லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)

சென்ற ஞாயிற்றுக்கிழமை (மே 09, 2010)  தன்னுடைய  92 வயதில் மரணமடைந்த லீனா ஹார்ன் (Lean Horne) ஒரு சிறந்த அமெரிக்க ஜாஸ் இசைப்பாடகி. நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அதைத் தகர்த்தெறிந்து தனக்கென தவிர்க்க முடியாதொரு இடத்தை அடைந்தவர் லீனா ஹார்ன். வெள்ளை மேலாண்மையைத் தகர்த்து ஹாலிவுட்டில் இடம்பிடித்த முதல் கருப்பினப் பெண் இவர். நிறவெறிக்கெதிரான வெளிப்படையான பேச்சுக்காக 1950-ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட இவர் தொடர்ந்து இரவு விடுதிகளில் பாடியும், தனிப்பட்ட இசைத் தொகுப்புகள் மூலமாகவும் பிரபலமாக இருந்தார். கருப்பின மக்களுக்கு சம உரிமை கோரி நடைபெற்ற அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தபடியே இருந்த இவர் மீண்டும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தது 1969-ஆம் ஆண்டுதான். மயக்கும் குரலுக்கும், வசீகரமான அழகுக்கும் சொந்தக்காரரான லீனா ஹார்ன் தன்னுடைய சமுதாயப் பார்வைக்காகவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகிறார். அவருக்கு சொல்வனத்தின் அஞ்சலிகள்.

இவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Lena_Horne