kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்


இங்கிலாந்து வரலாற்றின் அடியோட்டத்தில் இஸ்லாத்தின் பங்குபங்கு

england-muslim

ஒரு நாட்டின் வரலாற்றில் அந்நிய கலாச்சாரத்தின் தாக்கம் இருப்பதில் ஒன்றும் புதிய செய்தியல்ல. அமெரிக்கா முதல், இலங்கை வரை அதற்கான உதாரணங்கள் பல உண்டு. ஆனால் பொதுவாகவே அந்நியரின் வருகைக்குப் பின்னர் நெடு நாள் காலூன்றி கலாசாரத்தோடு ஒன்றுவதாலோ அல்லது வலுக்கட்டாயமாகத் திணிப்பதாலோ புது கலாசார ஜுகல்பந்திகள் தோன்றும். இக்கட்டுரை ஆசிரியர் பதினாறாவது நூற்றாண்டில் ராணி மத்திய கிழக்கு நாடுகளோடு ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களால் இங்கிலாந்தில் உருவான மாற்றங்களைக் குறித்து எழுதியிருக்கிறார். சாமானிய மொழியிலும் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தலோ நாடக வரிகளிலும் கூட பாதிப்பு இருந்தது என்றும், மக்கள் உபயோகித்த புதுவிதமான பொருட்கள், உணவுப்பொருட்கள் கூட எப்படி கலவையான ருசியில் உருவாகத்தொடங்கியது என்றும் குறிப்பிடுகிறார். இன்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த காலத்தைப் புரிந்துகொள்ள முற்படும் போதும் நாம் பல நாடுகளின் நிகழ்வுகளையும் சேர்த்தே புரிந்துகொள்ள முடிகிறது.

http://www.nytimes.com/2016/09/18/opinion/sunday/englands-forgotten-muslim-history.html?_r=1


க=பிள்ளைகள் வீட்டை விட்டு பிரியும்போதுது

flyingnest

கைக்குள் பொத்திவைத்து வளர்த்த குழந்தை தனித்து வாழ்வதற்காகவோ படிப்பிற்காகவோ பிரியும் போது ஏற்படும் பாரம் எளிமையானதன்று. எதற்காக வாழ்நாளெல்லாம் தயார் செய்து வளர்கிறோமோ அதற்காக எடுத்து வைக்கும் முதல்படியை எடுத்துவைக்கும் பிள்ளைகளை எட்டிப்பிடித்து பின்னுக்கு இழுக்கப்பார்க்கும் வேலை. பிரிவு, தற்காலிகமோ நிரந்தரமோ என்றுமே இரும்புக்குண்டுகளைக் காலில் கட்டிக்கொண்டு பறக்கப்பார்க்கும் வேலை தான். இங்கு ஒரு தாய், தனது மகனது படிப்புக்காக வெளியூர் அனுப்பும் ஆயத்தங்களைப் பற்றிப் பேசுகிறார். கூடவே அவளது பிரிவு ஏக்கத்துக்கான தேற்றல் தாலாட்டும்.

http://www.tabletmag.com/jewish-life-and-religion/212930/leaving-the-nest


எழுத்துரு எங்கும் எப்போதும்

noto-font

Noto – மிகவும் ஆர்வமூட்டும் முயற்சியாக இது தோன்றுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழியை மக்களிடையே சேர்த்துவைக்கவும், தொலைந்துகொண்டிருக்கும் மொழிகளில் சுவாசத்தை நிரப்பவும் ஏதேனும் ஒரு வழிமுறை அமைந்தபடி இருப்பதை நாம் கவனிக்கலாம். மொழி சார்ந்த வல்லுநர்களும், தனித்து இயங்கும் ஆர்வலர்களும் மொழியைத் தழைக்கச்செய்யும் பணிகளுக்காக தனது வாழ்நாளைச் செலவிடுகிறார்கள். இப்போது கூகிளும் மோனோடைப் எனும் எழுத்துரு நிறுவனமும் இணைந்து எழுத்துரு இல்லாது டப்பாக்களாகத் தெரியும் கணினித்திரைகளுக்கு ஒரு பதிலை உருவாக்கிவருகிறார்கள். டோஃபூ என்பது நம் பன்னீர் போன்ற ஒரு சதுரப்பணியாரம். எழுத்துரு இல்லாத கணினிகளில் புது மொழிகள் டப்பாக்களாகக் காட்சியளிக்கும். அவற்றை பிற மொழிகளோடு ஒப்பிட்டு தோராயமாக வடிவங்களைத் திரையில் கொணர்வதுதான் இந்த முயற்சி.

http://hothardware.com/news/noto-google-monotype-unveil-universal-font-project-all-languages


சிரியாவில் நடப்பதை எதிர்த்து ஒரு குரல்

soros_1-111016

உலக பலவான்களான வளர்ந்த நாடுகள் , முன்னெப்போதுமில்லாத வன்முறையையும் அழிவையும் உருவாக்கி இருப்பதாக இந்தக் கட்டுரை ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கடந்த நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பெரிய ஆக்கிரமிப்புகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் ஓரளவு தனது சுயத்தைத் தக்கவைத்து பிரிவினைவாதிகள் ஊடுருவ முடியாத நிலமாகவே சிரியா இருந்து வந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்க சக்திக்கு பலப்பரிட்சைக் களமாக இருந்துவரும் சிரியா உள்நாட்டு கலவரங்களால 2011 ஆம் ஆண்டு முதல் பேரழிவை சந்தித்துவருகிறது. வஹாபிசத்தின் ஊடுருவல் ஒரு காரணம் என்றாலும் வளர்ந்த ஜாம்பவான்களான ரஷ்யாவும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்கள் புஜபலபராகிரமத்தைக் காட்டும் இடமாக மாறியதும் இதற்கு முக்கியமான காரணம். அலெப்போ நகரின் மீது சாபத்தின் கனமழை போல கடந்த ரெண்டு மாதங்களாக குண்டுகள் சரமாரியாகப்பொழிகின்றன. இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்களில் தெரியும் அழிவுச்சித்திரம் நமது உலகியல் நோக்கங்களையும், பிற பகுதிகளில் மானுட வளர்ச்சி என நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் வாழ்வு முறையையும் எள்ளி நகையாடுவது போலுள்ளது. இதற்கு முழுவதுமாகப் பொறுப்பேற்க முதுகெலும்பில்லாத ரஷ்யாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சாவு ஊர்வலங்களின் மீதும், மருத்துவமனையின் மீதும், நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் மீதும் குண்டுபோட்டு அழித்துவிட்டு தப்புக்கு சப்பைக்கட்டும் காரணங்களை தினந்தோறும் காட்டிவரும் வெக்கக்கேடும் நடந்து வருகிறது.  குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும், பிராமணர்களும் ஊரை விட்டுத் தள்ளிப்போன பின்னரே சமபலம் படைத்த இரு சக்திகள் பொதுமக்கள் உடைமைகளுக்குச் சேதம் வராதவண்ணம் யுத்தகளத்தில் சண்டை போட வேண்டும் என ராமாயண காலப் போர் அறிவிப்பு தெரிவிக்கிறது. இது நவீன காலத் தொலைதூர ஏவுகணை யுகம் என்றாலும்கூட நகரத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் நிவாரணத் திட்டங்களையும் சீரழிப்பதும், அமெரிக்க தேர்தலுக்கு முன் தனது முற்றதிகாரத்தை நிலைநிறுத்தும் போட்டியில் இருக்கும் ரஷ்யாவும் வரலாறு என்பது ஒரு புதிர்வட்டப்பாதை என்பதைப் புரியாது இயங்குகிறது. அல்லது அது புரிந்ததினால் தான் இப்படி பலத்தை மொத்தமாகக் காட்டுகிறதா? தெரியவில்லை. யுத்தமற்ற உலகம் வேண்டும், அரசியல் சூழ்சியற்ற ஆட்சி வேண்டும் என பகற்கனவில் சஞ்சரிக்காமல் நம்மால் ஆனது, இந்த மானுட அழிவுக்கு எதிராக நமது கண்டனங்களைத் தெரிவிக்க நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும்.

http://www.nybooks.com/articles/2016/11/10/on-bombing-aleppo/

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.