மகரந்தம்


[stextbox id=”info” caption=”நிஜத்தின் மாயத்தோற்றம்?”]

reality

முன்பு இவர்களுக்கெல்லாம் ஊடகத்தின் மீது ஏகபோக உரிமை இருந்தது. எதை வேண்டுமானாலும் செய்வார்கள். கண்டனக் கடிதம் போட்டால், எங்கோ தலை நகரில் இருக்கும் பதிப்புக் கூட்டம், அவற்றைக் குப்பையில் போட்டு விட்டு அலட்சியமாக மறுபடி ஏதாவது அக்கிரமச் செய்தியைத் திரித்து வெளியிடும். படிப்படியாக முழுக் கட்சிப் பத்திரிகை போலவே திரளுக்கான பத்திரிகைகளும் ஆகி விட்டன. இந்தியாவில் இவற்றைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் இருந்தது. ஆட்டோ அனுப்புவதைத் தவிர வேறு என்ன வழி என்றால் ஒரு திடீர்த் தாக்குதலில் கும்பல் புகுந்து செய்தி அலுவலகங்களை உடைத்து நொறுக்கும். (சிபிஎம் முடைய அபிமான ‘போர் முறை’ இது.) அல்லது வேலை நிறுத்தம் என்று மாதக்கணக்கில் வியாபாரத்தை முடக்க முயல்வதும் கம்யூனிஸ்டுகளின் வழி. அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்க முனைந்த முதலியம் பல ஊர்களில் அச்சடிப்பதைத் துவக்கி தலைமை அலுவலகத்தை முடக்கினாலும் செய்தித்தாள் பல ஊர்களிலிருந்து வரும்படி செய்து யூனியன்களின் பல்லைப் பிடுங்கி விட்டது.
சமீபத்து வலையுலக விஸ்தரிப்புதான் பத்திரிகைகளுக்குத் தலைவலியாகி இருக்கிறது. கனடா, நைஜீரியாவிலிருந்தெல்லாம் படித்து விட்டுக் கண்டனம் தெரிவிப்பதோடு, தம் உறவினர்களுக்கு அனுப்பி கவனப்படுத்தி, ஊரூராக ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டும் வாசக மறுவினை இப்போது உலகம் பூரா பரவி இருக்கிறது.
இங்கே ஒரு யூரோப்பிய ஒளிப்படக்காரர், நம் பெருமாள் முருகத்தனமாக தாமாகக் கற்பனை செய்ததை அந்தந்த ஊரில் நடக்கும், நடந்த நிஜம் என்று படமெடுத்துப் பிரசுரித்துப் பரிசு பெறும் வாய்ப்பில் இருக்கையில் அந்தந்த ஊர் மக்கள் இது பொய் என்று கொதித்து எழுந்தார்களாம். அட முற்போக்குகளுக்கு நல்லதொரு வாய்ப்பாயிற்றே! ஊர்வலம் போகலாமே என்று நினைத்தேன்.

http://www.theguardian.com/artanddesign/gallery/2015/feb/27/world-press-award-photos

[/stextbox]


[stextbox id=”info” caption=”கத்திரி உரிமை”]

India Writer Silenced

ஏயப்பா, கருத்து சுதந்திரத்துக்குத்தான் எத்தனை கொண்டாட்டமான காலமிது? ஒரு பக்கம் கெட்ட வார்த்தைகளை சினிமாவில் பேசக்கூடாது என்று தணிக்கைக் குழுவின் தலைமை அதிகாரி சொன்னாரென்று அவரை எல்லாரும் போட்டுச் சாத்துகிறார்கள். அது என்னவோ கருத்து சுதந்திரம் இல்லை போலிருக்கிறது.

http://www.huffingtonpost.in/2015/02/18/censor-board-banned-words_n_6702754.html?utm_hp_ref=india

இன்னொரு புறம் எழுதுவதிலிருந்தே விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளரின் கவிதைகள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படும் என்று பெரிய எழுத்தில் ஹபிங்க்டன் போஸ்ட் அச்சடித்து மகிழ்கிறது. தலைப்பிலிருந்து உள்ளடக்கம் வரை பொய்யும், புனைசுருட்டும் கலந்த ஒரு செய்தி அறிக்கை இது என்று யாரும் சொல்ல முடியாது என்ற தைரியம். சொன்னால் பிரசுரித்து விடுவார்களா என்ன?

http://www.huffingtonpost.in/2015/02/17/perumal-murugan_n_6696306.html?utm_hp_ref=india

வேடிக்கை என்னவென்றால் அவர் தமிழில் எழுதிய எல்லாப் புத்தகங்களும் இன்னும் விற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தவிர இந்தப் பரபரப்புக்கு முன்பு எத்தனை விற்றதென்று பார்த்தால் ஆண்டுக்குச் சில நூறுகள் இருந்தால் அதிசயம். இவரென்ன பட்டுக்கோட்டை பிரபாகரா வருடத்துக்குப் பத்தாயிரம் இருபதாயிரம் பிரதிகள் விற்க? ஏதோ இவரது கவிதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்தால் அது பெரிய புரட்சி, உலகம் அதிர்ந்து விடும் என்பது போன்ற பாவனை இந்தச் செய்தியில். பாலுறவுப் பிரச்சினைகளையும், முறை தவறிய உறவுகளையும் பற்றி மலையாள இலக்கியம் எப்போதிருந்தோ எழுதி அதையெல்லாம் சினிமாவாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறது. விவேகானந்தர் ஜாதிக் குழப்பங்களும், மதக் குழப்பங்களும் நிறைந்த கேரளாவின் அதிர்வான கலவையைப் பார்த்து அது ஒரு பைத்தியக்கார விடுதி என்று சொன்னாரென்ற நினைவு. அங்கு பெருமாள் முருகனைத் தூக்கிச் சாப்பிடும் கதைகளை, கவிதைகளை கமலாதாஸ் என்கிற, திடீர் முஸ்லிமான ஒரு எழுத்தாளர் எப்போதோ, சில பத்தாண்டுகள் முன்பே எழுதி இருக்கிறார். நாகர்கோவில், கோயம்புத்தூர் பகுதியில் எழுத்தாளர்களைக் கேட்டால் சொல்வார்கள் இன்னும் என்னென்ன அதிர்வுகளை மலையாளம் எழுத்தாளர்கள் சர்வ அலட்சியமாக எழுதி இருக்கிறார்கள் என்று. ஓ வி விஜயனின் சில நாவல்கள் இங்கிலிஷில் கிடைக்கின்றன, அந்த விதமாக.

ஊதிப் பெருக்குவதற்கும் ஏதோ ஒரு அளவு உண்டு. இப்படிப் பெருக்கினால் பலூன் வெடிக்கும், பிறகு ஊதிப் பெருக்கியவர்கள் முகத்தைப் பார்க்கச் சகிக்காது.
அப்படியும் சொல்லி விட முடியாது. எதையும் துடைத்துப் போட்டுப் போகும் அற்புதர்கள் தமிழ் அரசியலாளர் நடுவே நிறைய உண்டு. தினகரன் அலுவலகத்தோடு பத்திரிகையாளர்களையும் எரித்ததை உடனே மறந்த சிகாமணிகளாயிற்றே நம் அரசியலாளர்கள், அதாவது எழுத்தாளர்கள்.
எழுத்தாளர் சுஜாதாவை அச்சுறுத்தி விரட்டிய போது கை கட்டி நின்று பார்த்த கூட்டம்தானே இது? இன்று அகில இந்திய அளவில் ஊதுகிறார்கள் பலூனை.
இந்த அதிசயங்கள் போதாதென்று அமெரிக்கப் புத்திசாலிகள் வேறொரு பக்கம் தம் கிறுக்குத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இரானிய மாணவர்கள் அறிவியல் துறைகளில் படிப்பதை ஒரு பல்கலை அனுமதிக்காதாம். இது ஒரு தரமிக்க பொதுப் பணத்தில் இயங்கும் பல்கலை. ஆம்ஹெர்ஸ்ட் என்ற நகரில் உள்ள பெரும் பல்கலை. இதில் ஏராளமான மாணவர்கள் பல நாடுகளில் இருந்து வந்து படிக்கிறார்கள். இந்தியர்களும் இங்கு நிறைய உண்டு.

http://www.huffingtonpost.com/2015/02/17/iranian-students-umass_n_6698822.html?ir=India

(பிற்சேர்க்கை: இந்தப் பல்கலை, கடும் விமர்சனங்களுக்கு ஆட்பட்டதும், இரானிய மாணவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விட்டதாக அறிவித்து இருக்கிறது. இது உண்மையா, நடவடிக்கையில் நிஜமாகவே அவர்களுக்குப் பாதை திறந்திருக்கிறதா என்று யார் போய் சோதிக்க? பரபரப்பாகச் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள், செய்தித்தாட்கள் இன்னும் ஒரு வாரத்தில் இதை முற்றிலும் மறந்து விடும். வாசக/ பார்வையாளக் கூட்டமான நாமோ நேற்றே இதை மறந்து விடவில்லையோ? )
[/stextbox]


[stextbox id=”info” caption=”அடிமைப்படுத்துவதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?”]

Bible_Holy_Book_Testament_Jesus_Christ_Moses_Hebrew_Worship_God_Slavery_Words

அன்புமார்க்கத்தினர் இந்துக்களைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் இழித்துப் பிரச்சாரம் செய்வது ஒன்றும் நிற்கவில்லை. போதாக்குறையாக அவர்களின் அதிபர் ஒபாமா வேறு இந்தியா- வேறென்ன, இந்துக்களைத்தான் அவர் மறைமுகமாகக் குறை சொல்கிறார்- மத சுதந்திரம் கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். மத விஷயத்தில் சகிப்பின்மை கூடி வருவதைப் பார்த்தால் காந்தி பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று வேறு புத்திமதி. காந்தி வெள்ளை நாகரீகத்தின் குரூரங்களின் நடுவே வாழ்ந்த ஆத்மா, அவர் காணாத வன்முறையா, சகிப்பின்மையா? உலகப் போரில் அவருக்குக் கிட்டாத வெள்ளையரின் சகிப்பின்மை பற்றிய பாடமா இன்றைய இந்துக்களின் சகிப்பின்மையில் கிட்டி விடப் போகிறது? இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்தும், கிழக்குப் பகுதியிலிருந்தும், வடகிழக்கிலிருந்தும் துரத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தம் நிலப்பரப்பை சகிப்பு என்றால் என்னவென்றே தெரியாத மதக்குழுக்களிடம் இழந்து கொண்டு அதைப் பற்றி விவரம் கூடத் தெரியாத இருளில் ஆழ்த்தப்பட்டிருக்கும் இந்துக்கள் இதை விட சகிப்புத் தன்மையை மேற்கொண்டால் சொந்த நாடு என்று ஒன்று இல்லாத நிலைக்குச் சீக்கிரமே வந்து சேர்வார் என்பது தெளிவு. ஒரு வேளை ஏகாதிபத்திய ராணுவ வாதத்துக்குப் பின்னே போகும் ஒபாமா போன்ற அரசியலாளர்களுக்கு அதுதான் பெரும் மகிழ்ச்சி தருமோ என்னவோ?

சரி அவர் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் அந்த அன்பு மார்க்கமும் அதன் விவிலிய நூலும்தான் என்ன சகிப்புத் தன்மை கொண்டன என்று பார்க்கலாமா?

இங்கே ஒரு கட்டுரையாளர், அன்பு மார்க்கத்தின் நடுவே உள்ள ஒரு நாட்டில் வாழ்பவர், அந்த வேதப்புத்தகத்தில் அடிமை முறை பற்றி என்ன கருத்து எந்தெந்தக் காலங்களில் எப்படி நிலவியது என்று விலாவரியாக எழுதுகிறார். அவருடைய கணிப்பில் அன்புமார்க்கம், அடிமை முறையை  அப்படி ஒன்றும் தெளிவாக இன்று கூட நிராகரிக்கவில்லை என்பதுதான் இறுதி முடிவு.

http://www.salon.com/2015/02/15/where_the_bible_really_stands_on_slavery_partner/

இப்படி ஒரு நாட்டிலிருந்து வந்த அதிபர் நமக்கு, இந்தியருக்கு, அதாவது இந்துக்களுக்குத்தான், சகிப்புத்தன்மை, மதசுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றி எல்லாம் பாடம் நடத்தி விட்டுப் போயிருக்கிறார். நம் ஊர் செகுலரிய வியாதிகள் எல்லாம் உடனே விழுந்தடித்துக் கொண்டு ஒபாமாவே சொல்லி விட்டார், இந்தியா ஒரு கொடுங்கோல் நாடு என்று எனக் கட்டுரைகள் எழுதி புல்லரித்துப் போய் இந்துக்கள் உடனே மதம் மாறி கிருஸ்தவர்களாவதுதான் ஒரே வழி என்று அலறுகின்றனர். (அவர்களுக்குத்தான் ஜோக் அடிக்கத் தெரியுமா என்ன?)

[/stextbox]


[stextbox id=”info” caption=”: ) : (“]

Emoticons_Emojis

எமோடிகான் எனப்படும் ஸ்மைலி உருக்கள் கணனி வழியே எதையும் எழுதுவோர்கள் பயன்படுத்தும் ஒரு உத்தியாகிப் பல வருடங்களாகின்றன. ஆனால் இவை எப்படிப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பது அனேகருக்குத் தெளிவாக இல்லை. குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை, நீதித்துறையினருக்கு இவை குழப்பத்தைக் கொடுக்கின்றன என்று அமெரிக்காவில் இப்போது நடந்த சில சம்பவங்கள் தெரிவிக்கின்றன. மின்னஞ்சல், முகப்புத்தகம், ட்விட்டர் போல சில துரித வெளிப்பாட்டுக்கு உதவும் வடிவங்களில் உள்ள தொடர்பு முயற்சிகளில் இந்த எமொஜி அல்லது ஸ்மைலிக்கள் நிறையவே உண்டு. இவற்றில் சில காவல் துறையினரால் அச்சுறுத்தல்களாகப் பாவிக்கப்படுகின்றன என்று தெரிகிறது.

விளைவு சிலர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடரப்படுகிறது. இந்த வகைக் கைதுகள் சாதாரண மக்களுக்குச் சமூகத்தின்பால் ஒரு அளவு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றனவா என்று நாம் கேட்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் சமூகம் இவற்றின் பால் கொடுத்திருக்கிற அபரிமித நம்பிக்கையைப் பல சமூக விரோதிகள் பயன்படுத்திச் சமூகத்தை அழிக்க முயல்கிறார்கள் என்பதும் ஒரு பிரச்சினைதான்.

அடுத்த முறை இந்த ஸ்மைலியை மின்னஞ்சல், முகப்புத்தகத்தில் எல்லாம் பயன்படுத்தும்போது இரண்டு முறை யோசித்து விட்டுப் பயன்படுத்தவும் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்! 🙂

http://www.slate.com/blogs/future_tense/2015/02/14/emojis_can_get_you_in_trouble_with_the_law.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”இணையத்திற்கான சீன பெருஞ்சுவர்”]

Web_Firewall_Great_internet-censorship-in-china_Wall_WWW_Blocked_Filters

சீனாதான் ஏதோ கொஞ்சம் உருப்படியாகச் செயல்பட்டு, பொருளாதாரம், தொழில் துறை, மக்கள் வாழ்வுத்தரம் என்று வாழ்வாதாரச் செயல்களை முன்னிறுத்தி மக்களையும் நாட்டையும் படிப்படியாக மேலெழுப்புகிறது, கன்ப்யூசியஸிய, தர உயர்வை மட்டும் மதிக்கிற அடுக்குமுறை நிர்வாகம், சமத்துவம் என்ற பொய்யை உதறி விட்டு வேலைத் திறனை முன்னிறுத்துகிறது என்று நினைத்திருப்போம்.

அதெல்லாமும் பிரச்சினையான கருத்துகளே என்று பலர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதை எல்லாம் விட சராசரி மக்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் இப்போது பறி போய்க் கொண்டிருக்கிறதாம். செய்தி வெளியிடுவது மேற்கத்திய பத்திரிகை. அது எத்தனை பொய் சொல்கிறது என்று நம்மால் எளிதில் அறிய முடியாது. அதன் அறிக்கை புலம்புகிறது- சீன அரசு தன் பெரும் படையான தணிக்கை அதிகாரிகளை வைத்து மொத்த உலக வலையையும் சீனாவுக்குள் பாயாமல் வழிஅடைத்து, தணிக்கை செய்துதான் உள்ளே விடுகிறது, இது கருத்து சுதந்திரம், பரிமாற்றம் ஆகியனவற்றுக்கு அடைக்கும் தாழ், சீனாவுக்கும் இழப்பு, உலகுக்கும் பேரிழப்பு என்றெல்லாம் புலம்புகிறது.
சீனாவின் வளர்ச்சியை மேற்கு எப்படிக் குலைக்கிறது என்றே பார்த்து சதி செய்ய முயல்கிறது என்பதும், அதை வலையுலகின் திறந்த கதவுகள் வழியே மேற்கின் ராணுவமும் உளவு அமைப்புகளும் செய்ய முயல்கின்றன என்பதும் சீன அரசின் (நியாயமான) அச்சங்கள். ஆனால் சீன அரசும் அண்டை நாடுகளை எல்லாம் உளவு பார்ப்பதோடு, அங்கிருந்து என்னென்ன தகவலை எல்லாம் திருட முடியுமோ அதையெல்லாம் திருடுகிற சீனக் கும்பல்களை கைப்பற்ற ஒரு முயற்சியும் எடுப்பதில்லை என்பதே நடப்பு நிஜம் என்று மேற்கு குற்றம் சாட்டுகிறது. இந்தியாவும் இதே வகைக் குற்றச்சாட்டுகளைச் சீனா மீது சுமத்துகிறது.
இந்தக் கட்டுரை சீனாவின் இன்றைய பெரும் சுவர் ஒரு நெருப்புத் தடுப்புச் சுவர்– கணனிகளின் உலகில் எழுப்பப்பட்ட பெரும் தடைக்கல் என்று சொல்கிறது.

http://www.bostonglobe.com/opinion/editorials/2015/02/15/china-great-firewall-threatens-ties-rest-world/6kqPD5bdvZ9BvuNOiWNRFL/story.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.