
சொல்வனம் முதல் இரண்டு இதழ்களும் சுவாரசியமாக இருக்கின்றன.
அருணகிரி எழுதும் இவ்வுலகம் சூடடைவது பற்றிய அரசியலாக்கப்பட்ட அறிவியல் கட்டுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழலியல் எனப்படும் என்விரான்மென்டலிஸம் அதன் அறிவியல் அடித்தளத்திலிருந்து விலகி நம்பிக்கை சார்ந்த ஒன்றாக அதாவது, ஒரு மதமாகவே மாறிவிட்டது. அதன் காரணமாகவே பசுமை பயங்கரவாதம் (க்ரீன் டெரரிஸம்) என்பதுகூட ஆரம்பித்துவிட்டது.
சுற்றுச்சூழலியல் அரசியலை வைத்துக்கொண்டு ஐரோப்பாவும், அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஆப்பு அடிப்பது ஒருபுறமிருக்க, இந்தியாவினுள்ளேயே இயங்கும் விளிம்புநிலை இடதுசாரிகளும், கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளும் இதை விரைவிலேயே கையிலெடுத்துக்கொண்டு தலைவலி கொடுக்கப்போகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை பெரியாரிஸ்டுகளும் இந்த பஜனையில் சேர்ந்து கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.கட்டை வண்டியில் பயணம் செய்வதே சிறந்தது என்றுகூட இவர்கள் விரைவிலேயே பிரச்சாரம் செய்யக்கூடும்.
ஒரு பக்கம், இந்தியா போதுமான வளர்ச்சியில்லாத காட்டுமிராண்டி தேசம் என்று பிரச்சாரம் செய்வார்கள். அதற்காக இந்து மதம், ஜாதி அமைப்பு, நரேந்திர மோடி என்ற வழக்கமான ’சர்வ ரோக காரணி’களின்மேல் பழியைப் போடுவார்கள். இன்னொரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தொழிற்சாலைகளையும், கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்த முடியாமல் சுற்றுச்சூழல் அரசியல் என்ற முட்டுக்கட்டையைப் போட்டு அங்குல அளவுகூட நகரவிடாமல் செய்யப் போகிறார்கள்.
சீனா போன்ற சர்வாதிகார நாட்டால் மேலை நாடுகளையோ, உள்ளுர் பசுமைத் தீவிரவாதிகளையோ எளிதில் எதிர்கொள்ள முடியும். நம் நாட்டிலுள்ள ’எடுப்பார் கைப்பிள்ளை’ ஜனநாயகம் காரணமாக ஏற்கெனவே முதுகெலும்பற்றதாக ஆகிவிட்ட இந்திய அரசு இயந்திரம் இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கப்போகிறது என்பதைத் தவிர உருப்படியாக ஒன்றும் நடக்கப்போவதில்லை.
– *பா. ரெங்கதுரை*
http://rangadurai.blogspot.com
—oooOOOooo—

இம்முறை இரண்டு கட்டுரை தொகுப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன.
1) ராகம் சிவரஞ்சனி மற்றும் இளையராஜாவின் waltz ம் பற்றிய கட்டுரை. மேற்கத்திய இசையின் கடைநிலை மாணவனாக இருக்கும் என் போன்றவர்களுக்கு இவரின் விவரிப்பு ஆச்சர்ய மூட்டுவதகவும் அதே சமயத்தில் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. இது போன்ற இசை நுணுக்கங்களை விரிவாக விளக்கும் மேலும் பல தொகுப்புக்களை வரும் இதழ்களில் எதிர்பார்கிறேன். மேலும் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசை குறித்த ஒரு comparitive தொகுப்பையும் திரு விஷ்வேஷ் அவர்கள் எழுதலாம், உண்மையில் அது மிகவும் பயன் உள்ள ஒரு தொகுப்பாக இருக்கும்.
2) சேதுபதியின் “வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை “.
சொல்லப்பட்ட தகவல் ஒரு சிறுகதை போலவும் , சொல்லப்பட்ட விதம் ஒரு அழகிய ஆனால் மெல்லிய சோகம் தொனிக்கும் கவிதை போலவும் விளங்கிய மிக பண்பட்ட எழுத்தாக இருந்தது. சேதுபதியின் படைப்பியக்கத்தில் இது ஒரு மைல் கல்லாக விளங்கும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த கட்டுரையின் கருவை முதல் சில வரிகளில் (அனுபல்லவி போல் ) மிக நேர்த்தியாக சொல்லிவிட்டார்.
அருணகிரியின் குளோபல் வார்மிங் குறித்த தொகுப்பும் இம்முறை highlight தான்.
-கோ.டில்லிபாபு.
http://dilvis.blogspot.com
—oooOOOooo—

Solvanam is very interesting.
I am delighted at this unrestricted and unconditional opening up of the Tamil mind through such cyber-journals. This is the beginning of a revolution of the mind, and I hope also of the heart. The Tamil heart has been conditioned and cliched for too long for want of exploratory space.
God Bless
S.S.Sivakumar