எதிர்வினை பகுதியில் பிற ஆக்கங்கள்
எதிர்வினை »
எதிர்வினை, தத்துவம் »
நம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், விடுபெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.
எதிர்வினை »
பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் காலடியில் விழுந்து சேவகம் செய்கின்றன என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் காஸ்ட்ரோ ஒப்பற்ற தலைவனாக ஏற்றுகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். அது எப்படி என்று விளக்கலாம். இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒருபக்கம் அமெரிக்காவின் காலடியில் இருந்துகொண்டே மறுபுறம் காஸ்ட்ரோவையும் ”ஒப்பற்ற தலைவனாக” ஏற்றுகொண்டுவிட்டனவோ என்னவோ.
எதிர்வினை »
இசைச்சிறப்பிதழ் என்று சொல்லாமலேயே கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, அமெரிக்க இசை, திரையிசை எனப் பலவகை இசையைப் பற்றியும் சத்தமில்லாமல் ஒரு சிறப்பிதழாக வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள். கட்டுரைகளை ஏனோ தானோவென்று வெளியிடாமல், தேவையான படங்கள், வீடியோக்கள், ஒலித்துணுக்குகள் தந்து ஒரு புதிய அனுபவத்தையே அள்ளித்தரும் உங்கள் சிரத்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.
எதிர்வினை »
சில துயரங்கள் என்ன செய்தாலும் நம்மை அவ்வளவு சுலபமாக கடந்து போவதில்லை என்பது மிக நிதர்சனம். ‘Time will heal’ என்பது சில இடங்களில் பொய்த்து விடுகிறது. ‘அதுவாய் கடந்து போனதில்லை’ என்று கூற கற்பனை போதாது. ஆழ்ந்த அனுபவமோ அல்லது தீர்கமான சிந்தனையோ வேண்டும். அதுவாக கடந்து போகாததால் அதை கடத்த மனிதன் எவ்வளவு பாடு பட வேண்டும் என்ற ஆதங்கமும் இந்த வரியில் சுமையாக தெரிகிறது. இந்த வரிகளுக்கு அப்புறம் ஒரு பெருமூச்சோ அல்லது ஒரு சொட்டு கண்ணீரோ எனக்கு தெரிகிறது.
எதிர்வினை, தீவிரவாதம் »
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்த பல காரணங்கள் இருக்கலாம்- அமெரிக்காவின் அழுத்தம் உட்பட. ஆனால் அவை எல்லாவற்றிலும் நம் தேசியப்பாதுகாப்பு முதன்மையாய் இருக்க வேண்டும். இதைத்தான் இந்தியா சரியாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்காமல், பாக்- அரசே தெளிவாக ஆதரித்து வளர்த்து விடும் கொலைக்கும்பல்களை ஒழிக்காமல் காஷ்மீரையோ வேறு எந்தப்பிரச்சனையையோ பேச முற்படுவது என்பது, மென்மையாகச்சொன்னால் - மடத்தனம்.




