நாட்டுப்புறக்கலை பகுதியில் பிற ஆக்கங்கள்
நாட்டுப்புறக்கலை »
Kalari Heritage and charitable Trust சார்பில் மணல்வீடு இதழின் ஆசிரியரும் நண்பருமான ஹரிகிருஷ்ணன் .6.1.2013 அன்று எலியட் பீச் அருகில் சந்திரலேகா ஸ்பேசஸ் என்ற இடத்தில் அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் வாலிவதம் தோற்பாவைகூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.[...]கூத்தின் முதல் சுவாரசியம் கட்டியக்காரன்தான். கட்டியக்காரன் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத் தருவான். ஊர்பிரமுகர்கள் பற்றி, சுற்று வட்டாரத்து சம்பவங்கள் குறித்து நிறைய நகைச்சுவையுடன் பேசத் துவங்கி மெல்ல கூத்திற்கு வருவான். கூத்து துவங்கும்.
நாட்டுப்புறக்கலை »
“வாரானே சுடைலைக் கண்ணு, சுடலைக் கண்ணு….நாங்குநேரி தான் கடந்து, தான் கடந்து” “பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்” என்று உடையும் குரலில் கம்மலுடன் மத்திம காலத்தில் அப்பாடல் ஒலிக்கும். அதற்கு ஒத்திசைந்து வாசிக்கப்படும் மகுடம் (கையால் வாசிக்கப்படும் தப்பு). பாடலைப் பாடும் அண்ணாவி அதே வரிகளைத் துரித காலத்தில் பாடும் போது, சர்வலகுவாக மிருதங்கம் வாசிப்பதைப் போல் சொற்களை விளாசித் தள்ளுவார்கள் மகுடம் வாசிப்பவர்கள்.ஏதோ ஒன்று நம்மைப் போட்டு உலுக்கியது போன்ற உணர்வுடன், ஒலி வரும் பாதையை நோக்கி செல்வதற்கு ஆசை எழும்.




