முகப்பு » தொகுப்பு

உலக அரசியல் பகுதியில் பிற ஆக்கங்கள்

உலக அரசியல், பன்னாட்டு உறவுகள் »

சீறும் சீனத்து டிராகன்

சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உலக அரசியல் »

ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்

ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.

உலக அரசியல் »

அமெரிக்க-பாகிஸ்தான் உறவு - எங்கே செல்லும் இந்தப்பாதை?

சொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான்.

உலக அரசியல், சமூகம் »

பொறாமை எனும் விஷம்

இன வாதக் கோட்பாடு, தங்களைக் குறித்து சந்தேகமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த பலவீனமான ஜெர்மானியர்களை, தாங்கள் ஒரு வலுவான மற்றும் உயர்ந்த அறிவுஜீவிகளாகக் கற்பனை செய்துகொள்ளும் கூட்டத்தினராக மாற்றியது. இனவாதம் என்பது பலவீனத்தால் உந்தப்பட்டு மந்தைக்குள் சென்று சேர்வதன்றி வேறல்ல.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

சீனா: பலவித இடப்பெயர்வுகள்

1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கிறது. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர் தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

சீனா - சவால்களும் குற்றச் செயல்களும்

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.

உலக அரசியல், மொழிபெயர்ப்பு »

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… - இறுதிப் பகுதி

நான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

சீனா - கல்வியும் இடப்பெயர்வும்

சீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

சீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு

சீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது.

உலக அரசியல், மொழிபெயர்ப்பு »

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

செயற்கை கிராமங்கள்

பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

சீனா- பாரம்பரியக் கிராமங்கள்

மிகவும் ஏழ்மையிலிருக்கும் கிராம மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளியூருக்கோ நகரத்துக்கோ போக பயணச்செலவுக்கான தொகை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் விவசாயம், சிறு தொழில், சிறுபண்ணை போன்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பயணச்செலவுக்கானதைச் சேர்த்துக் கொண்ட பிறகோ, கடன் வாங்கிக் கொண்டோ வெளியூருக்கு வேலை வாய்ப்பும் அதிக வருவாயும் தேடிப் போவோர் தான் அதிகம்.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

பகுதி 04 - பெருகிப் பிதுங்கும் நகரங்கள்

சுற்றுச் சூழல் நோக்கில் சீன நகரம் ஒன்றும் அத்தனை கவர்ச்சியாக இல்லை. எங்கு பார்த்தாலும் சிமெண்ட் வாசனையுடன் புதிதுபுதிதாக முளைக்கும் கட்டடங்களுக்கிடையில் நெரிசல் மிகுந்த அடுக்ககப் பேட்டைகளும், பொலிவிழந்து பல்லிளிக்கும் தொழிற்சாலைகளும், புகையும் தூசுமான காற்றும் நகரங்களில் ரசிக்கும்படி இல்லை என்பதே சூழியல் வல்லுனர்களின் கருத்து.

சீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »

பகுதி 03 - செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்

1997ல் 12 மிலியன் பேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்ளூர் ஆசாமிகள் செய்யத் தயங்கிய/மறுத்த ஆபத்தும், கடின உழைப்பும், அழுக்கு நிறைந்ததுமான கட்டட வேலைகளையும் மற்ற பல சேவைகளையும் நகரில் இவர்கள் மேற்கொண்டனர். இதனாலேயே கட்சியும் நகரவாசிகளை ‘கிராமவாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள’ச் சொன்னது.

உலக அரசியல் »

அரபு நாடுகளில் புரட்சி - ஜனநாயகம் சாத்தியமா?

பேரரசின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் மன்னன் என்கிற ஒற்றைப் பேரதிகார மையம்தான் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டிக்கொண்டே வந்திருக்கிறது. சர்வாதிகார அமைப்பில் இரக்கம் மிகுந்த சர்வாதிகாரி இருக்கும்வரை படகு நன்றாகச் செல்லலாம். ஆனால் அது எளிதில் கவிழ்க்கப்படக்கூடிய நிலையற்ற ஒரு அமைப்பு. மட்டுமன்றி, பல சர்வாதிகாரிகளுக்கு மக்களின் அதிருப்தி தெரிவிக்கப்படும் ஊடகப் பாதைகள் மூடப்பட்டு விடுகின்றன. எனவே தவறான பாதையில் படகு சென்றாலும் சரியான நேரத்தில் சரியான வழியில் திருத்திச்செலுத்துவது கடினமாகிறது. அவசர நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா தோற்றவுடன், தனது நண்பர் குஷ்வந்த் சிங்கிடம் “இவ்வளவு கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் நடக்கின்றன என்று ஏன் என்னிடம் ஒருவருமே சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, குஷ்வந்த் சிங் சொன்ன பதில் “சொல்லக்கூடிய அத்தனை வாய்களையும்தான் நீங்கள் அடைத்து விட்டிருந்தீர்களே?”