kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்

ஒருவனுக்கு ஒருத்தி? இயற்கையின் பாலியல் டிப்ஸ்

monogamyமீன்களின் செதில்களில் வாழும் ஒரு புழு (Siplozoon paradoxium) , கலிஃபோர்னிய எலி, லீமர்(Lemur), பீவர் (Beaver) இவற்றுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை – இந்த விலங்குகளெல்லாம் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்பவை. கிறிஸ்தவ வலதுசாரிகள் ஒருவனுக்கு-ஒருத்தியாகப் பெங்க்வின்கள் (Penguins) வாழ்வதாக பிரச்சாரப்படம் வெளியிட்டனர். ஆனால் உண்மையில் பெங்க்வின்கள் வாழ்க்கை முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதில்லை. அவை ஒவ்வொரு இணை சேரும் காலத்துக்கும் ஒரு துணையுடன் என்று வெவ்வேறு இணைகளுடன் சேரும். இந்த உலகில் எங்கு தேடினாலும் ஆணுக்குப் பணமளித்து  உடல் உறவுக்கு அழைக்கும் பெண்கள் என்பது நிறுவனமாக எங்கும் இல்லையே, ஆனால் பெண்களுக்குப் பணமளித்து உடல் உறவுக்கு அழைப்பது என்பது  வரலாறு நெடுகவும் உலகின் பல பகுதிகளிலும், எல்லா சமுதாயங்களிலும் பாலுறவுத் தொழிலாகவே நிறுவனப்படுத்தப்பட்டு இயங்குவது ஏன்?  சில விளக்கங்களை இங்கே படியுங்கள்…

மூளைக்குள் ஒரு தற்கொலை கடிதம்?

suicide_noteஇரண்டு வித எலிக் குஞ்சுகளும் எலி அம்மாக்களும். ஒருவகை எலிக்குஞ்சுகள் பிறந்ததும் தங்கள் அம்மாக்களால் அடிக்கடி நக்கப்பட்டு அன்பு காட்டப்படுகின்றன. மற்றொரு வகையோ அம்மாக்களால் கண்டுகொள்ளப் படவே இல்லை. அரவணைத்துப் போஷிக்கப்படுவது அந்த எலிக்குஞ்சுகளின் மூளையில் மரபணு வெளிப்பாட்டு சுரப்பிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அன்பு காட்டப்பட்ட எலிக்குஞ்சுகள் வளரும் போது அமைதியான தன்மை கொண்ட எலிகளாக வளர்கின்றன. மற்றவை பதட்டம் நிறைந்தவையாக வளர்கின்றன. இந்த ஆராய்ச்சியின் நீட்சியாக, தற்கொலை செய்து கொண்டவர்களின் முளைகளில்  ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன;  குழந்தைப் பருவத்தில் மோசமாக நடத்தப்பட்டவர்களின் மூளைகளிலும், அத்தகைய சூழலில் வளராமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் மூளைகளிலும் எத்தகைய மரபணு வெளிப்பாட்டு மூலக்கூறுகள் கிடைக்கப்பெறுகின்றன எனும் கோணத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சிகள் குறித்த ஒரு சுவாரசியமான விவரணத்தை தி சயிண்டிஸ்ட் பத்திரிகையின் இணையதளத்தில் காணலாம்

செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர்?

mars-waterநிலவில் தண்ணீரின் தடயங்களை கண்டறிந்திருக்கிறோம். ”பல கோடி பேர் வறுமையில் வாடுகையில், நிலவு ஆராய்ச்சிக்கு பல கோடிகளா?”, என்று நெஞ்சு பொறுக்காது இந்தியாவை விமர்சித்த ஊடகங்களும், அறிவுஜீவிகளும், இன்று இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த இம்முயற்சியில் பங்குகொள்ளத் துடிக்கின்றனர்.  அதோடு  செவ்வாயிலும் தண்ணீர் இருப்பதற்கான சுவடுகள் தென்படுகின்றன.  அதிலும் 99% சுத்தமான தண்ணீர். செவ்வாய் கிரகத்திலும் மனித குடியேற்றம் நடைபெறுவது சாத்தியம்தானோ?

கலவியும் ஆயுதங்களும்

sex_terrorism1967/68-ல் செயல்பட்ட Red Army Faction எனும் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் யாவும் சிந்தாந்த நெருக்கத்தை தாண்டிய ஒரு மனப்பிறழ்வு தன்மை கொண்டவை என்று சொல்கிறது ”The Baader Meinhof Complex” எனும் ஜெர்மனிய திரைப்படம். பயங்கரவாதம் அழகியல் சார்ந்ததாகவும், கலவியும் பயங்கரவாதமும் எதிர்-நிலவுடமை சிந்தனைக்கு நெருக்கமானதாக இவ்வியக்கத்தினர் கருதியதாக கூறுகிறது. இந்த இயக்கம் குறித்து, பல வருடங்களுக்கு முன் வரலாற்றுப் புனைவாக வெளியான ஒரு புத்தகத்தை அடிப்படையாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் விமர்சனம் இங்கே.

இணையமும் மும்முனை சிக்கலும்

internet_bandwidthஉலகெங்கும் அதிகரித்துவரும் இணைய பயன்பாட்டினால், சேவை நிறுவனங்கள் தாங்கள் வாக்களித்தபடி பயனர்களுக்கு அவர்களுக்கு தேவையான வேகத்தை வழங்குவதில் பெரும் சிக்கலைச் சந்திக்கின்றனர். மென்மேலும் பணம் செலுத்தி தங்களுக்கான அலைவரிசையை அதிகப்படுத்தினாலும், சேவை நிறுவனங்களால் தங்கள் பயனாளர்களைத் திருப்தி செய்ய முடிவதில்லை. இதனால், சேவை நிறுவனங்களும், பயனர்களும், இணைய தள வியாபாரிகளும் தீவிர சிக்கலில் உழல்கின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வாக ஒரு புதிய தொழில்நுட்ப அமைப்பை பரிந்துரைக்கின்றனர் இவர்கள். எவ்வித மாற்றம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments are closed.