மகரந்தம்

நலம் நலமறிய… உடல் ஆரோக்கியம் குன்றிய மனிதர்களை கவனிக்கவும், இரக்கப்பட நேரமும் இல்லாத அவசர கதி காலம் இது. மருத்துவமனைகளும் சாதாரண நோய்களுக்கு அதிக நேரம் செலவிட தயாராக இருப்பதில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மென்பொருள் இதற்கான தீர்வை அளிக்கிறது.

இந்த மென்பொருள் குறித்து தன் அனுபவத்தை ஒருவர் இங்கு பகிர்ந்துள்ளார்.


சஹாரா சோலைவனம்

Courtey : National Geographic
Courtesy : National Geographic

உலகளவில் அதிகரித்துவரும் தட்பவெப்பம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்த மாற்றத்தால் மனித இனம் மிகப்பெரும் அழிவை சந்திக்கும் என்றும், பெரும் உணவு பற்றாக்குறை தோன்றும் வாய்ப்புகள் குறித்தும் பேசப்படுகின்றன. ஆனால், சில ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் சில எதிர்பாராத நிகழ்வுகள் பலரது புருவத்தை உயர்த்தியிருக்கின்றன. கடந்த சில வருட இடைவெளியில், பாலைவனமாக இருந்த பகுதிகள், தற்போது பச்சைப் பசேலென்று காட்சியளிக்கின்றன. பொதுவாக மழை குறைவாக உள்ள இப்பிரதேசங்களில், மாறிவரும் தட்பவெப்பத்தால் அதிகரித்திருக்கும் மழை இந்நிகழ்விற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


அடுத்த யுக மருந்து

Courtesy : newscientist.com
Courtesy : newscientist.com

உடலின் புற்றுநோய் பாதித்த ஒரு குறிப்பிட்ட பகுதியை குணப்படுத்த செய்யப்படும் சிகிச்சை முறைகள் குறித்துப் பலரும் அறிந்திருக்கக்கூடும். பாதிக்கப்பட்ட செல்கள் மட்டுமன்றி, நல்ல நிலையில் இருக்கும் செல்களும் இந்த சிகிச்சையில் அழிந்துவிடுகின்றன. இன்றைய மருந்துகள் யாவும் பொத்தாம் பொதுவாக, உடலின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுகின்றன. இதைத் தவிர்த்து, மருந்துகளுக்கு எந்த இடத்தில் எந்த அளவில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்த முடியுமா? விஞ்ஞானிகள் அதையும் முயன்று கணிசமான வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.


இருண்ட கண்டம்?!

ஆப்பிரிக்கா இன்னும் இருண்ட பிரதேசமாகவே இருக்கிறதா? பொருளாதாரம், கல்வி என்று எந்த துறையிலும் வளராத நாடா? ஆம், என்பது தான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். இதைப் படித்து விட்டு மீண்டும் ஒரு முறை இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயலுங்கள்.


Courtesy : www.spiegel.de
Courtesy : http://www.spiegel.de

சமூக ஆர்வலர்கள் சீனாவில் சந்திக்கும் இன்னல்கள் அடக்குமுறை அமைப்புகள் என்றென்றும் அறத்தை அஞ்சுகின்றன. தம்மை எதிர்க்கும் சக்திகள் எந்த வடிவில் இருந்தாலும் அதைக் கண்டு அஞ்சாத இவ்வமைப்புகள், அறத்தின் துணை கொண்டு எழுப்பப்படும் குரல்களை மிக மூர்க்கமாக அடக்க நினைக்கின்றன. ஆனால் அறம் தனக்கான குரலைத் தேடி அடைந்து விடுகிறது. சீனாவின் அடக்குமுறையை அற வழியில் எதிர்க்க நினைத்த ஒருவரின் பரிதாப நிலையை விவரிக்கும் கட்டுரை இது. கட்டுரையின் வழியே சீனாவின் காவல் அமைப்பு எவ்வளவு சிக்கலாகவும், மூர்கத்தனத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.