மகரந்தம்

மனம் பிறழ்ந்த கலைமனம்!

Image: Philippe Halsman Courtesy : newscientist.com
Image: Philippe Halsman Courtesy : newscientist.com

மனப்பிறழ்வு நோய்க்கு காரணமான மரபணு, கலைஞர்களின் படைப்பூக்கத்திற்க்கும் துணை புரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கலைஞர்கள் அனைவரும் மனநோயாளிகள் என்றும் விஞ்ஞானம் அறிவித்துவிடவில்லை. இந்த மரபணுவின் செயல்பாடுகளை தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளும் “சாமார்த்தியத்தை” பொறுத்தே ஒரு மனிதன் கலைஞனாகவோ அல்லது மனம் பிறழ்ந்தவனாகவோ மாறுகிறான் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கண்டுபிடிப்பு பல மனோநோய்க்கான மூலகாரணங்களை குறித்து அறிய துணைபுரிவாதாகவும் தெரிவிக்கின்றனர்.


மறைந்தும் மறையாமல்….

Courtesy : www.spiegel.de
Courtesy : http://www.spiegel.de

சமூகத்தின்/நாட்டின் புதிய துவக்கத்தை, முக்கிய வரலாற்றை தருணத்தை நினைவுப்படுத்தும் குறியீடுகள் அனைவராலும் விரும்பப்படும். ஆனால் ஒரு நாட்டின் இருண்ட இறந்தகாலத்தை நினைவுப்படுத்தும் தருணங்களோ, குறியீடுகளோ பரவலாக நிரகரிக்கப்பட்டப்படியே இருக்கிறது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. முக்கிய வரலாற்று தருணத்தின் குறியீடான அச்சுவர், அதே காரணத்திற்காக விரும்பப்படுவதாகவும், வெறுக்கப்படுவதாகவும் இருக்கிறது. புதிய துவக்கத்தையும், இருண்ட இறந்தகாலத்தையும் நினைவுபடுத்தும் சாட்சியாக இருக்கும் அச்சுவர், பல வருடங்களாக மறக்கப்பட்டு ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகவே கருதப்படது. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த சுவரின் நினைவுகள் மக்களின் ஆழ்மனதில் இருந்து மேலெழும்பி, புது கவனத்தை பெற்றுள்ளது.


கணிணித் தகவலில் ஒரு துளி “சிவம்”

உங்களின் பல முக்கிய தகவல்களும், அஞ்சல் பரிமாற்றங்களும் நீங்களே அறியாத ஒரு கணிணியில், உலகின் எங்கோ ஒரு மூலையில் சேமிக்கப்பட்டு விடுகின்றன. இத்தகைய தகவல் சேமிப்பு முறையினால், பெரும்பாலும் உங்கள் தகவல்கள் பிறருக்கு மிக எளிதில் கைவசப்படும் சாத்தியம் அதிகம். இதற்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு, அத்தகவலே தன்னை அழித்துக்கொள்ளும் புது வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


A Woman in Berlin – திரைப்பட அறிமுகம்

இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனி மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது, பல ஜெர்மானிய பெண்கள் ரஷ்ய படையினரால் திட்டமிட்டே கற்பழிக்கப்பட்டனர். மிகுந்த வன்மத்துடனும், கச்சிதமான திட்டமிடலும் கொண்ட பாலியல் ரீதியான போர் இது. பாதிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய பெண்ணின் டைரிக் குறிப்பொன்று 1950-களில் வெளியிடப்படும் வரை இந்நிகழ்வுகள் குறித்து எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், பலத்த எதிர்ப்பின் காரணமாக அந்த புத்தகம் உடனடியாக திரும்பப்பெறப்பட்டது. காலப்போக்கில், கம்யூனிசத்தின் வீழ்ச்சியும், பெண்ணியத்தின் எழுச்சியுடன் மீண்டும் அதே நூல் தற்சமயம் வெளியிடப்பட்டு, அப்புத்தகத்தை தழுவிய ஒரு திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. அத்திரைப்படம் குறித்த விமர்சனம் இது.