வாசகர் மறுமொழி

mast2

திரு.ஹரன் பிரசன்னா அவர்களின் “வழி” கவிதை படித்தேன்
திருத்திக்கொள்ளும் வழிகள் பல இருந்தும் உணரவியலா மாந்தர்களைப் பற்றிய உண்மை சுடும் கவிதை,
வாழ்த்துக்கள் ப்ரசன்னா ,கவிதை மிக அருமை.
அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புள்ள சொல்வனம் ஆசிரியருக்கு,
வாழ்த்துக்கள்!
நான் கோயம்புத்தூரில் வசிக்கிறேன். உங்கள் இதழில் வெளியான “உலைகலனாகுமா தமிழகம்?” எனும் கட்டுரை படித்து பெருமகிழ்ச்சியடைந்தேன். நல்ல ஆய்வின் அடிப்படையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கட்டுரையாளர் மித்திலனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி
பி.வி.கோபால்

ஐயா
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, மிக அழகாக எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை. எத்தனை தகவல்கள். முற்றிலும் புதியது.நானும் காந்தளூர்ச்சாலை குமரி எல்லை என்று நினைத்திருந்தேன். முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆய்வு. நான் அறிந்த சரித்திரத்தின் படி திருவனந்தபுரம் என்பது வெகு சமீபத்திய நகரம். ஒரு நானூறு ஆண்டுகள் இருக்கலாம் எனபதுதான். அதிலும் வேணாடு அரசர்கள்தான் அதை தலைநகராக கொண்டு ஆண்டனர். உங்கள் கட்டுரையில் அதை பற்றி அதிகம் கூறாவிட்டாலும் அதைப் பற்றி இன்னும் தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்(கட்டுரையின் நோக்கம் அதுவல்ல என்றாலும்). ”விக்கி” காந்தளூர்ச்சாலையை இன்னும் திருவனந்தபுரம் அருகில் உள்ள இடம் என்று கூறுகிறது. அதை மாற்ற முடியுமா?
அன்புடன்
வி.கணேஷ்

மதிப்புடையீர்,
வணக்கம். திரு.எஸ். இராமச்சந்திரன் ஆய்வுகள் சிறப்பிற்குறியனவாம்,ஐயமில்லை. எனினும் சான்றார் என குறிக்கும் இடம் யாகையும் ஒரு குலத்தை குறிப்பதாக வகுப்பது நன்றறன்று.
தமிழக ஆட்சியாளர் அனைவரும் என்றும் ஒழக்கச்சீலர் என குறிப்பிட இடமில்லை. மேலும் தமிழக ஆட்சியாளர் உரிமை என்றும் தங்களுக்குறியன என குறிப்பெறா ஒரு குலக்குறிப்பும் தமிழ்க சாதியவான் வரலாற்றில் இல்லை. மற்றவருக்குக் கற்றுத்தருதல் சத்திரிய தருமம் அல்ல. அடிப்படையில் காந்தளூர் பற்றியன ஐயத்துக்குறியன.
தமிழக வரலாறு எடுப்பார் கைப்பிள்ளையாகவே உள்ளது வருந்ததக்கது. கி.மு.3 நூற்றாண்டில் ஆட்சியாளர் தமக்கு என ஓர் மதத்தை கற்பிக்கத்தொடங்கிய காலமுதலே அரசனின் கவனம் அறநிலைத்தின் பால் முழுவதும் திரும்பியது தான் என்ன செய்தாலும் தனக்கு மேல் ஒர் குலம் இருப்பது உறுத்தியது போலும். விழைவு சமண பெளத்த மதங்கள் தோற்றம்(அதற்கு முன்னர்
அறநிலைத்தில் மிகப்பெரும் பொருள் குவிப்பிருந்ததாக எனக்கு தெரிந்த அளவிலில்லை).பின்னர் அந்த டொத்தின் பால் எழுந்த அதிகார போட்டி அனைவரின் மனத்திலும்(அனைத்துக் குலத்தினர்) மத்தியிலும் எழுந்ததன் விழைவு களப்பிர் ஆட்சி தென்னிந்தியவில். வடக்கே கொஞ்சம் முன்னர் சுங்கமித்திரர் (பார்ப்பன தருமம் அரசு ஆள்வதை ஒப்பவில்லை).ஆக பொருள் ஆசையே அரசாட்சியின் நோக்கமாக ஆன பின்னர் வீரம் அறம் (நீதி) இரண்டும் பொருள் (நிதி) வசம் . பின்னர் நிதி(பொருள்) அரசன் ஆனது, அனைத்தும் அதன்பால் இயங்கத்தொடங்கியது.
கி.மு.2 ம் நூற்றாண்டில் சத்திரியன் பொருள் அனைத்துக்கும் உரியன் எனக்கொள்ளாலாம். நால்வருணமும் பொருள்பால் சென்றது. மதம் கடவுள் அனைத்தும் அதற்கொன தகவுச்செய்யப்பட்டன. ஆட்சி என்பதே பொருளீட்டுதல் ஆகி பின்னர் பொருள் காவல் அரச மாண்பு ஆனது. பொருள் உள்ளோர் அரசைச்செலுத்தினர். மதம், தன் பொருளைக்காக்க தவறின் மதம் மாறி பொருள் காத்தனர். பொருள் காத்தோர் அரசர் என்ற இலக்கணத்தின் கண் அனைவரும் அரசர்(சனநாயகம்) ,பொருள் அனைத்தும் அரசு சார்ந்தது(பொதுவுடமை).இப்படி வீரம், அறம் மற்றும் அரசு அனைத்தும் நிதி (பொருள்) வசம் ஆனது.
சத்தரியன் மட்டும் அல்ல அனைத்தும் நிதியின்(பொருளின்) அடிமையான பின் இங்கு யார் சத்திரியன் என்ற வினா வேறு! சத்திரியன் என்பதற்கு சந்தர்ப்பவாதமே அடிப்படை. வீரம் விழைந்த பாண்டி அரசர் தம் உயிர் காக்க சிவகங்கை புகுந்தார் இச்சுலமியப்படையெடுப்பில். பின்னர் சிவகெங்கை வெள்ளையர் வசம். வீரம் அறம் என்பது என்றும் ஏட்டுக்கு மட்டுமே, வலுத்தான் கண் சாய்தலெ வீரம் என்று ஆன பின் வீரம் பற்றி என்னவென்பது!.
(குறிப்பு : 12 ம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்க அறநிலையங்கள்(கோவில் மற்றும் மடங்கள்) கோளகி மட பாசுபத சைவர் வசம் இருந்ததாக பேரா.சி.பத்மநாதன்(தமிழக பேராசிரியர் அல்லர்) குறிப்பிட்டுள்ளார்)
பெளத்த மடச்செல்வச் செழிப்பே பிற்பாடு அனைத்து மத மடத்துக்கும் ஊற்றுகண். பாவம், பிறவி பயன் எல்லாம் எம் வசம் விட்டால் வீடு பேறு என செப்பிய மதத்தைவிட்டு, இறைவன் பாவம் தாங்குபவன் ஆகுகின்றான், உன் வருமானத்தில் 10% கொடுத்தால். மேலும் இறைவனுக்காக கொல் மாற்று மதத்தினரின் ஆண்மையை தனிமையில் அறியா பெண்மையை கவரு!( பிறன் மனை நயவான்மைக்கு இலக்கணம்).இப்படிச்சொல்லும் சமயம் தான் சுயமரியாதை தந்தை சான்று அளிக்கும் சமயம்! இன்றும் மதச்சார்பற்றவர் சமயம் !! (இந்தியா மதச்சார்பற்ற அரசுதான் என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம்).
விசயத்திற்கு வருவோம். பொருளீட்டுதல் வைசிய நியதி 2200 ஆண்டுகால அரச நியதியாக மாற்றியுள்ள நிலையில் யார் சத்திரியர் என்பது நகைப்புக்குரியனவாம்!?.
நன்றி
சுந்தர் ராஜன்