A Special Issue by Solvanam on Music

ஒட்டகம் கேட்ட இசை

வேலைக்குச் சேர்ந்து நாலைந்துமாத சம்பளங்களுக்குப் பிறகு, ஒரு சின்ன கைக்கடக்கமான வானொலிப்பெட்டியை வாங்கினேன். பின்னிரவு நேரங்களில் இலங்கை, சென்னை நிலையங்களிலிருந்து ஒளிபரப்பாகும் பாடல்களால் என் நெஞ்சை நிரப்பிக்கொள்ள அது எனக்கு உற்ற துணையாக இருந்தது. என் தலையணைக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பூனைக்குட்டிபோல அதுவும் படுத்திருக்கும். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதெல்லாம் உருகிக் கரைந்துபோவதுபோல இருக்கும். காற்றிலே ஒரு மெல்லிய ஆடை நழுவிப் பறந்து வந்து நமக்குத் தெரியாமலேயே நம்மீது படிந்து மூடியதுபோல ஆறுதலாக இருக்கும்.

கந்தர்வ கானம் – G.N.B நூற்றாண்டு மலர்

2009-ஆம் வருடம் ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் நூற்றாண்டு. அதை முன்னிட்டு ஒரு ‘கந்தர்வ கானம்’ என்றொரு சிறப்பிதழ் ஜனவரி முதல் வாரத்தில் வெளிவருகிறது. இசை ஆர்வலர், எழுத்தாளர் லலிதா ராமும், ஸ்ருதி இதழின் எடிட்டர் V.ராம்நாராயணன் இருவரும் இணைந்து இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்கள். இப்புத்தகத்தில் இதுவரை ஜி.என்.பி எழுதி வெளிவராத மூன்று கட்டுரைகளும், அவர் ஒரு ரசிகருக்காகப் பாடிய இறுதிக்கச்சேரியின் குறுந்தகடும் இடம்பெறுகின்றன.

செய்தி

“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது!”

கல்யாணி

வயலின் கச்சேரி செய்றது அவ்வளவு சுலபம் இல்லை. வாய்ப்பாட்டுனா பரவாயில்லை வயலினில் எல்லாம் ஜனங்களுக்குத் தெரிஞ்ச பாட்டா வாசிக்கணும். தெரியாத பாட்டு வாசிச்சா கேண்டீன் பக்கம் காப்பி சாப்பிடவோ, அல்லது சபா வாசல்ல கொடுக்கற மாம்பலம் டைம்ஸ், சென்னை டைம்ஸ் படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒரு மணி நேரத்துல ராகம் தானம் பல்லவி எல்லாம் நோ சான்ஸ். டைம் கொடுத்தாலும் எனக்கு வாசிக்கத் தெரியாது.

வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்!

பயிற்சிதான் ஒருவரை சிறந்த இசைக் கலைஞராக ஆக்குகிறது. எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் குத்து மதிப்பாகக் கணக்கு போட்டுச் சொல்ல முடியும் : ஒருவர் தன் வாழ்க்கையில் பத்தாயிரம் மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்தால் ஏறக் குறைய மாஸ்ட்ரோ ஆகிவிடலாம். அரியக்குடி, குன்னக்குடி போன்றவர்கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்;

தனிப்பாடல்

வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.

மகரந்தம்

மொழியறியாவிட்டாலும் தியாகராஜரின் உணர்ச்சிகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதன் காரணம் என்ன? இசைக்கும் மானுட உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான தொடர்பு இருக்கக் கூடுமா? அதனால்தான் நமக்கு இசை அங்கெங்கினாதபடி காலை நம்மை எழுப்பும் அலாரக்கடிகாரம் முதல் செல்போன் ரிங்டோன், காரின் ரிவர்ஸ் கியர் என எல்லா இடத்திலும் தேவைப்படுகிறதா?

’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி

அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.

பட்டம்மாள் – ஒரு சமூக நிகழ்வு

பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வலுக்கட்டாயமாக வாங்க மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார்.…

குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு

கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார். சொல்வனத்துக்காக இவரோடு நடத்திய உரையாடல் இது.

கர்நாடக சங்கீதம் – சில Flickr தருணங்கள்

கர்நாடக சங்கீதம் பாடுவது எளிதான விஷயம் என்று யார் சொன்னது? கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள். Flickr புகைப்படத்தளத்தை வலம் வந்தபோது கிடைத்த புகைப்படங்கள் இவை. (புகைப்படங்கள் copyright விதிமுறைகளுக்குட்பட்டவை. புகைப்படம் எடுத்தவர்களை அணுகி அனுமதி பெற்றே உபயோகிக்க வேண்டும்).

அரியக்குடி – கலைஞர்களைக் கவர்ந்த கலைஞர்

வெகுஜனங்களின் மனங்களைத் தன் இசையாற்றலால் கொள்ளை கொண்டதைப் போலவே, பிற கர்நாடக சங்கீத மேதைகளின் மனதையும் கொள்ளை கொண்டவராக இருந்தார் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். ஐயங்காரைக் குறித்து வியப்போடு பேசாத இசைக்கலைஞர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம். பாலக்காடு மணி ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர், G.N.பாலசுப்ரமணியம் இந்த மூவரும் வெவ்வேறு சமயங்களில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரைக் குறித்து எழுதியவற்றை சொல்வனம் வாசகர்களுக்காகத் தொகுத்துத் தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்

திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வரான Dr.ராம.கெளசல்யா தான் இசைக்கல்லூரியில் பயின்ற அனுபவங்களையும், அக்கால இசைச்சூழலையும் சொல்வனம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். “எல்லா ராகமும் இப்படித்தான். ஸ்வரஸ்தானம் என்பது ஒரு அடையாளம்தான். ராகம் தேவதை. அதன் ஸ்வரூபத்தை நினைத்துப் பாடவேண்டும். எந்த ஸ்வரஸ்தானத்திற்கும் ஒரு ராகத்தில் நிரந்தரமாக இடம் கிடையாது.”

‘சத்யஜித் ராய்’ என்றொரு இசை ஆளுமை

ராயின் உரையாடல்கள் மேற்கத்திய செவ்வியல் இசையுடன் தொடர்புடையதாகவே இருக்கும். ஒரு முறை அவர், 10-ஆம் நூற்றாண்டு இந்துக் கோயிலான கொனார்க்கை, ‘இந்திய சிறபக் கலையின் B-minor’ என்றழைத்தார். சில சமயங்களில் மேற்கத்திய செவ்வியல் இசையை, தனக்கே உரித்தான வகையில் தன் திரைப்படங்களுக்கு அவர் உபயோகிப்பதுண்டு. இசைக் கருவிகளின் சேர்க்கையை குறித்து கவலை கொள்ளாத, மரபுகளை மீறிய கடுமையுடன் வெளிப்படும் அவரது இசை, மேற்கத்திய சூழலில் ”ரேயின் இசை” என்றழைக்கப்பட்டு, அவருக்கான ஒரு தனித்தன்மையை நிறுவியது.

தாமரை பூத்த தடாகம்

காருகுறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படம் எடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல்போல அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். தவில் வாசிக்கும் தட்சிணாமூர்த்திக்குகூட அவர் என்ன வாசிப்பார் என்பது தெரியாது. என்னுடைய இசைப்பயிற்சியை வேலுச்சாமி அங்கேதான் நடத்துவான்.

சுசீலா ராமன்

சுசீலா ராமனின் இசைத்தொகுப்புகள் நியூ எஜ் கர்நாட்டிக் பிரிவில் சேராதவை. ஆனால் அந்த இசையை சிடி ப்லேயரில் இயக்கவிட்டதும், நான் வியப்பில் ஆழ்ந்துபோனேன். கர்நாடக இசை, வ்யூசன்(fusion) இசை முயற்சிகள் தவிர்த்து வேறு இசைப்பிரிவில் முன்முயற்சிகள் செய்யும் சாத்தியங்கள் அற்றது அல்லது கர்நாடக இசைக்கலைஞர்கள் சிந்தனையிலும் கர்நாடகமாக இருந்து மரபுக்குள் சிக்கி புதிய தளங்கள் நோக்கிப் பயணிக்காதவர்கள் என்று எண்ணியிருந்த எனது கருத்தை உடைத்தது அவரது இசைத்தொகுப்பு.

‘குருவே சரணம்’ – கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜன்

அப்போது எனக்கு சுசீந்தரத்தில் வாசிக்க ஒரு வாய்ப்பு வந்திருந்தது. அங்கு நான் இருக்கும் போது ஒரு தந்தி வந்தது. அதில் டிசம்பர் 25ம் தேதி ராஜரத்தினம் பிள்ளையின் இடத்தில் அதாவது இரவு 9.30 மணிக் கச்சேரியில் மியூசிக் அகாடமியில் என்னை வாசிக்கச்சொல்லி. முக்கியமான நேரம், இரவுக் கச்சேரி, அதுவும் குருநாதர் வாசிக்கயிருந்த இடத்தில். என் மனதில் துயரமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது. குரு இறந்துவிட்ட வருத்தம் ஒருபுறம் என்றால், அவரின் இடத்தில் என்னை வாசிக்கச் சொல்லும்போது…

லோகநாயகி டீச்சரும், லலிதா ராகமும்

‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே. போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.

சொல்வனம்

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!

மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்

Get new content delivered directly to your inbox.