மகரந்தம்

keyboard

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி.

லெபனான் தேர்தல்

லெபானானில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போக்கு பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. லெபனானில் வசிக்கும் கிறுத்துவர்கள் அமெரிக்க ஆதரவு கட்சியை நிராகரித்துவிட்டு, இரானிய ஆதரவுக் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். மதரீதியான பிரதிநிதித்துவம், பிற நாடுகள் லெபனானில் செலுத்தும் மறைமுக அதிகாரம் போன்றவை அந்நாட்டின் சமூக/அதிகார அமைப்பை ரொம்பவே அலைக்கழிக்கின்றன. லெபனான் குறித்த ஒரு பருந்துப்பார்வையை அளித்தபடியே, அந்நாட்டின் நிலவும் சமீபத்திய போக்குகளையும் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

கிழக்குஜெர்மனி குறித்த ரகசிய ஆவணப்படம்

உலகெங்கிலும் ஏகாதிபத்திய அடக்குமுறை ஆட்சி மக்களின் ஒவ்வொரு அசைவையும் தனது கட்டுபாட்டில் வைக்க முனைகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை மறுதலித்து, இம்மியிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்டு முயல்கிறது. இதுவே வரலாறு. வரலாறு மீண்டும் தன்னை நிகழ்த்தி கொள்வதும் உண்டு. 1980-களில் கிழக்கு ஜெர்மனி எதிர்கொண்ட இப்படிப்பட்ட ஒரு இருண்ட சமயத்தில், அந்நாட்டின் சிலர் ஒரு ரகசிய சமூகமாக செயல்பட்டு, பிரத்யேகமாக, அதிகாரத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்ட ஆடை-அலங்காரங்கள் மூலம் தங்கள் சுயத்தை வெளிபடுத்திக் கொண்டனர். அந்த ரகசியக்குழுவின் ஒரு உறுப்பினர், இது குறித்த ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார் . மேலும் படிக்க…

அணு ஆயுதங்களின் வரலாறு

அணுஆயுதப் பரவலாக்கத்தின் வரலாறு என்ன? உலக வரலாற்றில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? அணு ஆயுதங்கள் அற்ற உலகம் சாத்தியமா? வட-கொரியாவின் சமீபத்திய அணுஆயுத சோதனையின் பின்ணனியில், புவிசார்-அரசியல் பார்வையில் ஒரு கட்டுரை இங்கே

கூகுள் Vs மைக்ரோசாஃப்ட் தொடரும் யுத்தம்

ஆகப் பிரபலமான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையேயான தொழிற்போட்டி, கணினியைத் தாண்டியும் வளர்ந்துவருகிறது. கைப்பேசி மற்றும் கணினிக்கான இடைவெளியை குறைக்கும் விதமாக பல நிறுவனங்கள் Smartbooks எனப்படும் புது மின்பொறி சாதனத்தை வெளியிட்டுவருகின்றன. மக்கள் மத்தியில் இந்த சாதனம் மிகப்பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சாதனங்களுக்கான இயங்குதளத்தை கூகுள் வெளியிட்டது, Android. மைக்ரோசாப்ட் தன் பங்கிற்க்கு ஒரு இயங்குதளத்தை வெளியிடுகிறது. ஆனால் இந்த முறையும் கூகுளின் கை ஓங்கியேயிருக்கிறது. மேலும் படிக்க…

கண்ணீரின் தேவை என்ன?

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் கண்ணிரின் வரலாறு என்ன? கண்ணீரின் தேவைதான் என்ன? கண்ணீர் எதை வெளிப்படுத்துகிறது? நாம் ஏன் அழக் கற்றோம்? பரிணாமவிய உளவியல் சார்ந்த கட்டுரை இங்கே.