kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்


பாகிஸ்தான் பெண்கள்

Pakistan_Photos_Camps_Interior_Peshawar_Mehnaz_Conflict_Women_Tents_Floods_Images_Islam_Nowshera_She_Muslim

பாகிஸ்தானில் ஐந்தாண்டுகளாக ஊர் ஊராக சந்து பொந்துகள் எல்லாம் சென்று படம் பிடித்திருக்கிறார் அலெக்சான்டிரா (Alixandra Fazzina). போராட்டப் பிரச்சினைகளில் கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள், கைக்குழந்தைகளுடன் அரிசி ரேஷனுக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தன்னுடைய திருமண ஆடையை பதினான்கு வயதுச் சிறுமி போட்டுப் பார்த்த புகைப்படத்திற்கு அருகில் இருக்கும் அவருடைய குறிப்பு: “ஐந்தாண்டுகள் முன்பு எடுத்த படம் அது; ஜீனத்தை மீண்டும் பார்க்க சென்ற ஆண்டு போயிருந்தேன். மூன்றாண்டுகளில் இரண்டு குழந்தைக்கு தாயாகி விட்டிருந்தாள். அவளைப் பார்த்தால் பத்தொன்பது வயது மாதிரியே தெரியவில்லை! அவளைப் படமெடுக்கக் கூடாது என்று அவளுடைய கணவன் விரட்டிவிட்டான்.” இங்கே வெள்ளத்தினால் வீடிழந்த, நான்கு குழந்தைகளுக்குத் தாயான மெஹ்னாஸ் புகைப்படம். பாகிஸ்தானில் பெண்கள்  நிலை என்ன? இந்தப் படங்கள் ஒரு சிறு துண்டைக் காட்டுகின்றன.

http://www.theguardian.com/world/gallery/2014/nov/14/caught-in-conflict-women-in-pakistan-in-pictures


வேட்டையாடு! விளையாடு!! துரத்தி அடி!!!

Migrating wildebeest in Serengeti national park, Tanzania.

கருணை மார்க்கத்தின் அரசர்கள் கூட மிக அன்புள்ளம் கொண்டவர்கள். தம் மக்கள் மட்டுமல்ல, பிற நாட்டு மக்களையும் அன்பாகவே நடத்துவார்கள். துபாயின் அரச குலத்தவரை எடுத்துக் கொள்ளுங்களேன். தான்ஸானியாவில் மாஸாய் என்கிற பழங்குடியினர் காலம் காலமாக வாழ்ந்து வந்திருக்கிற பெரும் நிலப்பரப்பைத் தாம் வேட்டை ஆடும் நிலமாக ஆக்க விரும்பி அந்த மாஸாய் இனத்தின் 40,000 பேரை அந்தப் பகுதியிலிருந்து அகற்றவிருக்கிறார். 350,000 பவுண்ட் பணம் நஷ்ட ஈடு. அதுவும் மாஸாய் மக்களிடம் கொடுக்கப்படாது. அவர்கள் செலவழித்து விட்டால் என்ன செய்வது. இல்லையா. அதனால் தான்ஸானிய அரசே வைத்துக் கொள்ளும். மாஸாய்களின் நலனைக் காக்க நிதியாம்.

இப்படி ஒரு கருணை உள்ளம் யாருக்கு வரும்? ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கிற மாஸாய்கள் இனிமேல் வேறு வழியில்லாமல் தான்ஸானியாவில் இருக்கிற ஓரிரு நகரங்களில் போய் வாழ வேண்டி வரும். வேறெப்படித்தான் மாட்டிடையர்களுக்கு பொறியியல், உயிரியல் போன்றனவற்றைப் படிக்க உந்துதல் வரும் இல்லையா?

செய்தியைப் படித்து 40,000 மாஸாய்கள் இதைக் கேட்டு எப்படிக் குதூகலிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்களேன்.

http://www.salon.com/2014/11/17/tanzania_will_sell_masai_homeland_to_dubai_royal_family/


2014ன் தலை சிறந்த புதிய கண்டுபிடிப்புகள்

Mangalyaan, India's Mars Orbiter Mission, is prepared for its Nov. 5, 2013 launch into space.

மீண்டும் ஒரு ஆண்டு முடியப்போகிறது. “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்; இப்பொழுது டிசம்பர் என்பது பட்டியல்களின் மாதம். இந்த ஆண்டின் முக்கியமான இருபத்தி ஐந்து தொழில்நுட்பத் தோன்றல்களை டைம் பத்திரிகை வரிசைப்படுத்துகிறது. செவ்வாய்க்கு ராக்கெட் விட்ட எவருமே முதல் தடவையே ஜெயித்ததாக சரித்திரம் கிடையாது. அமெரிக்காவால் முடியவில்லை. ருஷியாவும் தோற்றது. ஐரோப்பியர்களுடைய ஏவூர்தியும் செவ்வாய் கிரகத்தை கஜினி முகமது போல் சென்றடைந்தது. ஆனால், சீனாவிற்கு முன்பாகவே, எந்த ஒரு ஆசிய நாட்டிற்கும் முன்பே, முதல் தடவையே செவ்வாய்க்கு பத்திரமாகப் போய்ச் சேர்ந்த மங்கள்யான் எறிகணையும் இடம் பிடித்திருக்கிறது. பாக்கி 24ஐயும் இங்கே பார்க்கலாம்.

http://time.com/3594971/the-25-best-inventions-of-2014/


சிலிகான் பள்ளத்தாக்கின் பெண் நிரலாளர்கள்

Tracy_Chou_pinterest_Quora_Women_In_Tech_Google_STEM_Females_Vogue

அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் வேலை பார்ப்பது ரொம்பவேக் குறைவு. இது பரவலான உண்மை. ஆனால், அதற்கான ஆதாரம் இருக்கிறதா? அனைத்து நிறுவனங்களும் தங்கள் தகவலைத் தருமாறு டிரேசி சூ (Tracy Chou) கேட்கிறார். ஆனால், மகளிர் வேலை பார்க்கும் எல்லாத் துறைகளையும் கணக்கு காட்டி கோல்மால் செய்யக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். கணினியில், தொழில் நுட்பத்தில், ஆராய்ச்சியில் வேலை பார்க்கும் ஊழியரை மட்டும்தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நிறுவனமாக தானாகவே முன் வந்து தங்கள் எண்களை பகிர்கின்றன. (அவை இங்கே கிடைக்கும்). ஃபயர்பாக்ஸ் தயாரிக்கும் மொஜில்லா நிறுவனத்தில் ஒன்பது சதவிகிதம் பெண்கள். கூகுள் – 17%! இந்த நிலைமை குறித்து ட்ரேஸி என்ன நினைக்கிறார்? எப்படி இதை மாற்ற எண்ணுகிறார்? அவரின் அடுத்த திட்டம் என்ன? வோக் (vogue) படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://www.vogue.com/4537369/pinterest-tracy-chou-silicon-valley/


சீனா-ரஷ்யா இணைந்த கைகள்

Russia-China

எழுபத்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக பெரும்பான்மையான முடிவுகளில் எலியும் பூனையுமாக இருந்த நாடுகள் ஒன்று சேரும் காலகட்டம் வந்துள்ளது. இந்த ஒன்றுகூடலால் உலக வளர்ச்சிக்கு பெரும் நன்மை நடக்கும் என எதிர்பார்க்கும் அளவுக்கு இந்த நாடுகளின் கடந்த கால நடத்தை இருந்ததில்லை. எண்ணெய் வளங்களைப் பகிர்ந்து அளிக்கும் பரோபகாரியான ரஷ்யாவின் உறவால் சீனா பலப்படும் செய்தியைவிட அமெரிக்காவின் எதிர்கால எதிரியாக இவை இரண்டும் உருவாகிவருவது அரசியல்  விமர்சகர்களுக்கு பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த கூட்டுவர்த்தகத்தின் அச்சாணியை ஆட்டிப்பார்க்கும் அரசியல் காய்நகர்த்தல்கள் அமெரிக்காவின் வசம் உள்ளதா? தெரிந்துகொள்ளுங்கள்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.