மகரந்தம்

மனித இயல்பு – புதிய பார்வை

human_nature_pastel_thமனித இயல்பு குறித்தான ஆராய்ச்சிகள் தற்காலத்தில் பல பரிமாணங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மனிதனை ஒரு “வெற்றுப் பலகை”-யாக அறியப்பட்ட கருத்தியல்களை உதறித்தள்ளி, ஒவ்வொரு மனிதனும் பிறக்கையிலேயே தனக்கென தனித்த குணாம்சங்களுடனே பிறக்கிறான் என்பது தான் சமீபத்திய வாதம். ஆனால் இப்போதும் கூட மனித உருவாக்கத்தைப் பொறுத்த வரை  “இயற்கை ” எதிர்  “வளர்ப்புமுறை” (Nature vs. Nurture) எனும் இருவேறு கருத்துக்களிடையே  மோதல் நடந்தவண்ணமே உள்ளது. கனடா நாட்டு விஞ்ஞானிகள் இந்த இரு பாதையை முற்றிலும் மறுக்காமல், அதே சமயம் முற்றிலும் ஏற்காமல், ஒரு மூன்றாவது கண்ணோட்டத்தை முன்வைக்கின்றனர். மனித இயல்பு குறித்து அறிய விரும்புபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது.


ஈரானில் பெண்ணியம்

Courtesy : freewebs.com
Courtesy : freewebs.com

மேற்குலகில், ஆண்களின் இருப்பையும்/அவசியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் பெண்ணியத்தின் “நான்காவது அலை” தொடங்கிவிட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்ணியம் குறிப்பிடப்படும்படியான வெற்றியை அடைந்ததுள்ளது. பெண்கள் மிகவும் அவதியுறும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்ணியத்தின் வெற்றி வெகு தொலைவில் இருந்தாலும், அதன் தேவை மிக அதிகம். ஈரானில் பெண்ணியக் குரலை பரவலாகக் கொண்டு சென்று, பெண் விடுதலைக்காகக் களத்தில் போராடும் ஒருவரைப் பற்றியது இக்கட்டுரை. இதில்  தற்போது ஈரானில் பெண்ணியத்தின் வீச்சையும், எதிர்காலத்தில் தான் பயணிக்க வேண்டிய திசை குறித்தும் கட்டுரையாளர் பேசுகிறார்.

நாஜி-களின் எழுச்சி?

Courtesy : spiegel.de
Courtesy : spiegel.de

ஜெர்மனிய சட்டங்கள் நாஜிகளின் செயல்பாடுகளை பெருமளவு கட்டுபடுத்தியுள்ள போதும், புதுயுக-நாஜிக்கள் வெவ்வேறு ரூபங்களில் அதை மீண்டும் உயிர்ப்பிக்க எத்தனிக்கின்றன. இதனால் நாஜிகளின் கதையாடல்களைச் சமூகத்திலிருந்து முற்றிலுமாகக் களையெடுக்க முடியவில்லை. புதுயுக-நாஜிகளைக் கட்டுபடுத்த வழிவகைகளற்ற ஜெர்மனிய சட்டங்களின் போதாமையையும், சமீபத்திய ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் இக் கட்டுரை.


மதமும் அபினும்

drug_traffickingநிச்சயமாக மார்க்ஸியம் குறித்த செய்தி அல்ல இது. போதை மருந்து கடத்தல்காரர்கள் மெக்ஸிகோவின் மிகப்பெரும் பிரச்சனையாகிவிட்டனர். மத அமைப்புகள் இவர்களை எதிர்த்தும், அதே சமயம் இவர்களுடன் ஒத்திசைவுடன் செயல்படுவது, மெக்ஸிகோ அரசிற்கு பெரும் தலைவலியை அளிக்கிறது. இந்த இரு பெரும் அமைப்புகளுக்கிடையேயான போக்குவரத்து சமீப காலங்களில் பல அவலங்களை நிகழ்த்தியிருப்பதை குறித்து பேசுகிறது இக்கட்டுரை.