும் குடியிருப்புகள். வருங்காலத்தில், இந்தக் காலி “இடங்களை” குத்தகைக்கு வாங்கி, இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்களை குடியமர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது இக்கட்டுரை.

கணையமும் ஷவர் குளியலும்

pancreasமனித உடலின் பல்வேறு உறுப்புகள் குறித்தும் விஞ்ஞானம் தன்னுடைய கண்டுபிடிப்புகளை முன்வைத்துள்ளது. கணையம்  உடலில் ஒரு இடுக்கில் எளிதில் கவனிக்க முடியாத வகையிலும், உருவில் சிறியதாகவும்  அமைந்திருப்பதால்  இது நாள் வரை பெரியளவிலான ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. அதை வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே எண்ணியிருந்த காலம் கூட உண்டு. ஆனால் தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கணையத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு புது தகவல்களை அடுக்குகின்றன. ஒரே சமயத்தில் மனித உடலுக்கு நன்மை விளைவிக்கும் விதமாகவும், அதே சமயம், தீங்கு விளைவிக்க கூடிய சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கிய கணையத்தை குறித்து பல தகவல்களை தருகிறது இக்கட்டுரை.

ஷவர் குளியலை விரும்புபவரா நீங்கள்? ஆம் எனில் இதையும் படித்துவிடுங்கள். இனி குளிக்கையில் தனியனாக இருப்பதாக வருந்தவேண்டாம். துணை நிறையவே உண்டு. ஆளை விடு என்று துண்டோடு குளியலறையை விட்டு ஓடத் தோன்றலாம்.  அல்லது இந்தியருக்கு இதெல்லாம் என்னய்யா பெரிய இது என்று போவோமோ என்னவோ, யார் கண்டது?  நம் குளம், குட்டை, ஏரி, ஆற்றுக் குளியலே தேவலை என்றும் தோன்றலாம்.

இருவர்

Courtesy : russiablog.org
Courtesy : russiablog.org

பல நூற்றாண்டுகளாக ஜனநாயகத்தை மறுத்து, அடக்கு +  அடுக்குமுறை ஆட்சி மட்டும் மக்களுக்குக் கிட்டும் துரதிருஷ்டம் வாய்ந்த ரஷ்யாவில், இந்த இருவர் தாங்கள் ஒரே தேசத்தில் இருந்த போதிலும், இருவேறு உலகங்களில் வசிப்பதாக உணர்கின்றனர். வருங்காலம் குறித்த கனவுகளுடன், தங்கள் கடந்தகாலம் குறித்துப் பேசியபடியே இருவரும் ரஷ்யாவின் நூற்றாண்டு வரலாற்றை நம்முன் விரிக்கும் ஒரு கடிதப் போக்குவரத்தை இங்கே படிக்கலாம். மூச்சு முட்ட முட்ட அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு சமூகத்தின் குமுறலை வெளிப்படுத்திச் செல்லும் இது போன்ற கடிதங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் ஏகாதிபத்திய கனவுகளில் மிதக்கும் பல்வேறு அமைப்புகளுக்கான மரண சாசனமாக அமையட்டும்.

விலங்குகளின் கணிதத் திறன்

CB028846மனித குலத்திற்கு மட்டுமான சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்ட வந்த எண் அமைப்பு,  விலங்குகளிடமும் இருப்பதைப் பல்வேறு தற்போதைய ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. கடந்த நூறு ஆண்டுகளாகவே இது குறித்த சர்ச்சை நிலவி வந்த போதிலும், தற்போதைய முடிவுகள் இது குறித்த வலுவான ஆதாரங்களை முன்வைக்கின்றன.