வாசகர் எதிர்வினைகள்

[stextbox id=”info” caption=”பி.ஏ.கிருஷ்ணனுடனான பேட்டி”]

பி.ஏ.கேயுடனான சேதுபதியின் நேர்முகம் அருமையாய் இருந்தது. Peanut protocol பற்றி சேதுபதி கேட்க, அவர் அது கற்பனை என்றாலும் உண்மை இன்னமும் மோசம் என்றிருந்தார். சமீபத்தில் படித்த இன்னொரு செய்தி பி.ஏ.கேவிற்கு ஒருவேளை ஆறுதல் தரக்கூடும் :).

அமெரிக்க உளவு ஆராய்ச்சியாளர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி பேசும் நூல் மாத்யு எய்ட் எழுதிய Intel Wars. இதில் அரசுத்துறையின் அபத்த சிகப்பு நாடாத்தனம் குறித்து அவர் சொல்லியிருப்பதைப்பாருங்கள் (முழுப்பேட்டி இங்கே ):

“The NSA was spending billions of dollars on new collection systems and vast amounts of computer hardware and software, and jamming it into its headquarters, but did not build additional power stations to keep the systems up and running,” he says. “So you had these embarrassing instances … where if you plugged in a coffee pot, you literally could knock off the electricity for an entire wing at NSA headquarters.”

The solution? Every office at NSA headquarters was assigned an “electricity monitor.”
“If you wanted to install a new percolator coffee pot in your office, they had to measure the amps that the coffee pot generated and then write up a formal request to install the coffee pot in their office, and then go through 27 approvals before some higher-up official signed it,”

Bureaucracy-யில் விளையும் அபத்தங்கள் உலகமெங்கும் பொதுதான் போலிருக்கிறது.

அருணகிரி.
[/stextbox]
[stextbox id=”info” caption=”காலவெள்ளத்தில் மறைந்த கலைஞர்கள்”]

அன்புள்ள சொல்வனம் எடிட்டர் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்த இதழில் வெளியாகியிருந்த பா.கோலப்பன் எழுதிய “காலவெள்ளத்தில் கரைந்துபோன கலைஞர்கள்” படித்தேன். மிக அருமையான கட்டுரை. கட்டுரையின் முடிவில் கண் கலங்கியது உண்மை. எப்பேற்பட்ட கலைஞர்கள்!!! இதைப் போன்ற எத்தனை கலைஞர்கள் இன்று யாருக்கும் தெரியாமல் மறைந்து போயிருக்கிறார்கள்…

உண்மையில் இந்தக் கட்டுரையையல்லவா இன்று இணையம் விவாதித்துக்கொண்டிருக்கவேண்டும்? இதைப் பற்றி ஏன் யாருமே ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ விவாதிப்பதில்லை? வொய் திஸ் கொலவெறி என்பதன் பல்வேறு வடிவங்களையும், அதை ஜெயச்சந்திரன் திட்டியதையும் குறித்தல்லவா பேசுகிறார்கள்?

ஆனால் ஆழமான விஷயங்கள் இப்படித்தான் அதிகம் கவனத்தில் வராமல் இருக்கும் என்பதும் வருத்தத்துக்குரிய உண்மை. சொல்வனம் இப்படி ஆரவராமில்லாமல் தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருப்பது மார்க்கெட்டிங் மட்டுமே செய்து ப்ராண்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நம் சூழலில் மிகப்பெரிய சேவை. இதன் பயன் இன்று உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நீண்டகாலத்தில் சொல்வனத்துக்கென்று அழியாத இடம் காத்திருக்கிறது. அது உங்கள் தொடர்ச்சியான செயல்பாடு மூலம் மட்டுமே சாத்தியம். அதற்கான உத்வேகம் உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்,
நிர்மல்

[/stextbox]