ஹம்பியைக் குறித்ததொரு புகைப்படக் கட்டுரையை அதன் வரலாற்றோடு சேர்த்து எழுதினேன். அதை ஒரு பிரபலமான புகைப்படப் பத்திரிகைக்கும் அனுப்பி வைத்தேன். அவர்கள் அந்த வரலாற்றையெல்லாம் நீக்கி விட்டு, புகைப்படத் தொழில்நுட்பத்தைக் குறித்து எழுதித் தருமாறு கேட்டார்கள். ஹம்பியின் வரலாற்றை நீக்கிவிட்டு அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கவே தேவையில்லை என்று நிர்தாட்சயண்மாக மறுத்து விட்டேன்.
மேலும் படிக்க...»குஸ்திக் கலை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலத்தில் தாம் மல்லராக இருந்ததாகப் பிறரிடம் சொல்லிக்கொள்வது அவருக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய கம்பீரமான கலைவடிவம் ஒன்றை மறந்துவிட்டு, தளுக்கு நிறைந்த நகரமாக இன்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மைசூரில், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் நான் பேசிய சந்தர்ப்பம் அது.
இந்தப் பரிசோதனைகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பின: எறும்புகளால் காற்றில் வரும் ஓசைகளைக் கேட்க முடியுமா? அல்லது பியானோவைப் போன்ற திடப் பொருள்களின் வழியாக உருவாக்கப்படும் அதிர்வுகளை மட்டுமே அவற்றால் உணரமுடியுமா? அவை தங்களுக்குள் ‘பேச’, ஒலிகளை மேற்கண்ட எந்த வழியிலேனும் எந்த அளவுக்கு உபயோகிக்கின்றன? இவை பற்றிய உண்மைகளை நாம் இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.
அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.