வாசகர் எதிர்வினை

4545173-lg2

சுரேஷ்குமாரின் கட்டுரை விரிவாக நந்தலாலாவின் பிண்ணனி இசையை விவரிக்கிறது.  மேலும் பலரது ரசனையை விரிவாக்கும் முயற்சி. இசையை உள்வாங்கி ரசித்தாலும், அந்த அனுபவத்தை எழுத்தின் மூலம் பிறருடன் பகிர்ந்துகொள்வது அத்தனை எளிதானதல்ல.

அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.

சாணக்கியன்,
http://vurathasindanai.blogspot.com/

Dear Editor,

Arun Narasimman’s article on Alternate Life has been very informative and interesting. Guess this is the only article written so well in tamil on this subject. While reading this article it just struck me that, Michel Houlbecque in his Atomised novel discusses very briefly the possibility of organisms constructed of arsenium, among other weird atoms, through his protogonist. At the time of reading that novel, that sounded like a fantasy. Now after this Felisa findings it’s thrilling.

Ravi Natarajan’s article is also interesting.(though he seems to try to  imitate sujatha a bit more.) Srinivasan’s article on Nanjil is a well written tribute. As he says it’s so true that creative mind is always against establishment. Nanjil’s “sudia poo sudarrka” has few short stories (Letter to election commission) very strongly criticizing our politics, morally insensitive people. Actually, I was surprised that Sahitya Academy had not minded this criticism. Have they taken it in a good spirit? Hard to say. It’s still unexplainable.

Very glad to see a tamil magazine giving so much importance to science  and to strive for overall quality. Thanks.

-karthi

சென்ற இதழ் சொல்வனம் எனக்கு இன்ப அதிர்ச்சி. நானெழுதிய கடிதத்தையும் பொருட்படுத்தி அருண் நரசிம்மன் ஆர்சனிக் நுண்ணுயிரி குறித்து இவ்வளவு விரிவாகவும், ஆழமாகவும் எழுதியிருந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் இருந்தது. அருண் நரசிம்மனுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

அன்புடன்,
கே.வி.சாலமன்

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துக்கள். ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான எழுத்துக்கள். அவரது தமிழ் இனிது. நயம்பட உரைப்பார். வாழ்வின் மாரீசத்தனங்களோடு சமரசமில்லாத எழுத்துக்கள். காவலன் காவானெனின் கட்டுரைகள் அவருடைய சரளமான தமிழ்நடையால் உள்ளடக்கத்தால் என்னை மிகவும் கவர்ந்தவை. கூச்சலில்லாமல் சொல்லவிரும்புவதை சொல்லிப்போகும் தன்மை அவரின் எழுத்துக்களின் அடிப்படைக்குணம்.
பாராட்டுக்குரியது.

லாவண்யா

19.01.2011

அன்பின் தோழமைக்கு,

வணக்கம் . ‘ தாயார் சன்னதி ‘ படித்தேன் . இந்நடைச்சித்திரங்களின் பெரும்பாலானவற்றை ‘ வார்த்தை – சொல்வனம் ‘ இதழ்களின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து நான் வாசித்து வந்திருந்த போதிலும் கூட , அவற்றை ஒரு சேர , ஒட்டுமொத்த தொகுப்பாக வாசிக்கின்ற போது ஏற்படுகின்ற ஆனந்த அனுபவம் அலாதி சுகமானது . அதுவும் மண் மணக்கும் பேச்சு வழக்கு – நெல்லைத் தமிழில் வாசிப்பதற்கென்ன  கசக்கவா செய்யும் ?!

‘ நினைவுறுதல் ‘ என்பது எத்தகைய அற்புதமான சமாச்சாரம். அம்மாவை, நண்பர்களை, பள்ளிக்கூட டீச்சரை, வீட்டை, தெருவை, தெருமுனைக் கோயிலை…  ஏறக்குறைய 44 நடைசித்திரங்களையும் ஒரு சேர வாசித்து முடித்தபோது, திருநெவேலி வீட்டுத் திண்ணையில் சாய்ந்த படி , வெற்றிலைக்குப் பதிலாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிற குஞ்சுவின் சித்திரத்தை என்னுள் தீட்டி முடித்திருந்தேன் . குஞ்சு என்கிற சாமன்யனின் சிநேகம் உங்களுக்கு கிடைத்திராவிட்டால், நீங்கள் இத்தகைய நடைசித்திரங்களை தீட்டியிருப்பீர்களா என்கிற கேள்வியொன்றும் கூடவே என்னுள் எழுந்ததை என்னால் தடுக்க முடியவில்லை. அந்த வகையில் இச்சித்திரங்கள் அனைத்திலும் குஞ்சு வண்ணமாய் இருக்கிறார்.

நேற்று சாயங்காலம் தி.க.சி.யை சந்தித்த போது, ‘என்னய்யா, நம்மாளூ எப்படி எழுதியிருக்கிறார்? வாசிச்சு முடிச்சுட்டீங்களா ? உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்கய்யா… ?’ என்றார்.

‘ வாசிச்சாச்சு … வாசிச்சாச்சு … ? ‘

‘ பிறகென்னையா . எப்படியிருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே ? ‘

’வண்ணதாசன் , வண்ணநிலவன் , கலாப்ரியா , விக்ரமாதித்யன் நம்பி இவங்களெல்லாம் ஏகபோகமா அனுபவிச்சுக்கிட்டிருக்கிற திருநெவேலிங்கிற சொத்தை பாகம் பிரிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. நாலுல ஒரு பாகத்தையாவது மூணாவது தலைமுறையான ( தி.க.சி – வ.க – முதலாவது தலைமுறை / வண்ணதாசன் இன்ன பிறர்- இரண்டாவது தலைமுறை ) சுகாவுக்கு கொடுக்ணும்.’

உங்களது தொகுப்பை ஐயாவிடமிருந்து தான் வாங்கி வந்து படித்தேன். புத்தகத்தைப் பற்றி பேசும் போது, அதன் வடிவமைப்பையும் பற்றி சிலாகிப்பது அவசியமாகிறது. முன் அட்டை முதல் பின் அட்டை வரை நல்ல வடிவமைப்பு. சிரத்தை கண்கூடாக தெரிகிறது. வண்ணதாசன் சாருடைய அணிந்துரை அம்சமானது. ஏக்நாத்தின் ‘ பூடம் ‘ சிறுகதைத் தொகுப்பிற்கு பிறகு, தன் வளமான மொழியை விடுத்து அச்சு அசல் திருநெவேலி தமிழில் அவர் எழுதி தந்திருக்கிற அணிந்துரை இதுவாக தான் இருக்க வேண்டும். நான்கு நாட்களில் வள்ளி ஒவியம் வரைந்து தந்திருக்கிறார் என்றால் அது உண்மையிலேயே கின்னஸில் இடம்பெற வைக்க வேண்டிய சாதனை தான் . இறுதியாக சில வரிகளோடு முடித்துக் கொள்கிறேன்.

‘ தாயார் சன்னதியை வந்தடைந்திருக்கிறீர்கள் . அம்மையின் பரிபூரண ஆசி உங்களுக்கு எப்பொழுதுமே உண்டு ‘

நிறைய மகிழ்ச்சி . தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள் . ‘ மூங்கில் மூச்சு ‘ காற்றில் கரையாத இசையாக நெடுநாட்கள் ஒலிக்கட்டும் .

தோழமையுடன்,
வே.முத்துக்குமார்