முகப்பு » தொகுப்பு

நிகழ்ச்சிக் குறிப்புகள் பகுதியில் பிற ஆக்கங்கள்

இலக்கியம், நிகழ்ச்சிக் குறிப்புகள் »

காற்றின் சிறகினிலே… - சாரல் விருது விழா

நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்.

இலக்கியம், நிகழ்ச்சிக் குறிப்புகள், புத்தக அறிமுகம் »

வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும், புத்தக வெளியீட்டு விழா

“வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்தத் தொகுதி அவரது பங்களிப்பை அனைத்து கோணங்களிலும் அணுகி, அதன் நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறது. தமிழ் பண்பாட்டின் ஐம்பது ஆண்டு கால விமரிசனக் குரலை அதன் எதிர்வினைகளின் வழியாக அடையாளப்படுத்தும் இந்த நூல் இவ்வாண்டு மட்டுமல்ல, தமிழில் இதுவரை வெளிவந்த எந்த நூலுக்கும் இணையான முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இதைத் தொகுத்த திரு பா.அகிலன், திலீப் குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியவர்கள் நம் நன்றிக்குரியவர்கள்.

நிகழ்ச்சிக் குறிப்புகள் »

சிட்டியின் நூற்றாண்டு விழா – அன்பர் வீரராகவனின் முயற்சி

அங்கு வந்திருந்தவர்கள், எல்லோருமே சிட்டியைக் குறித்தும் வீரராகவனனைக் குறித்தும் சிறப்பாகப் பேசினர். திரு சீனிவாசராகவன், வீரராகவன் ஆரம்பத்தில், பொருளாதார ரீதியாக மிக்க சிரமப்பட்டிருந்தாலும் மனம் தளராது, பழைய பத்திரிககைளை விற்பனை செய்து கொண்டு, சென்னையில் வாழ்ந்த விதத்தையும் அப்போதும் அவர் மனம் தளராது மனைவியுடன் கடுமையாக உழைத்து முன்னேறியதையும் விவரித்தார்.