வாசகர் எதிர்வினை

indian-home

முறுகல் தோசை மனிதன்’ குறித்து: வாஸ்தவம். எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என எண்ணுவது இயல்பு. அது நாளைடைவில் எனக்கு வேண்டுவன என்று ஒரு நிலையில் கட்டுண்டு நிற்கும். ஆனால், இன்றைய சலிப்பின் காரணம், எதையெல்லாம் படிக்கிறோமோ அவற்றிலெல்லாம் நம் பங்கு இருப்பதாய் எண்ணுகிற ஒரு மாயையே. அது தான் எல்லாவற்றையும் மேய்ந்து பார்க்கச்சொல்கிறது.

மனிதர்கள் தங்கள் வேறுபட்ட விருப்பங்களினால்தான் ஸ்வாரஸ்யமானவர்களாக இருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது, இது வயப்படும்.

அன்புடன்,
ஈரோடு நாகராஜன்.

east_india_post_card

திரு ராமன் ராஜா அவர்களின் “முறுகல் தோசை மனிதன்” கட்டுரையைப் படித்தேன். மிக ஆழமான ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். இது சார்ந்த மற்றொரு முக்கியமான கருத்தையும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த இண்டர்நெட், கூகுள் வென்றானைக் குலம் வென்றான் – ஆக்கி விடுகிறது.. அதாவது நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான்களை போல பல ’அறிவாளிகளை’ மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. இணைய தளத்தின் மூலம் மிகவும் கடினமான பொருள் புதைந்த விஷயத்தில் தான் மேலோட்டமாக அறியும் தகவலை, இந்தத் தற்காலிக ஜீவிகள் கோர்வையாக அள்ளித் தெளித்து அடிக்கும் கொட்டம் பல சமயங்களில் எரிச்சலூட்டுகிறது.

ஒரு புறம் இண்டர்நெட்டின் ஆதிக்கம் நம்மை ஆட்டி வைப்பது உண்மையேயானாலும் அன்றாட வாழ்கையில் அதன் பலனையும் கை கூடாகக் காண்கிறோமே.. உதாரணமாக, வெளிநாட்டில் வசிக்கும் நான், ஒரு சாதரண வலைத் தொடர்பை மட்டுமே வைத்து மணிக் கணக்கில் ஊரில் இருக்கும் என் குடும்பத்தினருடன் இலவசமாக உரையாடுதல் போன்றவை எளிதில் சாத்தியமாகிறது.  நான் பள்ளியில் பயின்ற போது “டீ . வீ. இஸ் எ நெஸசரி ஈவில்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி ஆங்கிலப் பரிட்சையில் ஒரு கேள்வி தவறாமல் வரும். இப்போது நம் குழந்தைகள் “இண்டர்நெட் இஸ் எ நெஸசரி ஈவில்” என எழுதுவார்கள் என் எண்ணுகி்றேன் ..

எது உண்மையோ இல்லையோ, மக்களுக்குத் தமக்கிருக்கும் கொஞ்ச கவனத்தை, பல திசைகளில் பரப்புவதில் மட்டுமே ஆசை. ஏதாவது ஒரு திசையில் ஆழமாக பயணிக்க தேவையான உரம் சராசரி மனிதனின் நெஞ்சிலிருந்து குறைந்து வருகிறது என்பதை நான் ஆமோதிக்கிறேன்.

அன்புடன்
விக்கி

shyama_shastri

Aksharam:
A VERY NICE AND COMPREHENSIVE REVIEW.
Both Ganeshji and Kumareshji appreciated your work.

Best wishes,
Ram
http://www.ganeshkumaresh.com

Dear editor,
I know about your e-magazine through vadakkuvasal.The name solvanam is very impressive. I enjoyed reading the articles especially by Dr Kamil Zveleble, Mr Venkat Swaminathan and Thirumalai rajan. As a literary person from Singapore ( Dr M S Shri Lakshmi., a Tamil scholar) I am very happy to congratulate you to publish a qualitative e-magazine.

Scientific articles are also informative. Syabaash! Go ahead. I am very proud to be a reader of this magazine.

Thank You
Dr M S Shri Lakshmi

288-1முறுகல்தோசை மனிதன் கட்டுரை கணினி நமது எண்ணங்களையும்,  செயல்பாடுகளையும் எப்படி மாற்றி அமைக்கிறது என்பது குறித்து மிக எளிமையாய் எழுதப்பட்டுள்ள அருமையான கட்டுரை. இன்றும் எனக்கு வலைப்பக்கங்கள் மேய்வதைக்காட்டிலும் புஸ்தகம் படிப்பதில்தான் திருப்தி கிடைக்கிறது. இதற்காக இந்தியாவிலிருந்து இங்கே வரும் யாரையும் தொந்தரவு செய்யத் தயங்குவதில்லை. இந்தக் கட்டுரையை ஒரு சிறு புன்முறுவலுடனேயே படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் கடைசி வரி அருமை.

நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்:

“முனைவர்” கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்கள்தானே இக்கட்டுரையை எழுதியது??

இந்தப் பயணக்கட்டுரையிலும் எல்லா விஷயங்களையும் இணைத்து ஒரு அழகான கட்டுரையாக்கி இருக்கிறார். மவுரி இனத்தவர் நியூசிலாந்துக்கு குடியேறிய விதம், அவர்களைச் சுரண்டி வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மவுரிகளுக்கு இன்று இருக்கும் மரியாதையும், அழகாக எடுத்துச் சொல்வதுடன் எப்போதும் உள்ளூர்க்காரர்களுக்கு வெளியூர்க்காரர்களால் ஏற்படும் ஆபத்தை அவர்கள் அனுபவிப்பதையும், அதற்காக அவர்களது உரிமைப்போராட்டத்தைப் பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார். இந்தப் பயணக்கட்டுரை ஒரு கதை படிப்பது போல போலிருந்தது..

வேலையற்றவனின் பகல்:

தாய்ப்பாசம் மகன் சம்பாதிக்காவிட்டாலும் எப்போதும் இருக்கும், குறையாது. அதைத்தான் அந்தக்காலத்தில் “கொண்டுவராவிட்டாலும் தாய்” என்றார்கள். உள்ளூர்ப்பழமொழிகளுடன் ஒரு குடும்பத்தின் நிலையை கண்முன் நிறுத்துகிறது இக்கதை. நன்றாய் இருந்தது.

சுகாவின் நிறம் கட்டுரை நல்ல நகைச்சுவையுடன் இருந்தது. எனது வீட்டிலும் எனது மனைவிக்கு என்னையும் எனது அண்ணியையும் கிண்டல் செய்ய கிடைக்கும் விஷயம் இதுதான்.

பப்லுவின் கார்ட்டூன் இன்றைய சிறுவர்களை அழகாகப் பிரதிபலித்தது. நாமெல்லாம் கம்ப்யூட்டர் என்பதை கண்ணில் பார்த்ததே கல்லூரி வந்தபின்தான்.

மாதங்கியின் நாகரீக விருந்துகளில் கவிதை அருமை. கிட்டத்தட்ட இந்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் என நினைக்கிறேன். நவீன மயமாக்கலின் உச்சம் நமது கலாச்சாரத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் உகாத விஷயங்களை நாகரிகத்தின் பெயரால் சுமப்பது.

இந்தவார மகரந்தம் நன்று.

மொத்தத்தில் ஒவ்வொரு இதழும் மென்மேலும் மெருகேறி வருவது பாராட்டுதற்குரியது.

வாழ்த்துக்கள் சொல்வனம் குழுவினருக்கு.

அன்புடன்,

ஜெயக்குமார்